IISR வழங்கும் முனைவர் ஆய்வுப் பட்டப்படிப்பு!



அட்மிஷன்

முதுநிலை அறிவியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!  திருவனந்தபுரத்திலிருக்கும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் (Indian Institute of Science Education and Research, Thiruvananthapuram) 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பு (Ph.D) தொடங்கவுள்ளது. இந்த ஆய்வுப் பட்டப்படிப்பில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

மூன்று பாடப்பிரிவுகள்: இந்நிறுவனத்தில் உயிரி அறிவியல்கள் (Biological Sciences), வேதியியல் அறிவியல்கள் (Chemical Sciences), இயற்பியல் அறிவியல்கள் (Physical Sciences) எனும் மூன்று வகையான அறிவியல் பாடங்களில் முனைவர் பட்டப்படிப்புகளுக்கான இடங்கள் இருக்கின்றன.

கல்வித்தகுதி்: உயிரி அறிவியல்கள் பாடப்பிரிவிற்கு உயிரியல் அறிவியல்கள்/ வேதியியல் அறிவியல்கள்/இயற்பியல் அறிவியல்கள்/கணிதம்/உயிரித் ழில்நுட்பங்கள்/வேளாண்மை அறிவியல்கள்/கால்நடை அறிவியல்கள் (Biological Sciences/Chemical Sciences/Physical Sciences/ Mathematics/ Bioinformatics/ Agricultural Sciences/Veterinary Sciences) ஆகிய பாடங்களில் ஏதாவதொன்றில் +2க்குப் பின்பு ஐந்தாண்டுகள் கொண்ட முதுநிலை அறிவியல் (M.Sc) பட்டம் அல்லது அலோபதி எனப்படும் ஆங்கில வழி மருத்துவத்தில் இளநிலைப் பட்டம் (M.B.B.S) முடித்திருக்க வேண்டும். மேலும் 60% மதிப்பெண்களுடன் (புள்ளிக்கணக்கில் (GCPA) 6.5) ஆகஸ்ட் 1ம் தேதிக்கு முன்பாகப் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் CSIR-UGC-JRF/ DBT-JRF (Category I) / ICMR-JRF / 1 முதல் 90 இடங்களுக்குள் GATE (Ecology and Evolution) / JGEEBILS (GS-2017) தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும்வேதியியல் அறிவியல்கள் பாடப்பிரிவிற்கு வேதியியல் அறிவியல் பாடமொன்றில் +2க்குப் பின்பு ஐந்தாண்டுகள் கொண்ட முதுநிலை அறிவியல் (M.Sc) பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்களுடன் (புள்ளிக்கணக்கில் (GCPA) 6.5) ஆகஸ்ட் 1ம் தேதிக்கு முன்பாகப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் CSIR-UGC-JRF/ ஆகஸ்ட் 1, 2017க்கான GATE அல்லது DST INSPIRE Ph.D ஆய்வு உதவித்தொகைக்கான தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும்.

இயற்பியல் அறிவியல்கள் பாடப்பிரிவிற்கு இயற்பியல் அறிவியல்கள் / மூலப்பொருட்கள் அறிவியல்கள் (Physical Sciences/Materials Science) +2க்குப் பின்பு ஐந்தாண்டுகள் கொண்ட முதுநிலை அறிவியல் (M.Sc) பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்களுடன் (புள்ளிக்கணக்கில் (GCPA) 6.5) ஆகஸ்ட் 1ம் தேதிக்கு முன்பாகப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது உயிரி மருத்துவம்/கருவி மயமாக்கல்/  மின்னியல்/மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு ((Biomedical/ Instrumentation/Electrical/ Electronic, and Communication Engineering) பொறியியல் பாடமொன்றில் 60% மதிப்பெண்களுடன் (புள்ளிக்கணக்கில் (GCPA) 6.5) ஆகஸ்ட் 1ம் தேதிக்கு முன்பாக முதுநிலைப் பட்டம் (M.E / M.Tech) பெற்றிருக்க வேண்டும். அத்துடன் CSIR-UGC-JRF/ ஆகஸ்ட் 1, 2017க்கான GATE (2016) / CSIR-UGC-JRF/ JEST-2017 / INSPIRE Ph.D தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த முனைவர் ஆய்வுப் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://appserv.iisertvm.ac.in/phd/ எனும் இணையதளத்திற்குச் சென்று, இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன்பாக, இந்த இணையதளத்திலிருக்கும் தேவையான ஆவணங்கள் (Required Documents) எனும் பக்கத்திற்குச் சென்று, அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் விண்ணப்பத்திற்குத் தேவையான அனைத்து ஆவணங்கள் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.200, எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.100 எனச் செய்முறைக் கட்டணத்தை (Processing Fee) பாரத மாநில வங்கிக் கணக்கு (Powerjyoti Account) வழியில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.4.2017.

மாணவர் சேர்க்கை: விண்ணப்பித்தவர்களிலிருந்து தகுதியுடையவர்களுக்கான பட்டியல் (Shortlisted Candidates) தயார் செய்யப்பட்டு 3.5.2017 அன்று இந்நிறுவனத்தின் http://www.iisertvm.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். அதன் பின்னர், அந்தத் தகுதிப்பட்டியலில் இடம்பெற்றவர்களில், உயிரியல் அறிவியல்கள் பாடப்பிரிவுக்கு 5.6.2017 முதல் 7.6.2017 வரையிலான மூன்று நாட்களும், வேதியியல் அறிவியல்கள் பாடப்பிரிவுக்கு 2.6.2017 முதல் 3.6.2017 வரையிலான இரண்டு நாட்களும், இயற்பியல் அறிவியல்கள் பாடப்பிரிவுக்கு 14.6.2017 முதல் 16.6.2017 வரையிலான மூன்று நாட்களும் நேர்காணல்கள் நடத்தப்பெற்று மாணவர் சேர்க்கை அளிக்கப்படும்.

மேலும் கூடுதல் விவரங்களை அறிய, http://appserv.iisertvm.ac.in/phd/ என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது “IISER - Thiruvananthapuram, Computer Science Building, College of Engineering Trivandrum Campus, Trivandrum - 695016, Kerala” எனும் முகவரி யில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியிலோ அல்லது இந்நிறுவனத்தின் 0471  2597459 / 2597438 எனும் தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டோ தகவல்களைப் பெற முடியும்.

- முத்துக்கமலம்