கால்நடை மருத்துவப் பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை!அட்மிஷன்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1989 இல் இது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து பிரிந்து தனிப் பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்டது. சென்னை மாதவரத்தில் அமைந்துள்ளது.தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (Tamil Nadu Veterinary and Animal Sciences University), கால்நடை மருத்துவம், விலங்குகள், உணவு அறிவியல் துறைகளில் பல்வேறு படிப்புகளைத் தருவதுடன் இத்துறைகளில் ஆய்வுகளையும் மேற்கொள்கிறது.

இப்பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள உறுப்புக் கல்லூரிகள்

1. சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி - சென்னை (Madras Veterinary Collage, Chennai - 600 007)
2. கால்நடைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் - நாமக்கல் (Veterinary Collage and Research Institute, Namakkal - 637 002)
3. கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் - திருநெல்வேலி (Veterinary Collage and Research Institute, Tirunelveli - 623 308)
4. கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் - ஒரத்தநாடு, தஞ்சாவூர் (Veterinary College and Research Institute, Orthanadu - Thanjavur - 614 625)
5. உணவு, பால் தொழில்நுட்பக் கல்லூரி - கோடுவளி, சென்னை (College of Food and Dairy Technology, Koduvalli, Chennai - 600 056)
6. கோழி உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரி - ஓசூர் (College of Poultry Production and Management, Hosur - 635 110) இப்பல்கலைக்கழகத்தின் கீழே, அனிமல் நியூட்ரிஷியன் மற்றும் சென்ட்ரல் ஃபீட் டெக்னாலஜி உள்ளிட்ட 11 ஆய்வு நிலையங்களும், Translational Research Platform for Veterinary Biological - TRPVB உள்ளிட்ட 17 ஆய்வகங்களும், ஒரு Centre for Stem Cell Research and Regenerative Medicine, இரண்டு Ethno Veterinary Herbal Training and Research Centres, ஒரு Veterinary University Training and Diagnostic Centre (VUTDC), இருபது Veterinary University Training and Research Centre (VUTRC), மூன்று Krish Vigyan Kendras - KVK, மூன்று விவசாயிகள் பயிற்சி நிலையங்கள் (Farmers Training Centres FTC), ஒரு Agricultural Technology Information Centres உள்ளன.
வழங்கப்படும் படிப்புகள் மற்றும் இடங்களின் எண்ணிக்கை

1. கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடைப் பராமரிப்பு பட்டப்படிப்பு - BVSC & AH - 360 இடங்கள். (சென்னை - 120, நாமக்கல் - 80, திருநெல்வேலி - 80, ஒரத்தநாடு - 80) -5½ ஆண்டுகள்
2. உணவுத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு - B.Tech. Food Technology சென்னை(கோடுவளி) - 40 இடங்கள் - 4 ஆண்டுகள்
3. கோழியின தொழில்நுட்பப் பட்டப்படிப்பு - B.Tech. Poultry Technology - சென்னை - 40 இடங்கள் - 4 ஆண்டுகள்

4. பால்வளத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு- B.Tech. Dairy Technology  சென்னை (கோடுவளி) 20 இடங்கள் - 4 ஆண்டுகள்

பி.வி.எஸ்.சி அண்ட் ஏ.ஹெச். படிப்புகளில் 15 விழுக்காடு இடங்கள் வெர்ட்டினரி கவுன்சிலாலும், பி.டெக் (ஃபுட் டெக்னாலஜி) 15 விழுக்காடு இடங்கள் ஐ.சி.ஏ.ஆர் (ICAR) வழியாகவும் நிரப்பப்படும்.

விண்ணப்பிக்கத் தகுதி: தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களாக இருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு முதல் +2 வரை தமிழ்நாட்டுப் பள்ளிகளில் படித்தவர்கள் நேட்டிவிட்டி சர்ட்டிபிகேட் இணைக்கத் தேவையில்லை. தமிழ்நாட்டை விட்டு வெளியே இந்த வகுப்புகளைப் படித்த தமிழ்நாட்டு மாணவர்கள் நேட்டிவிட்டி சர்ட்டிபிகேட் இணைக்க வேண்டும்.

