படித்தது



பொன்னீலன் எழுதி என்சிபிஹெச் வெளியிட்டுள்ள ‘மறுபக்கம்’ நாவல். குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் நடந்த கலவரத்தை மையமாக வைத்து நகர்கிறது. ஜாதிகளின் வரலாறு, ஜாதி ஆதிக்கத்தின் வரலாறு, ஜாதிய ஆதிக்கத்துக்கு எதிரான போராட்ட வரலாறு, அரசியல் வரலாறு என பல தளங்களில் பயணிக்கிற அந்த நாவல், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் பாரம்பரியமான வழிபாட்டுத் தலங்களில் அதிவேகமாக நிகழ்ந்து வரும் வைதீக மதங்களின் ஆதிக்கத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

நாவல் உள்ளடக்கத்தில் பொன்னீலன் சில முன்முயற்சி களைக் கையாண்டுள்ளார். வழிபாடு, பண்பாடு, வாழ்வியல் முறை அனைத்தையும் மார்க்சிய நோக்கில், உணர்ச்சி ததும்பும் ரத்த வெதுவெதுப்போடு அலசுகிறது இந்த நாவல். இதைப் படித்தபோது பொன்னீலனின் எழுத்தில் இத்தாலிய இலக்கிய மேதை ஆண்டனி கிராம்சியின் சாயலை உணர்ந்தேன்.

- எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி