உலகத்தை உருவாக்கியது கடவுள் இல்லையா?



நாம் வாழ்கிற இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது? எல்லா மதங்களும் இதற்கு வெவ்வேறு விளக்கங்கள் வைத்திருக்கின்றன. ஆனால் இவை அனைத்திற்கும் பொதுவான இழை ஒன்று உண்டு: ‘கடவுள் தனது இணையற்ற சக்தியின் மூலம் பிரபஞ்சத்தை உருவாக்கினார். அதில் மனிதர்கள் வாழக் கூடிய இதமான சூழ்நிலையில் பூமியை அமைத்துக் கொடுத்தார்!’ மதங்கள் சொல்வது இருக்கட்டும்; அறிவியல் என்ன சொல்கிறது? ‘ஈர்ப்பு விசை போன்ற ஓர் ஆற்றல் மட்டும் இருந்துவிட்டால் போதும். பிரபஞ்சம் தானாகவே தன்னை உருவாக்கிக்கொள்ளும். அதை ஸ்விட்ச் போட்டு நடத்திவைப்பதற்குக் கடவுள் தேவையில்லை!’ என்று பிரபல இயற்பியல் நிபுணர் ஸ்டீஃபன் ஹாக்கிங் தனது லேட்டஸ்ட் புத்தகத்தில் எழுதிவைக்க, உலகமெங்கும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.


இந்த விஷயத்தில் அறிவியலாளர்கள் பலரும் இதுவரை ஒத்துப்போகவில்லை. ‘ஙிவீரீ ஙிணீஸீரீ’  எனப்படும் பெருவெடிப்புக் கொள்கையை முன்வைக்கிற விஞ்ஞானிகள்கூட, ‘இதையெல்லாம் தாண்டி பிரபஞ்சத்தின் உருவாக்கத்தில் கடவுளின் பங்களிப்பு இருக்கக்கூடும்’ என்பதுபோல்தான் பூசி மெழுகுகிறார்கள். அட, பிரபஞ்சத்தை விடுங்கள். அதில் இருக்கும் உயிர்களை உருவாக்கியது யார் என்கிற மர்மமே இன்னும் விலகவில்லை. டார்வின் கோட்பாடுகள் அறிமுகமாகிப் பல வருடங்கள் கடந்தபிறகும்கூட, ‘கடவுள்தான் எல்லா ஜீவராசிகளையும் படைத்தார்’ என்று நம்புகிறவர்கள் இன்றுவரை உண்டு.

இந்த நிலைமையில் பிரபஞ்சத்தின் உருவாக்கம் பற்றிய சர்ச்சைகளை மேலும் கிளறிவிடும் வகையில்   ‘ஜிலீமீ நிக்ஷீணீஸீபீ ஞிமீsவீரீஸீ’ என்ற புத்தகம் வெளியாகியிருக்கிறது. இதை எழுதியிருப்பவர்கள் இயற்பியல் நிபுணர்களான ஸ்டீஃபன் ஹாக்கிங் மற்றும் லியனார்ட் ம்ளோடினௌ.
‘இந்தப் பிரபஞ்சத்தில் நம்மைத் தவிர வேறு ஜீவராசிகளும் இருக்கக்கூடும்’ என்று ஏற்கனவே கருத்து தெரிவித்து பரபரப்பு கிளப்பிய ஸ்டீஃபன் ஹாக்கிங், இந்தமுறை கையில் எடுத்துக்கொண்டிருப்பது பிரபஞ்சத்தின் கதை. பழங்காலத்தில் மனிதர்கள் இந்தப் பிரபஞ்சத்தின் உருவாக்கத்தைப் பற்றி என்ன நினைத்தார்கள் என்பதில் தொடங்கி, அது சம்பந்தமான வெவ்வேறு அறிவியல் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள், சமீபத்திய புரிதல்களை எல்லாம் கலந்து, தன்னுடைய கருத்துகள், நம்பிக்கைகளோடு சேர்த்துப் பொட்டலம் கட்டியிருக்கிறார்.

இந்தப் புத்தகம் வெளியாவதற்கு முன்பாகவே பெரும் பரபரப்பு கிளம்பிவிட்டது. காரணம், இதில் கடவுள் பற்றி அவர் தெரிவித்திருக்கும் சில கருத்துகள். இருபது வருடங்களுக்கு முன்னால் ஸ்டீஃபன் ஹாக்கிங்கை சர்வதேசப் பிரபலமாக்கிய புத்தகம் ‘கி ஙிக்ஷீவீமீயீ பிவீstஷீக்ஷீஹ் ளியீ ஜிவீனீமீ’. அதில் பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றி அவர் எழுதியது: ‘இவையெல்லாம் எப்படி நிகழ்ந்தது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால் நாம் கடவுளின் மனோநிலையில் இருந்து சிந்திக்கவேண்டியிருக்கும்’.

