கோலிவுட கல்யாண சீஸன்!
நகுல் - ஸ்ருதி பாஸ்கர்
‘‘என்னோட ஃப்ரெண்டை மீட் பண்ணப் போனப்போ, ஸ்ருதியை சந்திச்சேன். முதல் சந்திப்பிலேயே ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். நட்பு காதலாச்சு. அடுத்த வருஷ துவக்கத்திலேயே எங்க கல்யாணம் இருக்கும்!’’ - செம ஹேப்பி ஃபீல் தருகிறார் நகுல். ‘‘நகுல் ரொம்ப சிம்பிள். எப்பவும் பாஸிட்டிவ்வா பேசுவார். அவரை எனக்கு அஞ்சு வருஷமா தெரியும்..!’’ என்கிற ஸ்ருதி பாஸ்கர், தன்னைப் பற்றி அறிமுகம் தருகிறார்.
‘‘சொந்த ஊர் சென்னை. அப்பா பாஸ்கர், ஒளிப்பதிவாளர். ஜர்னலிசம் படிச்சிட்டு வெளிநாட்டுல பேஸ்ட்ரி அண்ட் சாக்லெட் கோர்ஸ் படிச்சு முடிச்சேன். இப்ப எம்.பி.ஏ பண்ணிக்கிட்டே சத்யம் சினிமாஸ்ல வொர்க் பண்றேன். முதல்ல நகுல்தான் காதலைச் சொன்னார்.
அப்புறம் எங்க வீட்ல அப்பா ரொம்ப தயங்கினாங்க. ‘எனக்கு நகுல் மேல இருந்தது லவ்தானா? இல்ல வெறும் இன்ஃபேச் சுவேஷனா?’னு சந்தேகம் இருந்தது அப்பாவுக்கு. அப்புறம்தான் எங்க காதல் எவ்வளவு ஸ்ட்ராங்னு தெரிஞ்சு வீட்ல சம்மதிச்சாங்க. கண்டிப்பா மேரேஜுக்கு வந்திடுங்க!’’ - கண்களில் கலர்ஃபுல் கனவுகள் மின்ன பேசுகிறார் ஸ்ருதி.
- மை.பாரதிராஜா
|