BHEL நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பணி!918 பேருக்கு வாய்ப்பு!



வாய்ப்பு

திருச்சியில் செயல்பட்டுவரும் மத்திய அரசின் மின்சார அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனம் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 918 தொழில் பழகுநர் (அப்ரண்டீஸ்) பயிற்சி இடங்களுக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறைவாரியான காலியிடங்கள் விவரம்

1.Fitter     330
2.Welder (G&E)    240
3. Turner   25
4. Machinist   35
5. Electrician 75
6. Wireman   20
7. Electronic Mechanic  15
8. Instrument Mechanic  20
9. AC & Refrigeration  20
10. Diesel Mechanic  15
11. Draughtsman (Mechanical)  15
12. Sheet Metal Worker  15
13.Programme System Administration Assistant  50
14. Forger & Heat Treater   10
15. Carpenter  15
16. Plumber  15
17. MLT Pathology  03
 
கல்வித்தகுதி: விண்ணப்பிக்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.துவரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு 1.4.2018 தேதியின்படி வயது 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.bheltry.co.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.3.2018
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு, சலுகை போன்ற முழுமையான விவரங்களை www.bheltry.co.in என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.