கலங்கரை விளக்கம்!



வாசகர் கடிதம்

எஞ்சினியரிங் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை விரிவாக விளக்கி அதில் சிறந்த கல்வி நிறுவனங்களைப் பட்டியலிட்டிருப்பது மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் விதமாக இருந்தது.
  - ஜி.சுந்தரேசன், மதுரை.
 
மனிதர்களின் உடன்பிறந்த வல்லவனான ஈகோவின் தன்மைகளைக் குறித்து நிவாஸ் பிரபுவின் ‘உடல்… மனம்… ஈகோ!’  உளவியலின் பல்வேறு நிலையை உணர்த்தும் அருமையான தொடர்.
 - ஆர்.மலர்மதி, கோவை-4
 
மாணவர்களில் பெரும்பான்மையோர் மருத்துவம், எஞ்சினியரிங் மட்டுமே படிக்கும் நிலையில் அவர்களுக்கான பக்கங்களோடு கலை அறிவியல் மாணவர்களுக்குமான தகவல்களையும் இணைத்து தந்திருப்பது ‘கல்வி-வேலை வழிகாட்டி’ இதழின் தரத்திற்குத் தக்க சான்று.
- கா. சம்பத், ஈரோடு-2
 
பாதுகாப்புப் படை குறித்த தேர்வு விவரங்களும், காமராஜர் பல்கலையின் முதுநிலைப் பட்டப்படிப்புகள், கேம்பஸ் நியூஸ் எனப் பயனுள்ள தகவல்களோடு ‘கல்வி-வேலை வழிகாட்டி’ மாணவர்களுக்குச் சரியான வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக உள்ளது. 
- கே.சவிதாவினோத், திருவண்ணாமலை.
 
சுற்றுலா மேலாண்மை பட்டப்படிப்புகள், மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்கள் விரிவாகவும், விவரமாகவும் இருந்தன. அதேபோல், மகாராஷ்டிராவில் உள்ள முதியோர்களுக்கான பள்ளி, நவீன காலத்திலும் வயோதிகருக்கான அங்கீகாரம் வரவேற்கத்தக்கது.
- பி.மிருதுளா, தர்மபுரி.
 
வேலை வாய்ப்புகளைத் தொகுத்துத் தரும் வேலைரெடி! பகுதி தகவல்கள் அனைத்தும் கச்சிதம். சொல்லுக்கான பொருள் வாக்கியத்தில் எப்படி மாறுகிறது என்பதை எளிமையாக கூறும் சேலம் சுந்தர்ராஜின் ஆங்கிலத் தொடர் அற்புதம்.
- எம்.சேனாபதி, திருச்சி.