
சமீபத்தில் வெளிவந்த ‘சாத் கூன் மாப்’ புகழ் பிரியங்கா சோப்ராவின் முதல் படம் தமிழன். 2002 இல் வெளிவந்த இப்படத்தில் விஜய்யோடு இணைந்து நடித்துள்ளார்.

நாற்பது வயதான பத்மா லஷ்மி அமெரிக்காவின் ரியலிடி ஷோவான டாப் செப்பில் நடித்துள்ளார். சமீபத்தில் தனது மகளின் முதலாவது பிறந்த நாளை பஹாமஸ் கடற்கரையில் கொண்டாடினார். அப்போது பிக்னி உடையிலிருந்தார் நடிகை. சோடாவிற்கு பதில் தேநீர் அருந்தும்படி தனது தனிப்பட்ட இணைய தளத்தில் அறிவுரை கூறியுள்ளார் இவர்.

நீங்கள் நிர்வாணமாகப் பார்க்க விரும்பும் பெண் யார் என 16 லிருந்து 35 வயதானவர்களிடையே ஒரு வாக்கெடுப்பு நடத்தியபோது 40 சதவீதத்தினர் ஐஸ்வர்யா ராயைத் தேர்ந்தெடுத்தனர். படத்தில் ஓவியர் அமிர்தா ஷெர்ஜில் தன்னைத்தானே வரைந்து கொண்ட நிர்வாண ஓவியங்களில் ஒன்றைக் காணலாம்.

ஆஷா போஸ்லே ‘மாயி’ என்ற படத்தில் நடிக்கிறார். புறக்கணித்த மகனிடமிருந்து பிரிந்த தாய் மகளிடமும் மருமகளிடமும் வாழ்வது இப்படத்தின் கதையாம்.

ராஜஸ்தானிய ஓவியர் கோபால்சுவாமி கேடன்ச்சி வரைந்த நவீன மோனாலிஸா ஓவியம் இது. மோனாலிசா ராஜஸ்தான் மங்கையாகவே காட்சித் தருகிறார். இவர் தத்ரூபமாகவும் கவர்ச்சிகரமாகவும் ஓவியங்கள் வரைவதில் புகழ் பெற்றவர்.
க.ரவீந்திரன்