வேலை ரெடி!போட்டித் தேர்வு

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் ஸ்டாஃப் நர்ஸ் வேலை!
நிறுவனம்: மத்திய அரசின் ஆல் இண்டியா இன்ஸ்டி டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் எனும் மருத்துவ ஆய்வு மையத்தின் உத்தர்காண்ட் கிளை
வேலை: 4 பிரிவுகளில்காலியிடங்கள்: மொத்தம் 315. இதில் ஆபிஸ் அசிஸ்டென்ட் 33, ஸ்டாஃப் நர்ஸ் 125, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 25, மற்றும் ஹாஸ்பிட்டல் அசிஸ்டென்ட் 100 இடங்கள்.கல்வித்தகுதி: முதல் வேலைக்கு டிகிரி, இரண்டாம் வேலைக்கு பி.எஸ்சி. நர்சிங், மூன்றாம் வேலைக்கு பி.எஸ்சி. லேப் டெக்னீஷியன் மற்றும் நான்காம் வேலைக்கு ஏதாவது ஒரு டிகிரி அவசியம்.
வயது வரம்பு: முதல் வேலைக்கு 20 - 30, இரண்டாம் வேலைக்கு 21 - 35, மூன்றாம் வேலைக்கு 25-35 மற்றும் நான்காம் வேலைக்கு 18 - 30 இருத்தல் வேண்டும்.
தேர்வு முறை: எழுத்து, திறன்தேர்வு மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 6.9.17
மேலதிக தகவல்களுக்கு: www.aiimsrishikesh.edu.in

கெயில் நிறுவனத்தில் ஃபோர்மேன் பணி!

நிறுவனம்: கெயில் எனப்படும் கேஸ்
அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்
வேலை: ஃபோர்மேன், ஜூனியர் கெமிஸ்ட் உட்பட 6 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 151. இதில் ஃபோர்மேன் 75, ஜூனியர் கெமிஸ்ட் 12, ஜூனியர் சூப்பிரண்டென்ட்(மொழித் துறை) 5, அசிஸ்டென்ட் 15, அக்கவுன்ட் அசிஸ்டென்ட் 24 மற்றும் மார்க்கட்டிங் அசிஸ்டென்ட் 24  இடங்கள் காலியாக உள்ளன
கல்வித்தகுதி: ஃபோர்மேன் வேலைக்கு எஞ்சினியரிங் டிப்ளமோ, கெமிஸ்ட் வேலைக்கு எம்.எஸ்சி. கெமிஸ்ட்ரி, சூப்பிரண்டென்ட் வேலைக்கு இந்தியில் டிகிரி, அசிஸ்டென்ட் வேலைக்கு டிகிரி, அக்கவுன்ட் அசிஸ்டென்ட் வேலைக்கு பி.காம் மற்றும் மார்க்ெகட்டிங் வேலைக்கு பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: முதல் மூன்று வேலைகளுக்கும் 30 வயதுக்குள்ளும், மற்ற வேலைகளுக்கு 28 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்
தேர்வு முறை: எழுத்து, திறன் தேர்வு, மற்றும் கம்ப்யூட்டர் தேர்ச்சி
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.9.17
மேலதிக தகவல்களுக்கு: www.gailonline.com

எல்லைக்காவல் படையில்கான்ஸ்டபிள் பணி!
நிறுவனம்: துணை ராணுவப் படைகளில் ஒரு பிரிவான இந்தோ திபேத் எல்லைப்படை
வேலை: டெய்லர், காப்பாளர், குக் உட்பட 8 பிரிவுகளில் கான்ஸ்டபிள் பதவியிலான பணி
காலியிடங்கள்: மொத்தம் 303
கல்வித்தகுதி: 10வது படிப்புடன் துறை தொடர்பான அனுபவம் அல்லது 1 வருட சான்றிதழ் படிப்பு
வயது வரம்பு: 18 - 23, 18 - 25 வரை என இரண்டு பிரிவாக வயது வரம்பு உள்ளது
தேர்வு முறை: உடல் அளவுகள் மற்றும் உடல் திறன்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 7.9.17
மேலதிக தகவல்களுக்கு: www.itbpolice.nic.in

இந்திய விமானப்படையில் ஸ்டோர் கீப்பர் வேலை!
நிறுவனம்: இந்திய விமானப்படையின் டெல்லி கிளையில்
வேலை: ஸ்டோர் சூப்பிரண்டென்ட் மற்றும் ஸ்டோர் கீப்பர் எனும் இரு பிரிவுகளில் குரூப் சி சிவிலியன் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 95. இதில் முதல் வேலையில் 55, இரண்டாம் வேலையில் 40 இடங்கள் காலியாக உள்ளன
கல்வித்தகுதி: முதல் வேலைக்கு டிகிரியும் இரண்டாம் வேலைக்கு +2 படிப்பும் அவசியம்
வயது வரம்பு: 18 - 25
தேர்வு முறை: எழுத்து, திறன்தேர்வு மற்றும் பரிசோதனைத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 11.9.17
மேலதிக தகவல்களுக்கு: www.indianairforce.nic.in

