மத்திய அரசு அழைக்கிறது



பட்டதாரிகளுக்கு எல்.ஐ.சி.யில் துணை நிர்வாக அதிகாரி வேலை

700 பேருக்கு வாய்ப்பு

இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி நிறுவனத்தில் காலியாக உள்ள, 700 துணை நிர்வாக அதிகாரி (Assistant  Administrative  Officer -Generalist) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளங்கலை, முதுகலைப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். 01.12.2015 தேதியின்படி 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களே விண்ணப்பிக்க இயலும். www.licindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.600 + பரிவர்த்தனை கட்டணம் ரூ.100 சேர்த்து ரூ.700 நெட் பேங்கிங் மூலம் செலுத்த வேண்டும்.

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வில், ரீசனிங் எபிலிட்டி, க்வான்டிடேட்டிவ் ஆப்டிடியூட், பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள், கம்ப்யூட்டர் அறிவு, ஆங்கில மொழி மற்றும் ஆங்கில இலக்கணம் உள்ளிட்ட பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். 300 மதிப்பெண்களுக்கான 160 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.  இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.1.2016. மேலும் விவரங்களுக்கு www.licindia.in/pages/Advertisement29thbatch.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கலாம்.

அரசு கப்பல் கட்டும் தளத்தில் ஃபிட்டர் வேலை

1121 பேருக்கு வாய்ப்பு

இந்திய கடற்படைக்கான கப்பல்கள் தயாரிப்பு, பழுதுபார்ப்பு பணிகளைக் கவனிக்கும் விசாகப்பட்டினம் அரசு கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள டிரேட்ஸ்மேன் (ஸ்கில்டு) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 1,121 பேர் நியமிக்கப்பட உள்ளார்கள். கம்ப்யூட்டர் ஃபிட்டர், எலக்ட்ரானிக்ஸ் ஃபிட்டர், ரேடார் ஃபிட்டர், ரேடியோ ஃபிட்டர், சோலார் ஃபிட்டர், மெஷினரி கண்ட்ரோல் ஃபிட்டர், எலக்ட்ரிக்கல் ஃபிட்டர், இன்ஸ்ட்ருமென்ட் எஞ்சின் ஃபிட்டர்,  பாய்லர் மேக்கர், ஐஸ் ஃபிட்டர், ஜி.டி. ஃபிட்டர், பைப் ஃபிட்டர், ரெப்-ஏசி ஃபிட்டர், பேட்டன் மேக்கர், பவுண்டரி, பெயின்டர், பிளாக்ஸ்மித், பிளேட்டர், சிப்ரைட், வெல்டர், மில்ரைட் உள்ளிட்ட பிரிவுகளில் பணிகள் உள்ளன. இந்தப் பிரிவுகளில் தேசிய அப்ரண்டிஸ் சான்றிதழ் (National Apprenticeship Certificate - NAC) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.



25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பிசி. பிரிவினருக்கு 3 ஆண்டு களும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. www.indiannavy.nic.in/content/naval-dockyard-visakhapatnam என்ற இணையதளப் பக்கத்தில் உள்ள மாதிரி விண்ணப்பத்தை பிரதியெடுத்து அல்லது அதைப்போல் தயாரித்து நிரப்பி, புகைப்படம், சான்றிதழ் நகல்கள், ஆகியவற்றை இணைத்து The Admiral Superintendent (for Manager Personnel), Naval Dockyard, Visakhapatnam- 530014  என்ற முகவரிக்கு விரைவு தபால் அல்லது பதிவு தபால் மூலம் அனுப்பவேண்டும்.  விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.1.2016. கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தைப் பார்க்கலாம்.                            
                                                                                                     
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ மையங்களில் வேலை   

395 பேருக்கு வாய்ப்பு        

மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கும் இ.எஸ்.ஐ. நிறுவனத்தின் தமிழக மருத்துவ மையங்களில் காலியாக உள்ள ‘அப்பர் டிவிஷன் கிளர்க்’ மற்றும் ‘மல்ட்டி டாஸ்கிங் ஸ்டாப்’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 395 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ‘மல்ட்டி டாஸ்கிங் ஸ்டாப்’ பணிக்கும் இளங்கலைப் பட்டதாரிகள்  ‘அப்பர் டிவிஷன் கிளர்க்’ பணிக்கும் விண்ணப்பிக்கலாம். ‘அப்பர் டிவிஷன் கிளர்க்’ பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயதை கடந்தவராகவும், 27 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்கவேண்டும். மல்ட்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு 18 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கு வயது தளர்வுகள் அனுமதிக்கப்படும்.  

www.esic.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். புகைப்படம், கையெழுத்து போன்றவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். பொதுப் பிரிவினர் ரூ.300 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆங்கிலத் திறன், பொது அறிவு, விழிப்புணர்வு, கம்ப்யூட்டர் அறிவு போன்ற தகுதிகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இணையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி; 6.1.2016. மேலும் விரிவான விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தைப் பார்க்கலாம்.