ராசிபலன்



மேஷம்

எந்த சவாலையும் துணிச்சலா சந்திக்கவும், வெற்றி பெறவும் முடியுமுங்க. செவ்வாய் வலுவாக இருந்து குடும்ப நிம்மதியைப் பாதுகாக்கிறாருங்க. விலகிப் போன உறவுக்காரங்க விரும்பி வந்து பேசுவாங்க; அவங்ககிட்ட காழ்ப்புணர்ச்சி காட்டாம இனிமையா பழகுங்க. 13ம் தேதி மதியம் 2 மணி முதல் 15ம் தேதி இரவு 8.30 மணி வரை எந்த வீண் விவகாரங்களிலும் தலையிடாதீங்க. வீட்ல கழிவுநீர்க் குழாய் பிரச்னை தீருமுங்க. பழைய நண்பர்களால ஆதாயம் உண்டுங்க. இடுப்பு வலி, மூட்டு வலின்னு உபாதை வரும். நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிடுவீங்க. பார்வையற்ற ஏழைக்கு உதவுங்க; சந்தோஷம் நிலைக்கும்.


ரிஷபம்
 
திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் அமையுமுங்க. சூரியன், புதன் இரண்டு கிரகமும் சாதகமா இருந்து குடும்பத்துல மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யறாங்க. பணத் தட்டுப்பாடு நீங்கி, அத்தியாவசிய செலவுகளை சமாளிப்பீங்க. எதிர்பார்த்த வேலைகள்ல ஒண்ணு முடிவுக்கு வருமுங்க. 15ம் தேதி இரவு 8.30 மணி முதல் 17ம் தேதி வரை எதுக்கும் அவசரப்படாதீங்க; அரசு காரியங்கள்ல நிதானம் தேவை. பைல்ஸ், சுவாசக்கோளாறுன்னு உபாதை வரும். வியாபாரத்துல பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்துல மேலதிகாரி இணக்கமாவார். ஏழைப் பெண்ணின் திருமணத்துக்கு உதவுங்க; ஏற்றம் பெறுவீங்க.


மிதுனம்

மனசாட்சி சொல்றபடி செயல்படுங்க; பிரச்னை வராது. சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்திருக்காருங்க; அதனால பணப்புழக்கம் திருப்திகரமாகவே இருக்கும். குடும்பத்தார் யோசனைகளுக்கு மதிப்பு கொடுங்க. மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாருடன் இருந்த மனவேற்றுமைகள் மறையுமுங்க. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். 18, 19 தேதிகள்ல யாரையும் விமர்சிச்சு பேசாதீங்க. கால்ல அடிபடக்கூடும்; எச்சரிக்கையா இருங்க. உஷ்ணக் காய்ச்சலும் வருமுங்க. வியாபாரத்துல பாக்கித் தொகை வசூலாகிடும். உத்யோகத்துல மேலதிகாரி பாராட்டுவார். சுத்திகரிப்புத் தொழிலாளிக்கு உதவுங்க; தடைகள் விலகும்.


கடகம்

வெளிவட்டாரப் பழக்கத்துல மதிப்பு கூடுமுங்க. கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசி, சில குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீங்க. பிள்ளைகளால பெருமையடைவீங்க. செவ்வாய் சாதகமாக இருக்காருங்க; அதனால, அத்தியாவசியத் தேவைக்கு மூத்த சகோதரர்கிட்டேயிருந்து பண உதவியை எதிர்பார்க்கலாமுங்க. பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீங்க. வயிற்றுவலி, வாயுக்கோளாறுன்னு உபாதை வந்து நீங்குமுங்க. அரசாங்க அதிகாரிகள் ஆதரவா இருப்பாங்க. வியாபாரத்துல போட்டிகளை சமாளிப்பீங்க. உத்யோகத்துல பணிகள் விரைவா முடியும்ங்க. ஆதரவற்றோர் காப்பகத்துக்கு உதவுங்க; ஆனந்தம் கூடும்.


