TNPSC அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்!



போட்டித் தேர்வு டிப்ஸ்

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கான பலவிதமான பாடத்திட்டங் களிலிருந்தும் குறிப்புகளை இப்பகுதியில் வழங்கிவருகிறோம். தற்போது இந்திய அரசியலமைப்பு பற்றிய தகவல்களைத் தொடர்ந்து பார்ப்போம். மாநில அரசு பகுதி VI, விதிகள் 152-237ஆளுநர், முதலமைச்சர், அமைச்சரவை ஆட்சிப் பணியாளர்களைக் கொண்டது மாநில அரசு.

ஆளுநர்: மாநில அரசின் தலைவர் ஆளுநர். ஆனால், ஜனாதிபதியைப் போல இவரும் பெயரளவில்தான் ஆட்சித்தலைவர். உண்மையான நிர்வாகம் நடத்துவது மாநில மந்திரி சபை. பிரதமரின் அறிவுரையின்படி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர் ஆளுநர். ஆளுநரின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் நீடிக்கப்படலாம் அல்லது இடை நீக்கப்படலாம்.
ஆளுநருக்கான தகுதி: 35 வயதுக்கு மேல் உள்ள இந்தியக் குடிமகன். எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. பதவியில் இருக்கக்கூடாது. ஊதியம் பெறும் பதவி எதுவும் வகிக்கக்கூடாது.
அதிகாரங்கள் 4 நியமன அதிகாரம்.

4 முதலமைச்சரையும் பிற அமைச்சர் களையும் நியமிப்பவர் ஆளுநர். 4 மாநில அரசாங்கத் தலைமை வழக்கறிஞர், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், மாநில அரசுப் பணியாளர் தேர்வுக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரையும் நியமிப்பவர் ஆளுநர். பிற அதிகாரங்கள் மாநிலத்தின் அனைத்துச் சட்டமுன்-வரைவுகளும் ஆளுநர் ஒப்புதல் பெற்ற பின்தான் சட்டம் ஆகும். மாநில அரசில் நெருக்கடி ஏற்பட்டால் ஆட்சியைக் குடியரசுத் தலைவர் மேற்கொள்ளப் பரிந்துரை செய்பவர் ஆளுநர். அப்போது ஜனாதிபதி சார்பில், ஆட்சி செய்பவர் ஆளுநர்.

நீதி அதிகாரம்: மாநில அரசு நீதி வரம்புக்கு உட்பட்ட விவகாரங்களில் மன்னிப்பு, தண்டனை குறைக்க அல்லது நீக்க அதிகாரம்.

நிதி அதிகாரம்: நிதி மசோதா அறிமுகத்துக்கு ஆளுநரின் அனுமதி தேவை.
மாநில முதல்வரும் அமைச்சர்களும் மத்திய அரசின் பிரதமர் அமைச்சரவை போன்றே அதிகாரங்களும், பொறுப்புகளும் மாநில அளவில் முதல்வருக்கும், அமைச்சரவைக்கும் உண்டு. மாநில அரசுகளுக்குத் தனி அயல் நாட்டுக் கொள்கை இல்லை. நீதித்துறை உச்ச நீதிமன்றம்: இந்தியாவின் மிக உயர்ந்த நீதித்துறை அங்கம் உச்ச நீதிமன்றம். நீதிமன்றங்கள், சட்ட மன்றங்களுக்கோ, நிர்வாகத்தினருக்கோ, ஜனாதிபதிக்கோ கட்டுப்பட்டவை அல்ல. அவை சுதந்திரமுள்ள தன்னாட்சி அமைப்புகள்.  இந்திய உச்சநீதிமன்றம் 26.01.1950-ல் தொடங்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதியையும் 30 நீதிபதிகளையும் கொண்டது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் அவரது ஆலோசனைப்படி பிற நீதிபதிகளையும் நியமிப்பவர் குடியரசுத் தலைவர்.

நீதிபதிகளின் தகுதிகள்
1.  இந்தியக் குடிமகன்.     
2.  உயர் நீதிமன்ற நீதிபதியாக தொடர்ந்து 5 ஆண்டு பணி அல்லது உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 10 ஆண்டுகள் பணி.
3.  குடியரசுத் தலைவர் கருத்துப்படி சட்ட அறிஞர்.

அமைவிடம்
உச்ச நீதிமன்ற நிரந்தரத் தலைமையகம் புதுடெல்லி. மற்ற இடங்களில் அமர்வு நடத்த தலைமை நீதிபதிக்கு உரிமை உண்டு. ஓய்வு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65. ஓய்வுபெற்றபின் இந்தியாவில் எங்கும் வழக்கறிஞராகப் பணிபுரியக்கூடாது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியை மீண்டும் அதே பதவியில் நியமிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு உண்டு. இதற்கு ஜனாதிபதியின் அனுமதி தேவை. ராஜினாமா நீதிபதிகள் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும்.

பதவி நீக்கம் நீதிபதிகள் பதவி நீக்கமுறை கடுமையானது.

1. திறமையற்றவர் அல்லது நெறி பிறழ்ந்தவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் புலன் விசாரணை.
2.  பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் வாக்களிப்போரில் 2-3 பங்கு பெரும்பான்மை மற்றும் மொத்த உறுப்பினர் களில் 50 பெரும்பான்மை.
3.  ஜனாதிபதியின் அங்கீகாரம் மற்றும் உத்தரவு.           
   
உச்ச நீதிமன்ற அதிகார வகைகள் ஒரிஜினல் நீதி எல்லை. மத்திய-மாநில அல்லது மாநிலங்களிடையே வழக்குகள். அடிப்படை உரிமைகள் சம்பந்தமான வழக்குகள் (இவை நீதிப்பேராணை எனப் படும்). 5 வகை ரிட் உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கலாம்.

5 வகை (ரிட்)  நீதிப் பேராணைகள்

1.  ஆட்கொணர்வு நீதிப் பேராணை (ஹேபியஸ் கார்பஸ்) - ரகசியமாகச் சிறையிலோ, மறைவிலோ வைக்கப்பட்டிருப்பவை விடுவிப்பதற்கான ஆணை இது.
2.  கீழ் நீதிமன்றங்களுக்கு விதிக்கப்படும் கட்டளைப் பேராணை (அ)  (ரிட் ஆஃப் மாண்டமஸ்) & லைசன்ஸ் அல்லது நியமன உத்தரவு வழங்க வேண்டும் என்று ஆணையிடுதல்.
3.  வழக்கு விசாரணை தடை ஆணை (Prohibition) தடையுறத்தல் நீதிப்பேராணை
4.  உரிமை வினா நீதிப்பேராணை (கோ வாரண்டோ) தகுதியின்றிப் பதவி வகிப்
பதைத் தடுக்கும் வழிவகை.
5.  ஆவணக் கேட்பு நீதிப்பேராணை - கீழ் நீதிமன்றங்களில் தாமதமாகும் வழக்குகளை விரைந்து முடிக்கும் வழிவகை. 4 நீதிப் பேராணை எனப்படும் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்ய வகை செய்வது அரசியல் சட்டத்தின் 32வது விதி. 4 ரிட் மனுக்களை உச்சநீதிமன்றத்திலோ, உயர் நீதிமன்றத்திலோதான் தாக்கல் செய்யலாம். கீழ்நிலை நீதிமன்றங்களுக்கு ரிட் விசாரணை அதிகாரம் இல்லை. இந்திய அரசியல் அமைப்பு சார்ந்த மேலும் பல தகவல்களை அடுத்த இதழில் பார்ப்போம்...