தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனத்தில் முதுகலைப் பட்டம் படிக்கலாம்!



அட்மிஷன்

மத்திய மின்துறை அமைச்சகத்தால் 1993ம் ஆண்டு ஹரியானாவில் தேசிய மின்சக்தி பயிற்சி(National Power Tarining Institute) நிறுவனம் தொடங்கப்பட்டது. இது சர்வதேச அளவில் இயங்கும் மின்துறை பயிற்சி நிறுவனங்களிலேயே முதன்மையானது ஆகும். இந்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இந்நிறுவனமானது நெய்வேலி, துர்காபூர், நாக்பூர், பெங்களூரு, ஃபரிதாபாத், கௌஹாத்தி, நங்கல் என இந்திய அளவில் இயங்கும் ஏழு அரசு மின்சக்தி பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து மின்சக்தி துறையில் ஐந்து வகையான ஒரு வருட முதுகலைப் பட்டப்படிப்புகளை ஆண்டுதோறும் வழங்கிவருகிறது. அதன்படி 2018-19 ஆண்டிற்கான ஒரு வருட முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை இந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

வழங்கும் படிப்புகள்: மின்துறை கல்விநிறுவனங்களில் முதன்மையான இத்தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனத்தில் Power Point Engineering, Smart Grid Technologies, Power System Operation, Energy Market Management, Renewable Energy & Grid Interface Technologies போன்ற ஐந்து வகையான  ஒரு வருட முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

இப்படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் பெங்களூரு, நெய்வேலி, துர்காபூர், நாக்பூர், ஃபரிதாபாத், கௌஹாத்தி, நங்கல் ஆகிய இடங்களில் இயங்கும் இந்திய அரசின் பயிற்சி நிறுவனங்களில் ஒரு வருட கால பயிற்சியை பெறுவர்.கல்வித் தகுதி: முதுகலைப் பட்டப்படிப்பில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்போகும் துறைகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி பெற்றிருப்பது அவசியம். Power Point Engineering துறையைத் தேர்ந்தெடுக்க விரும்பும் மாணவர்கள், மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ்/சி&ஐ/பவர் எஞ்சினியரிங் ஆகிய துறைகளில் இளங்கலைப் பட்டத்தில் 60% மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் Smart Grid Technologies, Power System Operation, Energy Market Management, Renewable Energy & Grid Interface Technologies ஆகிய துறைகளைத் தேர்ந்தெடுக்க விரும்பும் மாணவர்கள் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் தவிர்த்து மேற்சொன்ன அனைத்து துறைகளில் ஏதாவது ஒரு துறையில் இளங்கலைப் பட்டத்தில் 60% மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இளங்கலையில் கடைசி வருட படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
 
விண்ணப்பிக்கும் முறை: சர்வதேச தரத்தில் மின்துறை பொறியாளராக விரும்பும் மாணவர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.2000ஐ செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 8.6.2018.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் CET-2018 எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு அனுமதிக்கப்பட்டு அதில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் கவுன்சலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். மேலும் இந்நுழைவுத் தேர்வானது ஜூன் 24 2018, அன்று பெங்களூரு, நெய்வேலி, துர்காபூர், நாக்பூர், ஃபரிதாபாத், கௌஹாத்தி, நங்கல் ஆகிய ஏழு இடங்களில் இயங்கும்
இந்திய மின்சக்தி பயிற்சி நிறுவனங்களில் நடத்தப்படும்.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.npti.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!

தமிழக வருமான வரித்துறையில் ஆய்வாளர், வரி உதவியாளர், எம்.டி.எஸ். பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழக விளையாட்டு வீரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 30 (தமிழக விளையாட்டு வீரர்கள்)
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Inspector of Income-tax - 07
சம்பளம்: மாதம் ரூ.9,300 முதல் 34,800 + தர ஊதியம் ரூ.4,600 (PB-2)
பணி: Tax Assistant - 11
கல்வித் தகுதி: இளங்கலைப்
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Multi-Tasking Staff - 14
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2.400(PB-1)
வயதுவரம்பு: 01.04.2018 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டு டிரயல் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnincometax.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.06.2018
மேலும் சம்பந்தப்பட்ட விளையாட்டுத்துறைகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2018/5/21/image1_2018-05-195aff7c8e2693c.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

-துருவா