ஜோக்ஸ்



‘‘பொதுக்கூட்டத்துக்கு எப்படிய்யா இவ்வளவு ஆள் சேர்ந்தது?’’
‘‘தொண்டர்களுக்கு நீங்க தீபாவளி போனஸ் தர்றதா எவனோ வதந்தியைக் கிளப்பி விட்டிருக்கான் தலைவரே!’’

 ‘‘தலைவர் எதுக்கு இப்ப ஜாமீன் கேட்கறார்?’’
‘‘மகளிரணித் தலைவி வீட்டுல தீபாவளி கொண்டாடணுமாம்..!’’

 ‘‘தலைவர் குஷியா இருக்காரே... என்ன விஷயம்?’’
‘‘இந்த வருஷம் தீபாவளிக்கு அவரோட மூணு குற்றப்பத்திரிகை ரிலீஸ் ஆகுதாம்!’’

 ‘‘நம்ம கட்சிக்காரங்க எதுக்குய்யா இப்ப வெடி போடறாங்க?’’
‘‘தலைவர் வீட்டுக்கு ரெய்டுக்கு வர்ற சி.பி.ஐ. அதிகாரிங்களை வரவேற்கவாம்!’’

பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘தலைவருக்கு எப்படி சுகர் அதிகமாச்சு?’’
‘‘எல்லா சின்ன வீட்லயும் போய் தீபாவளிக்கு ஸ்வீட் சாப்பிட்டிருக்கார்..!’’

 ‘‘அந்தப் பட்டாசுக் கடையில என்ன கூட்டம்?’’
‘‘பாம்பு மாத்திரையோட விஷ முறிவுக்கு பச்சிலை மருந்தும் தர்றாங்களாம்!’’

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் மாத்திரைன்னாலும் பாம்பு மாத்திரையை, பாம்புக் கடிக்கு சாப்பிட முடியுமா?
- அளவில்லாமல் மாத்திரை சாப்பிடுவோர் சங்கம்