செய்தித் தொகுப்பு



கேம்பஸ் நியூஸ்

டெல்லி ஐ.ஐ.டி.யில் எம்.பி.ஏ. படிப்பில் சேரலாம்!

டெல்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில், 2018ம் ஆண்டிற்கான எம்.பி.ஏ. பட்டப்படிப்பில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர்55 % மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
சேர்க்கை முறை: ’கேட்’தேர்வு மதிப்பெண்கள், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.1.2017
மேலும் விவரங்களுக்கு: http://dms.iitd.ac.in/

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திறனறி தேர்வுப் பயிற்சி!

மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்க, திறனறி தேர்வுகள் நடத்தப்
படுகின்றன. தேசிய அளவில் நடக்கும் இந்தத் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பின்தங்கி உள்ளனர். இந்த நிலைமையை மாற்ற, தமிழக அரசின் சார்பில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுத்தப்படவுள்ளது.தமிழகத் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, 7,219 நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும், நான்கு லட்சம் மாணவர்களுக்கு, திறனறி தேர்வுக்குப் பயிற்சி தரப்படவுள்ளது.

மாநிலம் முழுவதும், போட்டித் தேர்வுப் பயிற்சிக்கு ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட, 500 மையங்களும், தொடக்கப் பள்ளிகளில் அமைக்கப்படும் 3,000 ‘ஸ்மார்ட்’ வகுப்புகளும், திறனறி தேர்வுப் பயிற்சி மையங்களாகச் செயல்பட உள்ளன.இதற்காகத் தகுதியுள்ள ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி தரப்படவுள்ளது. இந்தத் திட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திறனறி தேர்வுக்கான இலவசப் பயிற்சி, இணையதளத்தில், ‘யூ டியூப் லிங்க்’ வழியாகவும் வழங்கப்பட உள்ளது. இதற்காகத் தொடக்கக் கல்வித்துறை சார்பில், புதிய இணையதளமும் தொடங்கப்பட உள்ளது.

இண்டஸ்டிரியல் மேனேஜ்மென்ட் படிக்கலாம்

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டஸ்டிரியல் எஞ்சினியரிங் (என்.ஐ.டி.ஐ.இ.) என்ற தன்னாட்சிக் கல்வி நிறுவனம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாடப் பிரிவுகள்: போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் இண்டஸ்டிரியல் மேனேஜ்மென்ட் (பி.ஜி.டி.ஐ.எம்.) மற்றும் போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் இண்டஸ்டிரியல் சேஃப்ட்டி அண்ட் என்விரான்மென்டல் மேனேஜ்மென்ட் (பி.ஜி.டி.ஐ.எஸ்.இ.எம்.). கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பொறியியல் பட்டப்படிப்பில்  60%  மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சேர்க்கை முறை: ‘கேட்’தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள்  தேர்வு செய்யபட்டு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.1.2018
மேலும் விவரங்களுக்கு: www.nitie.edu

பள்ளி மாணவர்களுக்கு வரப்போகிறது ‘ஹெல்ப்லைன்’!

தமிழகப் பள்ளிக் கல்வித்துறை, 2016 வரை மிக மோசமான நிலையில், எந்த முன்னேற்றமும் இன்றி இயங்கிவந்தது. பல்வேறு அரசியல் மாற்றங்கள் மற்றும் அமைச்சரவை மாற்றங்களுக்குப் பிறகு புதிய பாடத்திட்டம் தயாரிப்பு, போட்டித் தேர்வுக்குப் பயிற்சி, ஸ்மார்ட் வகுப்பறைகள், ‘ரேங்கிங்’ முறை ரத்து திட்டங்களின் வரிசையில், மாணவர்களுக்கான, ‘ஹெல்ப்லைன்’திட்டமும் அறிமுகம் ஆக உள்ளது. இந்தத் திட்டத்தில், 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்.

இயங்கும். பள்ளி மாணவர்களின் தேர்வுக்கான சந்தேகங்கள், தேர்வு குறித்த தகவல்கள், நுழைவுத் தேர்வு தொடர்பான விளக்கம், உயர்கல்விக்குச் செல்வதற்கான வாய்ப்புகள், பள்ளிகளில் உள்கட்டமைப்பு பிரச்னை, ஆசிரியர், மாணவர்களுக்கு இடையிலான சர்ச்சைகள் என அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் புகார்களைத் தெரிவிக்கலாம்.அதேபோல் கல்வி தொடர்பான ஆலோசனைகளையும் கேட்டுப் பெறலாம்.மதிப்பெண் பிரச்னை, தேர்வுப் பயம், பெற்றோரின் அழுத்தம், ஆசிரியர்களின் நெருக்கடி களைச் சமாளிக்க மாணவ, மாணவியருக்கு உளவியல் மற்றும் ஒழுக்கநெறி ஆலோசனைகளும் வழங்கப்படும்.இதற்காக உதவி மையத்தில், உளவியல் நிபுணர்கள், 24 மணி நேரமும் பணியில் இருக்கஉத்தரவிடப்பட்டுள்ளது.