வேலை ரெடி!



வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

பத்தாம் வகுப்புக்கு விவசாய ஆய்வு நிறுவன வேலை

நிறுவனம்: இண்டியன் கவுன்சில் ஃபார் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் (ஐ.சி.ஏ.ஆர்) எனும் விவசாய ஆய்வு நிறுவனத்தின் மேகாலயா கிளை
வேலை: டெக்னிக்கல் அசிஸ்டென்ட், லேப் அசிஸ்டென்ட் உட்பட 18 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 66
கல்வித் தகுதி: சில வேலைகளுக்கு டிகிரியும் சில வேலைகளுக்கு பத்தாவது படிப்பும் போதுமானது
வயது வரம்பு: 18-30 (சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்ச்சி உண்டு)
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 13.1.16
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.icarneh.ernet.in

எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பலவித வேலைகள்

நிறுவனம்: மங்களூரில் உள்ள மங்களூர் ரிஃபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல் லிமிடெட்
வேலை: டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ஜூனியர் கெமிஸ்ட் மற்றும் அசிஸ்டென்ட் என 3 அடிப்படைப் பிரிவுகளில் இந்த வேலைகள் உள்ளன.
காலியிடங்கள்: மொத்தம் 98
கல்வித் தகுதி: குறிப்பிட்ட துறைகளில் டிகிரி அல்லது டிப்ளமா படிப்புடன் வேலை அனுப
வமும் அவசியம். வயது வரம்பு: 30க்குள்
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 12.1.16.விண்ணப்பிக்கும் முறை தகவல்
களுக்கு: www.mrpl.co.in

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் மேனேஜர்!

நிறுவனம்: நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் லிமிடெட்
வேலை: ஜெனரல் மேனேஜர்,
டெப்யூட்டி  மேனேஜர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் எஞ்சினியர்
காலியிடங்கள்: மொத்தம் 70. (இதில் மேனேஜர் 3, டெப்யூட்டி மேனேஜர் 8, மற்றும் எக்ஸிகியூட்டிவ் எஞ்சினியர் 59)
கல்வித் தகுதி: துறைக்கேற்ப டிகிரியும் வேலை அனுபவமும் அவசியம்
வயது வரம்பு: முதல் வேலைக்கு 54க்குள்ளும், இரண்டாம் வேலைக்கு 52க்குள்ளும் மூன்றாம் வேலைக்கு 36க்குள்ளும் இருத்தல் அவசியம்.
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.1.16
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.nlcindia.com



அரசு ஆலையில் 366 பணியிடங்கள்!

நிறுவனம்: விசாகப்பட்டினத்திலுள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான விசாக் ஸ்டீல் ப்ளான்ட் எனும் இரும்பு ஆலை
வேலை: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் துறையில் ஜூனியர் ட்ரெயினி வேலை
காலியிடங்கள்: மொத்தம் 366. இதில் முதல் வேலையில் 236, இரண்டாம் வேலையில் 110, மூன்றாம் வேலையில் 20 இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித் தகுதி: குறிப்பிட்ட துறைகளில் டிப்ளமா எஞ்சினியரிங் படிப்பு
வயது வரம்பு: குறைந்தபட்ச வயது பொதுப்பிரிவினருக்கு 27, ஓ.பி.சி 30, மற்றும் எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 32க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.1.16
விண்ணப்பிக்கும் முறை மற்றும்
மேலதிக தகவல்களுக்கு: www.vizagsteel.com

வங்கி உதவி மேலாளர் பணி!

நிறுவனம்: சிட்பி எனப்படும் ஸ்மால் இண்டஸ்ட்ரிஸ் டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் இந்தியா (சிறு தொழில்களுக்கான மத்திய அரசின் பொதுத்துறை வங்கி)
வேலை: பி கிரேடிலான அசிஸ்டெண்ட்
மேனேஜர் வேலை.
காலியிடங்கள்: மொத்தம் 100
கல்வித் தகுதி: ஏதாவது டிகிரி.
வயது வரம்பு: 21-30.
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 11.1.16.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்
களுக்கு: www.sidbi.in

ராணுவத்தில் எஞ்சினியர் பணியிடம்!

நிறுவனம்: இந்திய ராணுவம்
வேலை: 47வது ஷார்ட் சர்வீஸ் கமிஷன் அடிப்படையில் டெக்னிக்கல் (எஞ்சினியரிங்) வேலை. திருமணமாகாத ஆண் / பெண் மற்றும் திருமணமான ஆண்களுக்கு மட்டுமான வேலை இது. ஆண்களுக்கு சிவில், மெக்கானிக்கல், போன்ற பல்வேறு எஞ்சினியரிங் துறைகளில் காலியிடங்கள் குறிப்பிடப்பட்டிருக்க, பெண்களுக்கு மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் டெலிகம்யூனிகேஷன் துறைகளில் காலியிடங்கள் உள்ளன.
காலியிடங்கள்: 111. இதில் ஆண்களுக்கு 100, பெண்களுக்கு 10, விதவைகளுக்கு 1 இடம் காலியாக உள்ளது.
கல்வித் தகுதி: எஞ்சினியரிங் டிகிரி
வயது வரம்பு: 20-27
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 8.1.16
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in

தொகுப்பு: டி.ரஞ்சித்