அடடே...ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!



மொழி

I am waiting Vs I have been waiting


அலுவலகப் பணியில் ஆழ்ந்திருந்த ரகுவை நோக்கி வந்த அகிலா, ‘‘ஒரு சந்தேகம் எனக்கு. ‘I am waiting’ என்பதற்கும் ‘I have been waiting’ என்பதற்கும் ‘நான் காத்துக்கொண்டிருக்கிறேன்‘ என்றுதானே அர்த்தம். Is there any difference sir?’’ எனக் கேட்டாள். அதற்கு ரகு, ”Sure Akila. There is. உதாரணத்துக்கு நீயும் உன் தோழி ப்ரவீணாவும் ஆறு மணிக்கு கோயிலுக்குப் போகலாம்னு முடிவு பண்ணியிருக்கீங்க. சரியா ஆறு மணிக்கு நீ ரெடியாயிட்ட. சுமார் ஆறேகாலுக்கு நான் உங்கிட்ட கேட்கறப்போ, நீ, ‘I am waiting for Praveena sir’ என்கிறாய்.

சுமார் ஏழு மணிக்கு நான் அந்தப் பக்கம் போறப்போ பார்வையிலேயே ‘இன்னுமா அவ வரல்ல?’ எனக் கேட்கிறேன். அப்போ கொஞ்சம் சலிப்போட ‘Still I am waiting for that bloody girl sir’ என்கிறாய். ஒரு மணிநேரத்திற்குமுன் கேட்டபோது am waiting என்றாய். ஒரு மணிநேரம் காத்திருந்த பின் சலிப்போடு still am waiting என்கிறாய். ஒருவேளை, நான் எட்டு மணிக்குக் கேட்டால், அப்ப நீ இரண்டு மணிநேரம் காத்திருந்த வெறுப்பில் ‘I have been waiting for her since six o’ clock’என்றுதான் சொல்லுவாய்.

ஏன் இப்படிசொல்லவேண்டுமென்றால், எட்டு மணிக்கு சாதாரணமாகக் ‘காத்திருக்கிறேன்’ எனச் சொல்ல முடியாது. ‘எவ்வளவு நேரமாக’ காத்துக்கொண்டிருக்கிறாய் என்ற time factorக்குத்தான் அழுத்தம் கொடுப்பாய். இந்த மாதிரி சாதாரணமா, எந்தவிதமான அழுத்தமும் இல்லாம சொல்லணும்னா ordinary continuous tenseல (am/is/was/ are/were/will be waiting) சொல்லமுடியும். அதற்கு மாறாகக் கால அவகாசத்திற்கு அழுத்தம் கொடுத்துச் சொல்ல வேண்டுமென்றால் perfect continuous (have/has/had been waiting) தான் சொல்ல முடியும்’’ என்றார் ரகு.

ஆச்சர்யத்தோடு ரகுவைப் பார்த்த அகிலா, “Great sir..  இப்போ 2018. Suppose நான் 2015 இருந்து இங்க வேலை செய்துகொண்டிருக்கிறேன் என்பதற்கு ‘I have been working here since 2015’ என்றும், ‘மூன்று வருடங்களாக இங்கு வேலை செய்துகொண்டிருக்கிறேன்‘ என்பதற்கு ‘I have been working here for three years’ என்று சொல்லவேண்டும், சரிங்களா சார்?” என்று கேட்டாள்.

“Absolutely correct Akila” என்றபடியே வந்து நின்றான் ரவி. “என்ன அப்படிப் பார்க்கிற அகிலா. எனக்கு இது எப்படித் தெரியும்னா? You are just learning now but I have been learning from sir before your joining here” என்றான் ரவி. “Okey guys. See you then” என்றபடியே தன் மடிக்கணினியில் கண் பதித்தார் ரகு.
 
ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com

சேலம் ப.சுந்தர்ராஜ்