TNPSC அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்!



போட்டித் தேர்வு டிப்ஸ்

முனைவர் ஆதலையூர் சூரியகுமார்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வோர் பல லட்சம் பேர். காரணம் நிரந்தர வருமானம், பல்வேறு சலுகைகள் கொண்ட அரசுப் பணி என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. பல தோல்விகளைக் கண்டாலும் தொடர் முயற்சி மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகம் உள்ள தேர்வுகள் இவையாகத்தான் இருக்கும்.  

கிராம நிர்வாக அலுவலர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி பல லட்சம் பேர் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் சூழலில் அந்தப் போட்டியாளர்களுக்கும் இந்தப் பகுதி பயனுள்ளதாக இருக்கும். கடந்த இதழ்களில் பொதுஅறிவுப் பகுதியில் அறிவியல் சார்ந்த வினாக்களை எதிர்கொள்வதற்கான தகவல்கள் வழங்கப்பட்டுவருகின்றன. அதன் தொடர்ச்சியை இனி பார்ப்போம்… 

வெப்பம் 

*வெப்பத்தின் அலகு ஜுல்.
*வெப்பநிலையின் அலகு செல்சியஸ் அல்லது கெல்வின்.
*மனித உடம்பின் சராசரி வெப்பநிலை 36.90 C (C - செல்சியஸ்.)

சுழி வெப்பநிலை  

*தனிச்சுழி வெப்பநிலையில் மூலக்கூறுகள் இயக்கம் இருக்காது.
*தனிச்சுழி வெப்பநிலை என்பது 2730 K
*3800 K வெப்பநிலைக்குச் சமமான செல்சியஸ் வெப்பநிலை =380 -273 =1070 C
பாதரசம் வெப்பநிலைமானியில் பின்வரும் காரணங்களால் பயன்படுத்தப்படுகிறது.

1. ஒளி ஊடுருவாத தன்மையுடையது.
2. பாதரசம் தெளிவாகத் தெரியும். இது கண்ணாடியில் ஒட்டாது.
3. பாதரசம் வெப்பத்தை நன்றாகக் கடத்தக் கூடியது. மற்றும் சிறு வெப்பநிலை உயர்வுக்கும் சீராக உயரக்கூடியது.
4. பாதரசத்தின் கொதிநிலை = 3570 C
5. பாதரசத்தின் உறைநிலை = -390 C
6. குளிர் நாடுகளில் பாதரச வெப்பநிலைமானிக்கு பதிலாக ஆல்கஹால் வெப்பநிலைமானி பயன்படுகிறது. காரணம், பாதரசத்தின் உறைநிலை -390 C ஆனால் ஆல்கஹாலின் உறைநிலை - 1150 C
7. மருத்துவ வெப்பநிலைமானியின் அளவு 350 C முதல் 440C வரை இருக்கும்.

வெப்ப விரிவு

*பொருட்கள் வெப்பப்படுத்தும்போது விரிவடையும். குளிர்விக்கும்போது சுருங்கும்.

*‘இரு உலோகத்தகடு’என்பது இரு வெவ்வேறு உலோக (பித்தளை + இரும்பு). தகடுகள் சார்ந்த அமைப்பாகும். சாதாரண வெப்பநிலையில் உலோகத் தகடுகள் நேராக இருக்கும். வெப்பப்படுத்தும்போது பித்தளை இரும்பை விட குறைவாக விரிவடைவதால் வளைவின் வெளிப்புறம் இரும்பும் உட்புறம் பித்தளையும் அமையும்.

*வெப்பநிலைப்படுத்திகளின் மின்கற்றை முறிக்க இரு உலோகத்தகடுகள் பயன்படுகின்றன.

*வெப்பநிலைப்படுத்தி, வெப்பநிலை மாறாமல் வைக்கப் பயன்படுகிறது.

*வெப்பநிலைப்படுத்தி மின்தேய்ப்பான், மின் அடுப்பு, குளிர்சாதனப் பெட்டி ஆகியவற்றில் பயன்படுகிறது.

வெப்ப விரிவின் குறைபாடுகள்

*சூடான கண்ணாடிக் குடுவையில் ஏற்படும் விரிசல்.

*சுவர்கள் விரிவடைவதால் பாதிக்கப்படுதல். தண்டவாளங்களில் ஒன்றோடு ஒன்று சேரும் இடத்தில் சிறிது இடைவெளி விட்டு பொருத்தப்படும் காரணம், கோடைக்காலங்களில் வெப்பத்தின் காரணமாக ஏற்படும் விரிவை சமாளிக்க.

*வாயுக்கள் அடங்கிய குளிர்பான பாட்டில்கள் விரிவு ஏற்படாமல் இருக்க தடித்த கண்ணாடியால் செய்யப்பட்டிருக்கும்.

