தமிழக அரசில் எஞ்சினியரிங் பட்டதாரிகளுக்கு வேலை!



வாய்ப்பு

330 பேருக்கு வாய்ப்பு!


தமிழக அரசில் பல்வேறு துறைகளிலும் உள்ள  காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியில் டி.என்.பி.எஸ்.சி., என்று சொல்லப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டுவருகிறது. தற்போது பொறியாளர்களுக்காக நடத்தப்படும் கம்பைண்டு எஞ்சினியரிங் சர்வீசஸ் தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நீர்வள ஆதார மையம் மற்றும் பொதுப்பணித்துறை பிரிவுகளில் உள்ள பணியிடங்களுக்கான ஆட்களைத் தேர்வு செய்ய ஏதுவாக இருக்கும்.

காலியிட விவரம்: சிவில் சார்ந்த பதவிகளில் வாட்டர் சர்வீசஸ் போர்டில் 71 இடங்களும், பில்டிங்ஸ் பொதுப்பணித்துறையில் 23 இடங்களும், நெடுஞ்சாலைத்துறையில் 165 இடங்களும், ரூரல் டெவலப்மென்ட் அண்டு பஞ்சாயத்து ராஜ் துறையில் 29 இடங்களும், எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் சார்ந்த பி.டபிள்யூ.டி.யில் 42 இடங்களும் என மொத்தம் 330 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படும் என்று தெரிகிறது.

வயதுவரம்பு: இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. பொதுப்பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பி.இ. அல்லது பி.டெக். படிப்பில் சிவில் அல்லது எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங்கில் படித்திருக்க வேண்டும். தேர்வு மையங்கள் : சென்னை, சேலம், நாகர்கோவில், மதுரை, தஞ்சை, காஞ்சிபுரம், கோவை, சிதம்பரம், காரைக்குடி, திருச்சி, வேலுார், புதுக்கோட்டை, நெல்லை, ராமநாதபுரம், ஊட்டி ஆகிய மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படும்.

தேர்ச்சி முறை : முதலில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இது இரண்டு தாள்களைக் கொண்டது. முதல்தாள் பாடப்பிரிவை மையமாகக்கொண்டு இருக்கும். இரண்டாவது தாள், பொது அறிவு. இரண்டு தேர்வும் மூன்று மணிநேரம் நடக்கும். எழுத்துத் தேர்வு முடிவுகளுக்குப்பின், நேர்காணல் வாயிலாக இறுதித்தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம்  ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். பதிவுக் கட்டணம் ரூ.150. தேர்வுக் கட்டணம் ரூ.200.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.3. 2018.
மேலும் விவரங்களுக்கு : www.tnpsc.gov.in