யார் தெரியுமா?




Chimil magazine, Chimil weekly magazine, Tamil Magazine Chimil, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


யார் தெரியுமா?

ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் பிறந்தபோது வானில் வால்நட்சத்திரம் தோன்றியதாம். அவர் இறந்தபோதும் வானில் வால் நட்சத்திரம் தோன்றியதாம். அந்தப் பெருமைக்குரியவர் யார் தெரியுமா? மார்க்ட்வைன்

சரியான பதிலடி

சர்ச்சில் நாடாளுமன்றத்தில் தான் சந்தித்த அவமானங்களையும், சோதனைகளையும்  சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு உறுப்பினர் உங்கள் அனுபவங்கள் ‘முட்டாள்களுக்குத்தான் பாடம் புகட்டும்’ என்றார்.
“நண்பரே உமக்குப் பயன்படும் என்றல்லவா சொல்லிக் கொண்டிருந்தேன்” என்று சர்ச்சில் பதிலளித்ததும் அவை சிரிப்பில் மூழ்கியது.

உங்களுக்கு என்ன பழம் பிடிக்கும்?

காகத்திற்கு வேப்பம்பழம் பிடிக்கும். கிளிக்கு கோவைப்பழம் பிடிக்கும். வௌவாலுக்கு அசோகப்பழம் பிடிக்கும். உங்களுக்கு என்ன பழம் பிடிக்கும்?

காந்தி உயிரோடிருந்தால்...

காந்தியடிகள் கொல்லப்பட்ட பிறகு, அந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்ட கோட்சேயின் சார்பில் ‘தூக்குத்தண்டனை விதிக்கக்கூடாது. காந்தி உயிரோடிருந்தால் இதை அனுமதிக்கமாட்டார்” என்று எழுதப்பட்ட கருணை மனு, அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி அவர்களிடம் கொடுக்கப்பட்டது.

அதற்கு ராஜாஜி அளித்த பதில்:

“உண்மைதான். காந்திஜி உயிரோடிருந்தால் கோட்சேக்குத் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டு இருக்காது.”

உங்கள் ஐக்யூ வளர்ச்சி எப்படி?

ஒருவரது அறிவுத்திறனை வளர்க்கும் அளவுகோல் ஐக்யூ எனப்படும்.

90-100 வரை ஐக்யூ உள்ளவர்கள் சராசரி மனிதர்கள்
110-120 சற்று மேலானவர்கள்
120-130 சிறந்த அறிவாளிகள்
130-140 பிறவிப் புத்திசாலிகள்
140க்கும்மேல் அதிமேதாவிகள்.


தெரியுமா?

* பழங்குடியினர் இல்லாத இந்திய மாநிலம்
   ஹரியானா
* உலகிலேயே அதிக ஆண்டுகள்(103)
  தொடர்ந்து எழுதியவர் ஏர்னஸ்ட் லோப்ட்ஸ்
* இந்தியாவில் 1957&ல் திட்டக் குழு
  அமைக்கப்பட்டது.
 
நம்பினால் நம்புங்கள்

சாகி என்னும் குரங்கருகில் சப்தமாகக் கத்தினால் அந்த அதிர்ச்சியிலேயே இறந்துவிடும்!

கிராம் பெர்ரி என்னும் பழம் ஒரு வருடம் வரை கெடாது.

கிளி ஓராண்டிற்கு ஒரு முட்டை மட்டுமே இடும்.

பெண் சிலந்திகள் இணை கூடிய பின்னர் ஆண் சிலந்திகளைக் கொன்று விடும்.
 
இவர் இப்படி நீங்கள் எப்படி?

பிரபல கணித மேதை, விஞ்ஞானி ஆல்பர்ட் ஈன்ஸ்டீன் குளிக்கும்போது குளியல் அறைக் கதவுகளைத் தாழ்போடாமல் தான் குளிப்பாராம்.

சதிலீலாவதி

எம்.ஜி.ஆர் அறிமுகமான முதல் படம் இது. டி.எஸ்.பாலையா, இயக்குநர் கிருஷ்ணன்(பஞ்சு), ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் ஆகிய அனைவருக்கும் இதுவே முதல் படம்.

அப்படியா!

தமிழில் பனி என்றால் மூடுபனி மலையாளத்தில் பனி என்றால் காய்ச்சல் தெலுங்கில் பனி என்றால் வேலை
முக்கிமலை நஞ்சன்