சிம்மம்

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்காதது மனசுக்கு வருத்தமாக இருந்திருக்கும்; ஆனா, சுக்கிரன் சாதகமா இருக்கறதால அந்த உதவிகள் கிடைச்சு மகிழ்ச்சியடைவீங்க. பால்ய நண்பர் வீட்டு சுபநிகழ்ச்சிகள்ல கலந்துப்பீங்க. குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீங்க. மனைவியின் உடல்நலம் சீராகிடும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். கோயில் திருப்பணிகளில் ஈடுபட வாய்ப்பு வரும். காது, தொண்டையில் வலி வரக்கூடும். வியாபாரத்துல தள்ளிப் போன ஒப்பந்தம் மீண்டும் கையெழுத்தாகும். உத்யோகத்துல உயரதிகாரியின் பாராட்டைப் பெறுவீங்க. ஏழை நோயாளிகளுக்கு உதவுங்க; நல்லதே நடக்கும்.


கன்னி

மனசில பட்டதை பளிச்னு சொல்லிடுவீங்க; அது பலமா, பலவீனமாங்கறது அந்தந்த சூழ்நிலையைப் பொறுத்ததுங்க. அதனால எச்சரிக்கையா பேசுங்க. பிள்ளைகளோட ஆக்கபூர்வமான செயல்களை ஊக்குவிப்பீங்க. தூக்கமின்மை, பசியின்மையால ஒற்றைத் தலைவலி வரும். செவ்வாய் வலுவா இருக்காருங்க; சொத்துச் சேர்க்கைக்கு வாய்ப்பு இருக்கு. செலவைப் பார்க்காம, வாகனத்தைப் பழுது பார்த்துக்கோங்க. அரசாங்க அதிகாரிகள் அறிமுகமாவாங்க. வியாபாரத்துல லாபம் குறையாது; உத்யோகத்துல உங்க திறமை மதிக்கப்படுமுங்க; அதுக்கான பலனும் கிட்டும். பசுக்களுக்கு ஏதேனும் கொடுங்க; வாழ்க்கை இனிக்கும்.


துலாம்

சுக்கிரன் ஆட்சி பெற்றிருக்காருங்க; அதனால தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வேலைகளை முடிப்பீங்க. குடும்பத்துல கலகலப்பான சூழல் ஏற்படும். மூத்த சகோதரர் உதவுவார். தொல்லை கொடுத்துக்கிட்டிருந்த வாகனத்தை மாற்றி, புது வாகனம் வாங்குவீங்க. வீட்டு விசேஷத்துக்கு வர்ற உறவுக்காரங்க, நண்பர்களால சந்தோஷம் கூடுமுங்க. வாயுக்கோளாறு, அலர்ஜி உபாதைன்னு வரும். அரசு வேலைகள் அனுகூலமாக முடியுமுங்க. வியாபாரத்துல வாடிக்கையாளர்கள் அதிகரிப்பாங்க. உத்யோகத்துல வேலைப்பளுவும், அலைச்சலும் இருக்குமுங்க. இதய நோயாளிக்கு உதவுங்க; உதயமாகும் புது வாழ்க்கை.


விருச்சிகம்

வெளிப்படையான பேச்சால சுத்தி இருக்கறவங்களோட நட்பைப் பெறுவீங்க. இதுக்கு புதன் வலுவாக இருக்கறதுதாங்க காரணம். உங்க முயற்சிகளுக்குக் குடும்பத்தார் ஒத்துழைப்பாங்க. முன்கோபத்தைக் குறைச்சுக்கோங்க. வாகனப் பழுது நீங்கி, பயணம் நிம்மதியாகும். சொந்தக்காரங்களோட அன்புத் தொல்லை நீங்கிடும். வயிற்று வலி, பசியின்மைன்னு கோளாறு ஏற்படும்; உணவு விஷயத்துல எச்சரிக்கையா இருங்க. வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீங்க. வியாபாரத்துல புது சரக்குகளைக் கொள்முதல் செய்வீங்க. உத்யோகத்துல உயர்வுகளைப் பெறுவீங்க. பள்ளிக்கூட ஏழை ஆசிரியருக்கு உதவுங்க; மதிப்பு, மரியாதை கூடும்.