தனி ஊசல்

*தனி ஊசலின் அலைவு நேரம். அதன் ஊசலின் நீளத்தையும், புவி ஈர்ப்பு முடுக்கத்தையும் சார்ந்தது. ஊசலின் நீளம் அதிகரிக்க, அலைவு நேரம் அதிகரிக்கும்.

*புவி ஈர்ப்பு முடுக்கம் அதிகமானால் அலைவு நேரம் குறையும்.

*வெப்பநிலை அதிகரிக்கும்போது ஊசலின் நீளமும் அதிகரிக்கும். எனவே, கோடைகாலங்களில்  கடிகாரங்களில் நேர இழப்பும், குளிர் காலங்களில் நேர நீட்டிப்பும் ஏற்படுகிறது.

*வெப்பத்தால் ஏற்படும் விரிவைப் போக்க இன்வார் என்ற உலோகக் கலவை பயன்படுத்தப்படுகிறது.

*வினாடி ஊசல் என்பது அலைவு நேரம் இரண்டு வினாடியாக இருப்பது.

நீர்மத்தில் வெப்பப் பிரிவு

*ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்து சூடுபடுத்தும்போது முதலில் நீர்மட்டம் குறையும். பின்பு உயரும்.

*நீரின் அடர்த்தி 40C யில் உயர்வாக இருக்கும்.

*நீரின் கன அளவு 40C யில் குறைவாக இருக்கும்.

*நீரின் அடர்த்தி 40C-க்கு மேல் செல்லச் செல்ல குறைந்துகொண்டே செல்லும்.

நீரின் கன அளவு 40 C-க்கு மேல் செல்லச் செல்ல அதிகரித்துக்கொண்டே செல்லும்.

வெப்பம் பரவுதல்

1. வெப்பக் கடத்தல்
2. வெப்பச் சலனம்
3. வெப்பக் கதிர்வீசல் - ஆகிய முன்று முறைகளில் வெப்பம் பரவுகின்றது.

வெப்பக் கடத்தல்

*வெப்பக் கடத்தல் என்பது அணுக்களின் அதிர்வுகளால் வெப்பம் கடத்தப்படுவது. இது திண்மங்களில் மட்டும் ஏற்படுகிறது.

*வெப்பத்தை நன்றாக கடத்தக்கூடிய உலோகம் காப்பர்.

*வெப்பம் கடத்தாப் பொருள் பருத்தி, கார்பெட், காற்று மற்றும் உரோம ஆடைகள்.

வெப்பக் கதிர்வீசல்

*வெப்பக் கதிர்வீசல் முறையில் வெப்பம் பரவ ஊடகம் தேவையில்லை.

*சூரியனிலிருந்து வெப்பம், கதிர்வீசல் மூலமே புவியை அடைகிறது.

*கரும் பரப்பு, சொரசொரப்பான கரும் பரப்பு அதிக வெப்பக் கதிர்வீச்சை உட்கவரும். வெண்மைப் பரப்பு அதிகமான வெப்பக் கதிர்வீச்சை பிரதிபலிக்கும்.

*சமைக்கும் பாத்திரங்களின் அடிப்பாகம் கருமைநிறம் பூசப்பட்டிருக்கும். ஏனெனில் அவை அதிகமான வெப்பக் கதிர்வீச்சைப் பிரதிபலிக்கும்.

*பெட்ரோல் போன்ற எளிதில் தீப்பிடிக்கக்கூடிய எரிபொருள்களை ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரிகளில் வெள்ளை நிறம் பூசப்பட்டிருக்கும். ஏனெனில் அவை அதன் மீது விழக்கூடிய அதிகமான வெப்பக் கதிர்வீச்சைப் பிரதிபலிக்கும்.

*கோடைகாலத்தில் வெள்ளை மற்றும் வெளிர் நிறமுடைய ஆடைகள் அணிவது நல்லது. அவை குறைவான வெப்பக் கதிர்வீச்சை உட்கவர்ந்து, நமது உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

*குளிர் காலங்களில் கம்பளி ஆடைகள் நம் உடலை வெப்பமாக வைத்திருக்க உதவுகின்றன. அவற்றில் உள்ள சிறிய துவாரங்களில் காற்று அடைபடுகிறது. இந்தக் காற்று ஒரு அரிதிற்கடத்தியாக செயல்பட்டு, நமது உடல் வெப்பத்தை பாதுகாக்க உதவுகிறது.

கொதிநிலை

*ஒரு திரவத்தின் கொதிநிலை மாசுப் பொருட்களை (உப்பு) சேர்ப்பதால் உயர்கிறது.

*திரவத்தில்  அழுத்தம் அதிகரிக்க, நீரின் கொதிநிலை உயரும்.

*நீர் பனிக்கட்டியாக மாறும்போது இதனுடைய கன அளவு அதிகரிக்கிறது.

மேலும் பொதுஅறிவு சார்ந்த அறிவியல் பாடப் பகுதிக்கான தகவல்களை அடுத்த இதழில் பார்ப்போம்.