அகாடமிக் ஸ்டீரிமில் படித்தவர்கள், BVSC & AH படிப்புக்கு விண்ணப்பிக்க உயிரியல் அல்லது விலங்கியல், தாவரவியலில் பொதுப்பிரிவினர் 60 விழுக்காடும், பி.சி., பி.சி.(எம்) 60 விழுக்காடு, எம்.பி.சி., டி.என்.சி 55 விழுக்காடும், எஸ்.சி., எஸ்.டி/எஸ்.சி.(ஏ) குறைந்தபட்ச தேர்ச்சியும், வேதியியல், இயற்பியல் பாடங்களில் முறையே 60, 60, 55 விழுக்காடு தேர்ச்சியும், இரண்டையும் சேர்த்து முறையே 70, 65, 60 விழுக்காடு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

வொக்கேஷனல் ஸ்டீரிமில் படித்தவர்கள், உயிரியலில் முறையே 60, 60, 55 விழுக்காடு தேர்ச்சியும், அக்ரிகல்சுரல் பிராக்டிஸ், பவுல்ட்ரி, டெய்ரியில் முறையே 60, 60, 55 விழுக்காடு தேர்ச்சியும், இரண்டையும் சேர்த்து 70, 65, 60 விழுக்காடு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

பி.டெக். (ஃபுட் டெக்னாலஜி, பவுல்டரி டெக்னாலஜி, டெய்ரி டெக்னாலஜி) படிப்பிற்கு அகாடமிக் ஸ்ட்ரிமில் மட்டும்தான் விண்ணப்பிக்க இயலும்.
கணிதத்தில் குறைந்தபட்சம் பொதுப்பிரிவினர் 60, பி.சி/பி.சி.(எம்)60, எம்.பி.சி/டி.என்.சி 55, எஸ்.சி/எஸ்.சி.(ஏ)/எஸ்.டி குறைந்தபட்ச தேர்ச்சியும்,
உயிரியலில் முறையே 60, 60, 55 விழுக்காடு தேர்ச்சியும், வேதியியல், இயற்பியல் இரண்டையும் சேர்த்து முறையே 60, 60, 55 விழுக்காடு தேர்ச்சியும், இவற்றின் கூடுதலில் முறையே 70, 65, 60 விழுக்காடு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

எஸ்.சி/எஸ்.சி.(ஏ)/எஸ்.டி பிரிவினர் மூன்று முறைக்குள்ளும், மற்ற பிரிவினர் இரண்டு முறைகளுக்குள்ளும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.சி.(ஏ)/எஸ்.டி பிரிவினர் வயது வரம்பு இல்லை. மற்ற பிரிவினர் 21 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் பிள்ளைகள், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள், விளையாட்டு வீரர்கள் இவர்கள் தங்களுக்கான சலுகைகளை இணையத்தளம் வழியாக அறிய வேண்டும்.

தேர்வு செய்யும் முறை: பன்னிரண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் கட் ஆஃப் முறையில் தரவரிசைப் பட்டியல் www.tanuvas.ac.in என்ற இணையத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.tanuvas.ac.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 6.6.2018.
விண்ணப்பக் கட்டணமாக பி.வி.எஸ்.சி./ஏ.ஹெச் படிப்புகளுக்கு எஸ்.சி/எஸ்.சி.(ஏ)/எஸ்.டி பிரிவினர் ரூ. 350, மற்றவர் ரூ.700, பி.டெக். படிப்பிற்கு முறையே ரூ.600, ரூ.1,200 செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் பூர்த்திசெய்து விண்ணப்பக் கட்டணம் செலுத்திய பின்னர் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து தலைவர், சேர்க்கைக் குழு (இளநிலைப் பட்டப்படிப்பு), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை-600 051 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் சென்று சேர கடைசி நாள் 11.6.2018.மேலும் முழுமையான விவரங்களுக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

வசந்தி ராஜராஜன்