தனுசு

ஏற்பட்டிருக்கற பணப் பற்றாக் குறையை மனசிலே வெச்சு, ஆடம்பரச் செலவுகளை குறைச்சுக்கிட்டு, அத்தியாவசிய செலவுகளை மட்டும் செய்ங்க. குடும்பத்தாரோட கலகலப்பாகப் பேசுவீங்க; அவங்களோட கேளிக்கை நிகழ்ச்சிகள்ல கலந்துப்பீங்க. செவ்வாய் சாதகமா இருக்கறதால, மனைவிவழியில் அனுகூலம் உண்டுங்க. காய்ச்சல், பார்வைக் கோளாறுன்னு ஏற்படும். வெளிவட்டாரத்துல மகிழ்ச்சி உண்டுங்க. வீட்டு பராமரிப்பிலே கவனம் செலுத்துவீங்க. வியாபாரத்துல பற்று வரவு எளிதாகும். உத்யோகத்துல உயரதிகாரி உங்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பார். ஊனமுற்ற ஏழைக்கு உதவுங்க; வாழ்வில் வளம் சேரும்.


மகரம்

மகரம்: சுக்கிரன் ஆட்சி பெற்றிருக்காருங்க; அதனால தட்டுத் தடுமாறிக்கிட்டிருந்த சில காரியங்கள் இந்த வாரத்துல நிறைவேறிடுமுங்க. குடும்பத்தாரோடு இருந்த மனக்கசப்பு நீங்கும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கறது நல்லதுங்க. ரொம்ப நாளா சந்திக்காம இருந்த உறவுக்காரங்களை சந்திச்சு மகிழ்வீங்க. பிள்ளைகளோட சாதனைகள் பெருமை தேடித் தருமுங்க. மூத்த சகோதரர் சமயத்துக்கு உதவுவாருங்க. தூக்கமின்மை, கண் எரிச்சல்னு உபாதை வரும். வியாபாரத்துல பாக்கித்தொகை வசூலாகிடும். உத்யோகத்துல சிக்கல் எதுவும் இருக்காதுங்க. சாலையோரம் வசிக்கறவங்களுக்கு உதவுங்க; சுபிட்சம் அடைவீங்க.


கும்பம்

வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்குமுங்க. புதன் சாதகமாக இருக்கறதால, அரசாங்க அதிகாரிகளோட நட்பு கிடைக்குமுங்க. அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை பைசல் செய்ய முடியுமுங்க. மகளுக்கு விலையுயர்ந்த ஆபரணங்களை வாங்கித் தருவீங்க. நெடுநாளாகப் போக நினைச்சுக்கிட்டிருந்த புண்ணிய தலங்களுக்குப் போய் வருவீங்க. மூட்டுவலி, வாயுக்கோளாறுன்னு கொஞ்சம் அவதிப்படுவீங்க. தாய்மாமன் உதவி ஆறுதல் தருமுங்க. வியாபாரத்துல சுமுகமான லாபம் உண்டு. உத்யோகத்துல சிறப்புகள் அதிகரிக்குமுங்க. செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு உதவுங்க; சீரும் சிறப்புமாக வாழ்வீங்க.


மீனம்

சுக்கிரன் சாதகமாக இருக்கறதால விரும்பிய பொருட்களை வாங்க முடியுமுங்க. கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்குமுங்க. 13ம் தேதி அன்னிக்கு மதியம் 2 மணி வரை நிதானமா செயல்படணுமுங்க. பிள்ளைகளோட பிடிவாதம் குறையுமுங்க. ரொம்ப நாளுக்குப் பிறகு, பால்ய சினேகிதர்களை சந்திப்பீங்க; மலரும் நினைவுகள்ல மகிழ்ச்சி அடைவீங்க. தலைவலி, வாயுக்கோளாறுன்னு வரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிடுங்க. வியாபாரத்துல இழுபறியா இருந்த பாக்கிகள் வசூலாகிடும். உத்யோகத்துல நன்மைகள் பெருகும். ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உதவுங்க; நினைத்தது நடக்கும்.