ஜோக்ஸ்
‘‘டாக்டர்! தினமும் காலைல பத்து மணிக்கு மேல தலை சுத்தறது...’’ ‘‘ஏன் அப்படி..?’’‘‘பத்து மணிக்கு மேலதானே டாக்டர் டாஸ்மாக் கடையைத் திறப்பாங்க!’’ - வி.சாரதி டேச்சு, சென்னை-5.
‘‘தலைவர் வீட்டு ரெய்டுல என்ன கலாட்டா..?’’ ‘‘சி.பி.ஐ. டைரக்டர்கூட தலைவர் செல்ஃபி எடுக்கணும்னு சொல்லியிருக்கார்..!’’ - அம்பை தேவா, சென்னை-116.
‘‘சி.பி.ஐ. ரெய்டு வந்தபிறகு தலைவர் குஷியா இருக்காரே... என்ன விஷயம்?’’ ‘‘இப்பத்தான் தன்னோட உண்மையான சொத்து மதிப்பு அவருக்குத் தெரிஞ்சுதாம்..!’’ - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
‘‘தலைவர் சமீப நாட்களாக நடப்பதற்கு சிரமப்படுவதால், அவர்மீது செருப்பு எறிபவர்கள் அக்குபங்சர் செருப்பு இருந்தால் எறியும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்!’’ - வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
ஸ்பீக்கரு...
‘‘2016ம் ஆண்டில் கண்டிப்பாக கூட்டணி சேர்ந்துதான் தேர்தலை சந்திக்கப் போகிறோம் என்பதால், மற்ற கட்சிகளை இப்போதே வாய் வலிக்க திட்டித் தீர்த்துக்கொள்ளவும் என...’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
தத்துவம் மச்சி தத்துவம்
என்னதான் ‘பொறுமை கடலினும் பெரிது’ன்னு சொன்னாலும், அதுக்காக பொறுமையில படகு, கப்பல் எல்லாம்விட முடியாது! - ஜி.தாரணி, மதுரை.
‘‘கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 234 தொகுதிகளையும் ஒதுக்கிய பெருந்தன்மை எங்கள் தலைவரைவிட வேறு எந்தத் தலைவருக்கு உண்டு என்று கேட்க விரும்புகிறேன்...’’ - கே.ஆனந்தன், தர்மபுரி.
|