செய்தித் தொகுப்பு



கேம்பஸ் நியூஸ்

சுற்றுலாத்துறை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை!  

குவாலியர், புவனேஷ்வர், நொய்டா, கோவா, நெல்லூர் ஆகிய இடங்களில் உள்ள ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டூரிஸம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட்(ஐ.ஐ.டி.டி.எம்.,)’ கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்: பி.பி.ஏ.,-டூரிஸம் அண்ட் டிராவல்,
எம்.பி.ஏ.,-டூரிசம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட்
சேர்க்கை முறை: ஐ.ஐ.டி.டி.எம்., கல்வி நிறுவனம் இந்திராகாந்தி நேஷனல் டிரைபல் யுனிவர்சிட்டியுடன் இணைந்து நடத்தும் ஐ.ஐ.ஏ.டி., எனும் நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். எம்.பி.ஏ. படிப்பை பொறுத்தவரை, ஐ.ஐ.ஏ.டி.,/மேட்/கேட்/சிமேட்/சேட்/ஜிமேட்/ஏ.டி.எம்.ஏ., போன்ற ஏதேனும் ஒரு நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.5.2018
மேலும் விவரங்களுக்கு: www.iittm.ac.in

தேர்வுப் பாடத்திட்டம் குறித்து தெளிவு பெறலாம்!

 தமிழக மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்கவும், மனநலம் சார்ந்த ஆலோசனைகள் வழங்கவும், ‘14417’ என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன், சேவை மையத்தை பள்ளிக்கல்வித் துறை தொடங்கி உள்ளது. இந்த மையத்தில், ‘104’ மருத்துவ சேவை மையத்தின், மனநல ஆலோசகர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து, சேவை மைய அதிகாரிகள் கூறியபோது, ‘‘மாணவர் சேவை மையம் தொடங்கப்பட்ட, ஆறு நாட்களில், 16,615 மாணவர்கள் மற்றும் பெற்றோர் பயன் பெற்றுள்ளனர்.

தற்போது, மாலை, 4:00 மணி முதல் 7:00 மணி வரை, பாடத்திட்டம் தொடர்பான மாணவர்களின் சந்தேகங்கள், தீர்க்கப்பட்டு வருகின்றன. இதில், நாளைய தேர்வு குறித்த சந்தேகங்களை, மாணவர்கள், முதல்நாளே கேட்டு தெளிவு பெறலாம். இதற்காக, சேவை மையத்தில் பாட வாரியான ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பல்கலைகளில் சேர கியுசெட் நுழைவுத் தேர்வு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பெங்களூருவில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் ஆகியவற்றில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளில் சேர்க்கை பெற ‘சென்ட்ரல் யுனிவர்சிட்டிஸ் காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட் (கியுசெட்) எனும் நுழைவுத்தேர்வு எழுத வேண்டியது அவசியம்!

மத்திய பல்கலைக்கழகங்கள் தமிழகம், அரியானா, ஜார்கண்ட், ஜம்மு, கர்நாடகா, காஷ்மீர், கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் பிகார் ஆகிய 10 இடங்களில் மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. ‘கியுசெட்’தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே, அனைத்து மத்திய பல்கலைக்கழகத்திற்குமான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வழங்கப்படும் படிப்புகள்: திருவாரூரில் செயல்படும் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பி.பீ.ஏ.-இசை, பி.எஸ்சி.,-டெக்ஸ்டைல்ஸ், பி.எஸ்சி.பி.எட்.-கணிதம் ஆகிய இளநிலைப் பட்டப்படிப்புகளும், எம்.ஏ.,-தமிழ், பொருளியல், ஆங்கிலம், இந்தி, வரலாறு, மாஸ் கம்யூனிகேஷன், எம்.எஸ்சி. -  அப்ளைடு சைக்காலஜி, கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், எபிடெமியாலஜி அண்ட் பப்ளிக் ஹெல்த், ஜியோகிரபி, மைக்ரோபயாலஜி,
எம்.டெக்.-மெட்டீரியல் சயின்ஸ், எம்.பி.ஏ., மாஸ்டர் ஆப் சோசியல் வொர்க் உள்ளிட்ட ஏராளமான முதுநிலைப் பட்டப்படிப்புகளும், எம்.பில். மற்றும் பிஎச்.டி. படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இவைபோன்று, அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் பல்வேறு படிப்புகள் உள்ளன.

தேர்வு முறை: இளநிலைப் பட்டப்படிப்புகள், முதுநிலைப் பட்டப்படிப்புகள் மற்றும் பிஎச்.டி. படிப்புகள் என நிலைக்கு ஏற்ப தனித்தனி நுழைவுத்தேர்வு உண்டு. அனைத்துப் படிப்புகளுக்கும், நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்து ‘மெரிட்’அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.3.2018
மேலும் விவரங்களுக்கு: www.cucetexam.in

பி.ஆர்க். படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் பி.ஆர்க். படிப்பில் சேர, ‘நாட்டா’ என்ற நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். வரும் கல்வி ஆண்டிற்கான இத்தேர்வு, ஏப்ரல் 29ல் நடக்க உள்ளது. இத்தேர்வுக்கான, ‘ஆன்லைன்’ பதிவு, கடந்த ஜனவரி 18ல் தொடங்கி, மார்ச் 2ல் முடிந்தது. இதுவரை, 40 ஆயிரத்துக்கும் குறைவான விண்ணப்பங்களே வந்துள்ளன.

அதனால், விண்ணப்பப் பதிவுக்கான அவகாசத்தை நீட்டிக்க, இந்திய ஆர்கிடெக்சர் கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதன்படி, நாட்டா நுழைவுத் தேர்வு எழுத விரும்புவோர் வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரங்களை www.nata.in என்ற, இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.