பட்டதாரிகளுக்கு எல்.ஐ.சி. நிறுவனத்தில் வேலை!
நிறுவனம்: எல்.ஐ.சி ஹவுசிங் ஃபினான்ஸ் லிமிடெட்
வேலை: அசிஸ்டென்ட் மற்றும் அசிஸ்டென்ட் மேனேஜர் எனும் இரு பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 264. இதில் முதல் வேலையில் 164 மற்றும் இரண்டாவது வேலையில் 100 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித்தகுதி: முதல் வேலைக்கு ஏதாவது டிகிரியும், இரண்டாம் வேலைக்கு எம்.பி.ஏ படிப்பும் அவசியம்
வயது வரம்பு: 21 - 28
தேர்வு முறை: எழுத்து, நேர்முகம் மற்றும் மருத்துவ சோதனை
விண்ணப்பிக்க
கடைசித் தேதி: 7.9.17
மேலதிக தகவல்
களுக்கு: www.lichousing.com

பட்டதாரிகளுக்கு முப்படையில் அதிகாரி பணி!
நிறுவனம்: மத்திய அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் யு.பி.எஸ்.சி முப்படை அதிகாரிகளுக்கான சி.டி.எஸ் தேர்வு பற்றி அறிவிப்பு செய்திருக்கிறது
வேலை: அதிகாரி பணி
காலியிடங்கள்: மொத்தம் 414. இதில் டேராடூனில் உள்ள இண்டியன் மிலிட்டரி அகாடமியில் 100, கேரளாவின் எழிமலாவில் உள்ள இண்டியன் நேவல் அகாடமியில் 45, ஐதராபாத்தில் உள்ள ஏர்ஃபோர்ஸ் அகாடமியில் 32, சென்னையில் உள்ள ஓ.டி.ஏ. எனும் ஆபிசர் டிரெயினிங் அகாடமியில் டெக்னிக்கல் பிரிவில் ஆண்களுக்கு 225 , நான் டெக்னிக்கல் பிரிவில் பெண்களுக்கு 12 இடங்களும் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி: மிலிட்டரி மற்றும் சென்னை டிரெயினிங் அகாடமி வேலைக்கு டிகிரியும், நேவல் அகாடமி வேலைக்கு எஞ்சினியரிங், ஏர்ஃபோர்ஸ் வேலைக்கு இயற்பியல் மற்றும் கணிதத்தை எடுத்து டிகிரியும் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: மிலிட்டரிக்கு 2.1.94 முதல் 1.1.99 வரையும், நேவல் வேலைக்கு 2.1.94 முதல் 1.1.99 வரையும், ஏர்ஃபோர்ஸ் வேலைக்கு 20 முதல் 24 வரையும், ஓ.டி.ஏ. வேலைக்கு (ஆண்கள்) 2.1.93 லிருந்து 1.1.99 வரையும் அதே வேலையில் பெண்கள் 2.1.93 முதல் 1.1.99 வரையும் இடைப்பட்ட ஆண்டில் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
தேர்வு முறை: பயிற்சிக்கு பின் இந்த வேலைகள் உறுதிசெய்யப்படும்
விண்ணபிக்க கடைசித் தேதி: 8.9.17
மேலதிக தகவல்களுக்கு: www.upsconline.nic.in

ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை
நிறுவனம்: ஓரியன்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், புதுடெல்லி
வேலை: அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபிசர் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 300. இதில் அக்கவுன்ட்ஸ் 20, ஆக்சுவரிஸ் 2, எஞ்சினியர்ஸ் 15, லீகல் 30, மெடிக்கல் ஆபிசர் 10 மற்றும் ஜெனரலிட்டீஸ் எனும் பொதுவேலை 223 இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: துறைகள் சார்ந்த கல்வித்தகுதி இருத்தல் அவசியம். அதன்படி எம்.காம்., எம்.பி.ஏ., ஆக்சுவரிஸ், சட்டம், எஞ்சினியரிங், எம்.பி.பி.எஸ் மற்றும் ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்களுக்கு இந்த வேலைகள் கிடைக்கலாம்.
வயது வரம்பு: 21 - 30. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.9.17
மேலதிக தகவல்களுக்கு: www.orientalinsurance.org.in