வேலை ரெடி!



வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

மத்திய ரயில்வேயில் கூட்ஸ் கார்ட் பணி

நிறுவனம்: சென்ட்ரல் ரயில்வேயின் மும்பைக் கிளையில் வேலை
வேலை: கூட்ஸ் கார்ட்
காலியிடங்கள்: மொத்தம் 125
கல்வித்தகுதி: ஏதாவதொரு
பட்டப்படிப்பு
வயது வரம்பு: 42க்குள். சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: எழுத்து மற்றும் மருத்துவ சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.12.17
மேலதிக தகவல்களுக்கு: www.rrccr.com

இந்திய ரயில்வேயில் கிளர்க் மற்றும் டைபிஸ்ட் பணி!

நிறுவனம்: இந்திய ரயில்வேயின் மும்பைக் கிளை
வேலை: ஜூனியர் கிளர்க் உடன் டைப்பிஸ்ட் பணி
காலியிடங்கள்: மொத்தம் 150
கல்வித்தகுதி: +2 படிப்புடன் ஆங்கிலம் மற்றும் இந்தியில் குறிப்பிட்ட வேகத்துடன் டைப்பிங்கில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்
வயது வரம்பு: 42க்குள். சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: எழுத்து மற்றும் மருத்துவ சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.12.17
மேலதிக தகவல்களுக்கு: www.rrccr.com

இந்தியக் கடற்படையில் எம்.டி.எஸ். வேலை!

நிறுவனம்: இண்டியன் நேவி
வேலை: எம்.டி.எஸ். எனும் மல்டி டாஸ்கிங் சர்வீஸ் எனும் பதவியிலான டோபி, மாலி, லேப் அசிஸ்டன்ட் உட்பட பல
பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 69
கல்வித்தகுதி: வேலைப் பிரிவுகளுக்கு ஏற்றவாறு 10, +2 மற்றும் டிகிரி படிப்புகள் தேவைப்படும்
வயது வரம்பு: சில வேலைகளுக்கு 25 வயதும், சில வேலைகளுக்கு 30 வயதும் உச்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
தேர்வு முறை: படிப்புத் தேர்ச்சியின் அடிப்படையில்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.12.17
மேலதிக தகவல்களுக்கு: www.hqwncrecruitment.com

அந்தமான் நிகோபார் போலீஸ் படையில் சப் இன்ஸ்பெக்டர் பணி

நிறுவனம்: அந்தமான் நிகோபார் போலீஸ் படை
வேலை: சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் என இரு
பிரிவுகளில் பணி
காலியிடங்கள்: மொத்தம் 122. இதில் முதல் வேலையில் 26, இரண்டாம் வேலையில் 93 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித்தகுதி:முதல் வேலைக்கு டிகிரியும், இரண்டாம் வேலைக்கு +2 தேர்வில் தேர்ச்சியும் பெற்றிருக்கவேண்டும்
வயது வரம்பு: முதல் வேலைக்கு 30க்குள்ளும், இரண்டாம் வேலைக்கு 18 முதல் 25 வரை இருத்தல் வேண்டும். சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வுமுறை: எழுத்து, உடல் தகுதி சோதனை மற்றும் மருத்துவ சோதனை
விண்ணபிக்க கடைசித் தேதி: 30.12.17
மேலதிக தகவல்களுக்கு: www.police.andaman.gov.in

எஞ்சினியர்களுக்கு பவர்கிரிட்நிறுவனத்தில் வேலை

நிறுவனம்: மின்சாதனப் பொருட்களைத் தயாரிக்கும் மத்திய அரசு நிறுவனமான பவர்கிரிட் கார்பரேஷன்
வேலை: எலக்ட்ரிக்கல் துறையில் டெப்யூட்டி மேனேஜர், சீனியர் எஞ்சினியர் மற்றும் அசிஸ்டன்ட் எஞ்சினியர் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 88. இதில் முதல் வேலையில் 15, இரண்டாம் வேலையில் 25, மற்றும் மூன்றாம் வேலையில் 48 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் படிப்பில் பி.இ., பி.டெக் மற்றும் பி.எஸ்சி., படிப்புகளில் தேர்ச்சி அடைந்திருக்கவேண்டும்
வயது வரம்பு: முதல் வேலைக்கு 37க்குள்ளும், இரண்டாம் வேலைக்கு 36க்குள்ளும், மூன்றாம் வேலைக்கு 30க்குள்ளும் இருத்தல் அவசியம்
தேர்வுமுறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணபிக்க கடைசித் தேதி: 21.12.17
மேலதிக தகவல்களுக்கு: www.powergridindia.com

இந்தியக் கடற்படையில் சார்ஜ்மென் வேலை!

நிறுவனம்: இண்டியன் நேவி எனப்படும் இந்திய கடற்படை
வேலை: இருபிரிவுகளில் சார்ஜ்மென் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 99. இதில் மெக்கானிக் பிரிவில் 58, அம்யுனிஷன் மற்றும் எக்ஸ்புளோசிவ் பிரிவில் 41 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித்தகுதி: முதல் வேலைக்கு பி.எஸ்சி. பட்டம் அல்லது எஞ்சினியரிங் டிப்ளமோ படிப்பு, இரண்டாம் பிரிவில் பி.எஸ்சி., பட்டம் அல்லது கெமிக்கல் படிப்பில் டிப்ளமோ தேர்ச்சியுற்றிருக்கவேண்டும்
வயது வரம்பு: 18 முதல் 25 வரை. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வுமுறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.12.17
மேலதிக தகவல்களுக்கு: www.hqwncrecruitment.com