ஆனால் இப்போது அறுபத்தெட்டு வயதில் ஸ்டீஃபன் ஹாக்கிங் கடவுள் பற்றிய தன்னுடைய கருத்தை மாற்றிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தப் புதிய புத்தகத்தில், ‘பிரபஞ்சம் உருவானது ஏன் என்று ஆராயும்போது கடவுளைத் துணைக்குக் கூப்பிடவேண்டிய அவசியமே இல்லை’ என்கிறார் அவர்.
ஹாக்கிங்கின் இந்தக் கருத்து ஒன்றும் புத்தம் புதியது அல்ல. பெரு வெடிப்பு உள்பட எல்லா நிகழ்வுகளையும் இயற்பியல் விதிகளைக் கொண்டே விளக்கிவிடமுடியும் என்று நம்புகிற விஞ்ஞானிகள் பலர் உண்டு. ஆனால் இப்போது அதைச் சொல்லியிருக்கிறவர் மிகப் பிரபலமான அறிவியலாளர் என்பதுதான் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

‘ஜிலீமீ நிக்ஷீணீஸீபீ ஞிமீsவீரீஸீ’ புத்தகம் வெளியாவதற்கு முன்பாக அதன் சில பகுதிகள் ‘டைம்ஸ் ஆஃப் லண்டன்’ இதழில் வெளியிடப்பட்டன. உடனடியாக மதத் தலைவர்கள் பலர் ஹாக்கிங்கிற்கு எதிராகக் கொடி தூக்கிவிட்டார்கள். இதில் காமெடி என்னவென்றால், இவர்களில் யாரும் ஹாக்கிங் என்ன சொல்கிறார் என்பதை இன்னும் முழுசாகப் படிக்கவில்லை. புத்தகத்திலிருந்து தேர்ந்தெடுத்து வெளியிடப்பட்ட பகுதிகளை மட்டும் படித்துவிட்டுக் கண்டனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

இதனால், ‘இவை எல்லாமே திட்டமிடப்பட்ட வியாபாரத் தந்திரமாக இருக்குமோ’ என்று சிலர் சந்தேகம் எழுப்புகிறார்கள். ‘ஹாக்கிங்கிற்கு அறிவியல் தெரியுமோ இல்லையோ, ஒரு புத்தகத்தை விற்பதற்கான சூட்சுமம் நன்றாகத் தெரியும்’ என்று இணையத்தில் பலர் நக்கலடிக்கிறார்கள்.
இவர்கள் சொல்வது போலவே, சென்ற வாரம் வெளியிடப்பட்ட புத்தகம் சுடச்சுட விற்றுத் தீர்ந்துகொண்டிருக்கிறது. ஹாக்கிங் அப்படி என்னதான் சொல்கிறார், கடவுளுக்கு எதிராக (?) அவர் முன்வைக்கும் ஆதாரங்கள் என்ன என்பதையெல்லாம் தெரிந்துகொள்வதற்கு மக்கள் முட்டி மோதுகிறார்கள்.

ஆனால் உண்மையில் இந்தப் புத்தகத்தின் அடிப்படை, நாத்திகவாதம் அல்ல. ‘‘பிரபஞ்சம், இந்த பூமி, அதில் வாழும் உயிர்கள் போன்றவற்றின் தோற்றத்தைப் பற்றிய கோட்பாடுகளை எளிய உதாரணங்களோடு விளக்குவதுதான் இதன் நோக்கம்’’ என்கிறார் ஹாக்கிங்.
அவர் சொல்வதை யார் கேட்கிறார்கள்? மக்கள் புத்தகத்தைப் படிக்கிறார்களோ இல்லையோ, ஹாக்கிங்கை கிண்டலடித்து ஜாலி ஜோக்ஸ் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். சாம்பிளுக்கு ஒன்று:

ஹாக்கிங் கடைக்குப் போகிறார். ஒரு மேஜை வாங்குகிறார். கால்கள், பலகை என்று தனித்தனியே பேக் செய்து தருகிறார்கள். அதைப் பார்த்த அவருக்குக் குழப்பம். ‘இது என்ன? டேபிள் மாதிரியே இல்லையே!’ ‘ஆமா சார். நாங்க எல்லாத்தையும் இப்படித் தனித்தனி பார்ட்ஸாதான் கொடுப்போம்!’ ‘இதையெல்லாம் எப்படி அசெம்பிள் செய்யறது?’ கடைக்காரர் சிரித்துக்கொண்டே சொல்கிறார்... ‘அது செம ஈஸி சார். நீங்க எதுவுமே செய்யத் தேவையில்லை. இந்த பார்ட்ஸையெல்லாம் உங்க ரூம்ல கொண்டுபோய் வெச்சுடுங்க, அப்புறம் நீங்க சொல்ற பிரபஞ்ச ரகசியம்மாதிரி இந்த டேபிள் தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டுவிடும்.’  

-என்.சொக்கன்