குளிர் காயலாம்!



1600 கோடி ரூபாய் செலவில் ஜேம்ஸ் பாண்ட் படமா? நம்ம சென்னையின் வெள்ள நிவாரணத்துக்கு ஒதுக்கியது அதில் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லையே சாமி!
- ஜி.சூரஜ்குமார், கோவை.

‘பென்சில்’ சைஸ் இருக்கும் மனோபாலா ‘மன்சில்’ இவ்வளவு விஷயம் இருக்கிறதா? வாரா வாரம் படித்து வியக்கிறோம் ‘நான் உங்கள் ரசிகன்’ தொடரை!
- ஆர்.செல்வி ராஜவேல், மஞ்சக்கொல்லை.

‘கபாலி’ படத்துக்காக ராதிகா ஆப்தே மட்டுமா வெயிட்டிங்? நாங்களும்தான். ஆனால், அதுவரை குளிர் காய ஆப்தேவின் ஹாட் போட்டோக்களைத் தந்ததற்கு தேங்க்ஸ்!
- எச்.பால்பாண்டி, திருப்பூர்.

‘ஃபேண்டஸி கதைகள்’ தோரணத்தில் முதல் மலராய் வந்த ‘மாயாஜால ராட்டினம்’, சிரிக்கவும் வைத்தது; சிந்திக்கவும் வைத்தது. அடுத்த வார ஆவலை அதிகப்படுத்தியது!
- ஜெ.வி.ஜான்சிராணி, கடலூர்.

ஒரு தேர்ந்த யானைப் பாகன் போல மலையாள நடிகர் ஜெயராம் யானைகளைப் பற்றி A to Z தகவல்களைத் தந்தது வியப்பு. யானை பற்றி புத்தகம் எழுத அவர் சரியான ஆள்தான்!
- டி.வி.யசோதா குமார், புதுச்சேரி.

மண்ணே இல்லாமல் விவசாயம் செய்யும் வித்தியாச வழிமுறை அசத்தல். நகரத்தில் வசிப்பவர்களை இந்த விவசாயம் நிச்சயம் ஈர்க்கும். ஹாபி விவசாயிகளாக்கும்!
- எஸ்.வி.குணசேகரன், சென்னை-49.

மோடியை பிரதமராக்கியதும் பீகார் தேர்தலில் அதே மோடியை கவிழ்த்துவிட்டதும் அரசியல் சாணக்கியர் பிரசாந்த் கிஷோர் என்பது அறிந்து வியந்தோம்!
- பி.கே.செந்தாமரை, விழுப்புரம்.

‘தூக்கு போடறதுன்னா என்னப்பா?’ எனும் நா.முத்துக்குமாரின் சிறுவயது கேள்வி உருக்கம். உறவுகளின் உன்னதத்தைப் போற்றும் வார்த்தைகளால் வாரா வாரம் மனதைத் தொடுகிறார் கவிஞர்.
- இரா.மேகலா சுந்தர், மதுரை.

‘செரிப்ரல் பால்ஸி’ எனும் நோய் முடக்கிப் போட்டாலும் தளராது உழைத்து, வாழ்வில் உயரும் இரட்டையர்கள் சுந்தர்ராம் - ராம் இருவரும் உதாரண புருஷர்கள்!
- கே.செமிகபூர், நாகை.

‘மகிழ்ச்சி எங்கே கிடைக்கிறது?’ எனப் புரியவைத்த ஐந்து ஐடியாக்களைப் படிக்கும்போதே மகிழ்ச்சி பொங்கியது. மனம் சோர்வுற்றவர்களுக்கு அது உற்சாக டானிக்!
- சி.அதியமான், சென்னை-14.