ஜோக்ஸ்
‘‘நம்ம தலைவர் கட்டின மேம்பாலம் திறப்பு விழா கல்வெட்டை பார்த்துட்டு ஏன் ரொம்ப கோபமா இருக்காரு..?’’‘‘கான்ட்ராக்டர்கிட்ட தலைவர் வாங்கின கமிஷன் தொகை எவ்வளவுன்னும் அந்தக் கல்வெட்டுல போட்டுட்டாங்களாம்!’’ - வி.சாரதி டேச்சு, சென்னை-5.
‘‘கூட்டணிக்காக மற்ற தலைவர்கள் வாசலைத்தான் திறந்து வைப்பார்கள். எங்கள் தலைவர் தெருமுனையிலேயே அமர்ந்திருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!’’ - வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
‘‘மகளிரணித் தலைவி பேரை ஏன் தலைவர் திரும்பத் திரும்பச் சொல்றார்?’’ ‘‘மைக் டெஸ்ட்டிங் பண்றாராம்!’’ - அம்பை தேவா, சென்னை-116.
‘‘தலைவரை ஏன் கூட்டணியில இருந்து கழட்டி விட்டாங்க..?’’ ‘‘வருமானத்துக்கு அதிகமா சம்பாதிக்கத் தெரியலைன்னாம்..!’’ - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
‘‘தலைவர் தன்னோட பழைய குற்றப் பத்திரிகையையும் இப்ப வாங்கின குற்றப் பத்திரிகையையும் ஒப்பிட்டுப் பார்க்கறாரே... ஏன்?’’ ‘‘முன்புக்கும் இப்போதைக்கும் முன்னேற்றம் இருக்கான்னு பாக்கறார்!’’ - பா.ஜெயக்குமார், வந்தவாசி.
தத்துவம் மச்சி தத்துவம்
ஒரு பொண்ணுக்கு மீரா பாய், கஸ்தூரிபாய்னு தோழிகள் இருந்தாலும், அவங்களை ‘பாய் ஃபிரண்டு’னு சொல்ல மாட்டாங்க! - ஜி.தாரணி, மதுரை.
என்னதான் ஒரு டாக்டரம்மா வயசானவங்களா இருந்தாலும், அவங்க செய்யுற வைத்தியத்தை ‘பாட்டி வைத்தியம்’னு எல்லாம் சொல்ல முடியாது! - கா.பசும்பொன், மதுரை.
|