பதில் சொல்கிறார் தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வைப் பொறியாளர் (அமலாக்கம்) எம்.பழனியப்பன்மின்சாரத் திருட்டு தொடர்பாக நிறைய புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. உடனுக்குடன் அந்த புகார்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. இதுபற்றி புகார் செய்ய மண்டல அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மின் திருட்டு நடந்தால் 94458 57591 என்ற மொபைல் நம்பரில், அமலாக்கப் பிரிவு செயற்பொறியாளரிடம் புகார் செய்யலாம்.
கோவை முதல் தர்மபுரி வரையிலான பகுதிகளில் திருட்டு நடந்தால், 94430 49456 என்ற எண்ணிலும், உடுமலைப்பேட்டை முதல் கன்னியாகுமரி வரையிலான பகுதிகளில் திருட்டு நடந்தால், 94430 37508 என்ற எண்ணிலும் புகார் செய்யலாம். விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் திருட்டு நடந்தால் 94433 29851 என்ற எண்ணில் திருச்சி அமலாக்கப் பிரிவு செயற்பொறியாளரிடம் புகார் செய்யலாம். அல்லது 94444 06928 என்ற எண்ணில் என்னிடமே நேரடியாகவும் புகார் செய்யலாம்.
இது தவிர, மின்வாரியத் தலைவரின் நேரடி கண்காணிப்பில் ஒரு பறக்கும் படை செயல்படுகிறது. அதன் மொபைல் நம்பர் 94440 18955. இந்த எண்ணிலும் புகார் செய்யலாம். சிலருக்கு தாங்கள் வசிக்கும் பகுதி எந்த மண்டலத்தில் வரும் என்பது தெரியாமல் இருக்கலாம். அவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள எந்த எண்ணில் வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம். புகார் கிடைத்ததும் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு, ஆதாரங்கள் கிடைத்ததும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மின் திருட்டு பற்றி புகார் செய்பவர்களுக்கு, மின்திருட்டில் ஈடுபடுபவர்களிடம் எவ்வளவு அபராதம் வசூல் செய்யப்படுகிறதோ, அதில் 20 சதவிகிதம் (அதிகபட்சம் ரூ.20 ஆயிரம்) பரிசுத்தொகையாக வழங்கப் படும். இந்த பரிசைப் பெற புகார் செய்தவர், தன்னைப்பற்றிய விபரங்களையும், சில சான்றுகளையும் தர வேண்டியிருக்கும். இத்தகவலும் ரகசியமாக பாதுகாக்கப்படும். பரிசுபெற விரும்பாதவர்கள் தங்களைப் பற்றிய தகவல்களை தரத் தேவையில்லை!