கடின உழைப்பு!



‘கபாலி’ படப்பிடிப்பில் ரஜினி பற்றி பா.ரஞ்சித் பகிர்ந்துகொண்டவை அனைத்தும் அருமை. துளியும் பந்தா இல்லாத இந்த ‘கபாலி’ போராளியோ இல்லையோ... ரியலி ஜென்டில்மேன்!
- எச்.புனிதா சேகர், சேலம்.

‘பிச்சைக்காரர்கள் இல்லாத ஈரோடு’ என்ற லட்சியத்துடன் களமிறங்கியிருக்கும் இளைஞர் நவீன்குமார், தமிழ்நாட்டையே - இல்லை... இல்லை... இந்தியாவையே அப்படி மாற்றிக் காட்ட வாழ்த்துகள்!
- எஸ்.குணசுந்தரி, விழுப்புரம்.

‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக அனுஷ்கா 20 கிலோ வெயிட் ஏற்றியிருக்கும் படத்தைப் பார்த்து பிரமித்தேன். வெயிட் குறைப்பதை விட இதுதாங்க கடின உழைப்பு!
- இரா.கணபதிராவ், புதுச்சேரி.

‘ட்யுப்கின்’ எனும் வைரஸ் ஏ.டி.எம்களைக் கொள்ளை அடிப்பதைப் படித்து மனம் ‘பகீர்’ என்றது. நல்லவேளை, அது இன்னும் நம்மூருக்கு வரலை!
- டி.வி.பால்பாண்டி, ராஜபாளையம்.

‘நான் உங்கள் ரசிகன்’ தொடரில் மனோபாலாவின் மலரும் நினைவுகள் அபாரம். அவரின் தற்கொலை எண்ணம்... அந்தப் பரபரப்புத் தருணத்தில் ‘தொடரும்’ போட்டுட்டீங்களே!
- பி.கே.சௌந்தர வள்ளி, மதுரை.

படிக்காதவர்களே முகம் சுளிக்கும் கால்நடை வளர்ப்பை கையில் எடுத்து ஜெயித்த ஐ.டி. இளைஞர் சபரிநாதனுக்கு சபாஷ்!
- நெ.சண்முகநாதன், தேனி.

முதல் மகனை விநோத நோய் பலி வாங்க, இரண்டாம் மகனும் ஆட்டிசம் குறைபாட்டோடு போராட... அந்த அசாத்திய அம்மா ராதா நந்தகுமாரின் வாழ்வு, கண்களை பனிக்க வைத்தது!
- எஸ். கோமதிநாயகம், கரூர்.

‘ஒரு ஓவியமே ஓவியம் வரைகிறதே...’ என எங்களைக் கவிதை எழுத வைத்துவிட்டது ‘ஸ்டார்ஸ் ஹாபி’ பகுதி. ஆனாலும், ஹன்சிகா (வரைந்த) ஓவியங்கள் அம்சம் பாஸ்!
- எஸ்.நவீன்சுந்தர், முத்தரசநல்லூர்.

‘வேதாளம்’ படத்தை ஆக்‌ஷன் பாசமலர் என வர்ணித்து ஆவலை அதிகப்படுத்தி விட்டீர்கள். இருந்தாலும் இயக்குநர் சிவாவிடம் அவர் உடம்பைப் பற்றி கடைசி கேள்வி கேட்டது ஓவர் குசும்புங்க!
- தினேஷ், திருச்சி.

நா.முத்துக்குமாரின் ‘நினைவோ ஒரு பறவை’ நெகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டுபோய் விட்டது. தன் அனுபவங்களை அவர் இத்தனை ஆழமாய் உள்வாங்கும் விதம்
அருமை!
- சுபாஷ், நெய்வேலி.