அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!போட்டித் தேர்வு

‘ஒரு நாள் யாரோ? என்ன பாடல் சொல்லித்தந்தாரோ’ என்ற ரிங்டோனை ம்யூட் செய்தவாறே வந்த ரவி, “குட்மார்னிங் சார், Please give me one pen sir” என்று ரகுவிடம் கேட்டான். உடனே ரகு, “Please give me a pen என்று கேள் ரவி” என்றார். “ஏன் சார்? one என்று சொன்னால் என்னங்க சார் தப்பு?” என்ற ரவியை புன்னகையுடன் பார்த்த ரகு, “Please give me one pen என்றால் எனக்கு ஒன்று பேனா கொடுங்கள் என்று பொருள். Please give me a pen என்றால் எனக்கு ஒரு பேனா கொடுங்கள் என்று பொருள். அதனால எது சரின்னு நீயே முடிவு பண்ணிக்கோ” என்றவாறே தனது மெயில் பாக்ஸை திறந்தார் ரகு.

பக்கத்து சீட்ல இருந்த ப்ரவீணா, “ஆத்தூர்ல என் மாமா பாண்டியன்னு ஒருத்தர் இருக்காருங்க சார். அவர் இங்கிலீஷ்ல ரொம்ப ஆர்வம் உள்ளவர் சார். அவரு ஒரு முறை என்கிட்ட I will take you to a theme park one day அப்படின்னு சொன்னாருங்க சார். அப்ப எனக்கு ஏதும் தவறா தோணலங்க சார். ஆனா இப்ப தோணுது. one day அப்படின்னா ஒன்று நாள்னு தானே அர்த்தம். அப்போ அவரு சொன்ன ‘I will take to a theme park one day’ன்னு சொன்னது தப்புங்களா சார். a dayன்னு தான் சொல்லணுங்களா சார்?” எனக் கேட்டாள்.

“நியாயமான சந்தேகம்தான் ப்ரவீணா. I will take to a theme park one dayன்னு சொன்னது சரிதான். ஏன்னா…. இந்த வாக்கியத்தில் வருகிற one day யோட உண்மையான பொருள் at some time in future என்றுதான் பொருள். oneக்கு தனியா dayக்கு தனியா அர்த்தம் பார்க்கக்கூடாது. இது ஒருவிதமான idiomatic expression. உதாரணத்துக்கு, one wayன்னு போர்டு பார்த்திருப்பே. அப்படின்னா ‘ஒன்று வழி’ என்ற அர்த்தம் கிடையாது. இது ஒருவழிப்பாதை. போக மட்டும்தான். அதே வழியில் வரக்கூடாது என்று பொருள். அதே மாதிரி one and all என்றால் everyone என்று அர்த்தம். இப்ப புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தார் ரகு.

ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்குத் தொடர்பு கொள்ள: englishsundar19@gmail.com