அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!



தவறில்லை என்பதுதான் தவறு!

அலுவலக வேலையில் ஆழ்ந்திருந்தார் ரகு. “சார்… ஒரு பிரபல பத்திரிகையில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வினாக்களில் இப்படிக் கொடுக்கப்பட்டிருந்தது. எந்தப் பகுதி தவறானது எனக் குறிப்பிட வேண்டும்.He remained(a) me that he has often told(b) me the not to play with fire(c) No error(d) (Answer given is (d)) இந்தப் பதில் சரிங்களா சார்?” என்றபடியே ஒரு தாளை நீட்டிக்கொண்டே வந்தமர்ந்தாள் ப்ரவீணா.

அதை வாங்கிப் பார்த்த ரகு, மெல்ல புன்னகைத்தார். “இல்லை ப்ரவீணா… உண்மையைச் சொல்லப்போனா முதல் மூன்று பகுதிகளிலுமே (a,b.c) தவறுகள் உள்ளன.

a) He remained என்பதில் remained என்பது தவறு. reminded என்றுதான் வரவேண்டும். (இதை ஆங்கிலத்தில் Lexical Error என்று சொல்வார்கள்.)

b) me that he has often told இந்த வாக்கியத்தில் he has என்பது தவறு. he had என்றுதான் வரவேண்டும். (இதை ஆங்கிலத்தில் Grammatical Error என்று சொல்வார்கள்.)

c) me the not to play with fire…. இந்தப் பகுதி syntactical error. அதாவது, the என்ற வார்த்தை இங்கு வர இயலாது. இந்தத் தவறு தட்டச்சு செய்தவரின் க்ளரிகல் எரர் ஆகவும் இருக்கலாம். அல்லது அதைத் திருத்தாமல் விட்ட அந்த ஆசிரி யரின் mind fade error (Thanks to Smith, the Captain of Australian Cricket team) இருக்கலாம்.

d) உண்மையிலேயே No Error என்ற இந்தப் பகுதி மட்டும்தான் தவறில்லாத பகுதி.

எனவே, தவறான பகுதியைக் குறிப்பிடு என்று சொன்னார்களா? அல்லது தவறே இல்லாத பகுதியைக் குறிப்பிடு என்று சொன்னார்களா? எனத் தெரியவில்லை.” என்றார் ரகு.ரகுவின் பதிலைக் கேட்ட ப்ரவீணா, “பள்ளிக்கூடங்களில்தான் புரிந்தோ புரியாமலோ அர்த்தம் தெரிந்தோ தெரியாமலோ மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கிறது.

35 மதிப்பெண் பெற்றால் பாஸ். ஆனால், அரசு போட்டித் தேர்வு பயிற்சி வினா-விடைகளையும் இப்படித்தான் படித்து மனப்பாடம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. இப்படி எந்த விளக்கமும் இல்லாமல் கொடுத்தால் எங்களைப் போன்றவர்களின் பாடு மிகவும் திண்டாட்டம்தான் சார்” என்றாள்.“சரி சார்... அடுத்த கேள்வி. இதையும் கொஞ்சம் விளக்கினால் நன்றாய் இருக்கும்” என்றவளைப் பார்த்த ரகு, “First of all let’s have a break baby” என்றவாறே எழுந்து சென்றார் ரகு.ஆங்கில வார்த்தைச் சந்தேகங்களுக்குத் தொடர்புகொள்ள: englishsundar19gmail.com

சேலம் ப.சுந்தர்ராஜ்