facebook

‘வெறும் தியேட்டரை மட்டும் வாங்கினா எப்படி? தியேட்டர் இருக்கிற மால் என்ன பாவம் பண்ணுச்சு? மால் இருக்கிற வேளச்சேரி என்ன பாவம் பண்ணுச்சு? வேளச்சேரி இருக்கிற சென்னை என்ன பாவம் பண்ணுச்சு? சென்னை இருக்கிற தமிழ்நாடு என்ன பாவம் பண்ணுச்சு? வாங்கணும், நீங்க அவ்வளவையும் வாங்கணும்!

என்ன... மிஞ்சிப் போனா ஒரு சொத்துக் குவிப்பு வழக்கு வரும். கணக்கு வழக்கு தெரியாத, கால்குலேட்டர் கூட இல்லாத ஜட்ஜ் ஒருவர் உங்களுக்காகவே பொறந்து வருவார்... எல்லாமே ரொம்ப ஈஸி!
- மனுஷ்ய புத்திரன்

‘எல்லாரும் சொல்கிறார்கள்’ என்பது எவ்வளவு சாமர்த்தியமான பொய்!
- செல்லி சீனிவாசன்

டாஸ்மாக்கிற்கு எதிராக கோவன் பாடிய சர்ச்சைக்குரிய அந்தப் பாடலை கேட்க நேர்ந்தது. அதில், பருப்பு விலை 100 ரூபாய் என பாடல் வரி வருது! பொய்த் தகவலை பரப்புவதாக, இன்னொரு அவதூறு வழக்கும் அரசு போட்டிருக்கலாம்!
- எழிலன் எம்

@oviyachaaral 
கடந்து போன கணங்கள் மீளாதென்ற ஒரே காரணத்தால், காலத்தின் மீதான நம் மோகம் குறைவதே இல்லை.

@archanabaluit
எல்லாம் முடிந்துவிட்டதென நினைத்து பிணத்தைப் புதைத்து விட்ட இடத்தில் முளைக்கும் புல் சொல்கிறது, ‘முடிவல்ல... இது ஆரம்பம்’ என்று!

@Prabinraj1  
தன் வாரிசை டாக்டராக்க எடுக்கும் பெரும் முயற்சியில் நோயாளி ஆவது என்னவோ பெற்றோர்கள்தான்!

@bommaiya
கடவுள் தான் ஒருவனே எல்லார் வீட்டுக்கும் தனித்தனியா போய் டார்ச்சர் கொடுக்க முடியாதுங்கிறதாலதான் உப்புமாவை படைச்சான்!

@Sam_official___ 
காதலிக்குத் தாஜ்மஹால் கட்டியது அதிசயம் - ‘அன்று’; காதலியைக் கட்டினாலே அதிசயம்தான் - ‘இன்று’.

@psrajarajan  
சிங்கப்பூர் ஏற்றுமதியாகும் இந்திய துவரம் பருப்பு கிலோ ரூ.180. இந்தியாவில் மட்டும் கிலோ ரூ.250. # ஆப்கி பார், நஹி பருப்பு சாம்பார்!

@chevazhagan1 
நாம் செய்தது 100% நிரூபிக்கப்பட்ட தவறாக இருந்தாலும், ‘இவரு இத செஞ்சிருக்க மாட்டாரு’ என எல்லோரும் சொல்லும்படி வாழ்வாங்கு வாழ்ந்துவிட வேண்டும்!

@SuganyaR1990 
சொந்த பந்தம் கூட வாசப்படியிலேயே நிப்பாட்டி பேசி அனுப்புற இந்த உலகத்துல, பஸ் கண்டக்டர் மட்டும் அக்கறையா ‘‘படியில நிக்காத, உள்ள வா’’ன்னு அழைக்கிறாரு!

@mosi002 
மக்கள் சக்தியை மட்டுமே நம்பி தேர்தலை சந்திப்போம், தேர்தலில் ஜெயிப்போம் - வைகோ
# பச்ச தண்ணீல எப்டின்னே விளக்கு பளீர்னு எரியும்? போங்கண்ணே!

@udanpirappe 
அனைவரும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும் - ஜெ # இதைக் கேட்ட சிக்கனம், சற்று முன்  தூக்கில் தொங்கியதாகத் தகவல்!

@hanitha312  
வைப்பர் ஒரு பக்கம் சென்று வருவதற்குள் விழுந்து விடும் மழைத்துளிகள் போல ஆசைகள் நம் வாழ்வில்.

@Thalaking7 
‘காத்திருப்பது சுகம்’னு எவன்டா சொன்னது? ரேஷன் கடை கியூல நின்னு பார்த்துட்டு சொல்லுங்கடா!

ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்
டைட்டானிக் கப்பல் விபத்து நடந்து 90 ஆண்டுகள் ஓடிவிட்டன. விபத்துக்கு முக்கிய காரணமாக ஏதேதோ சொல்லப்பட்டன. ஆனால், மிக மிக முக்கிய காரணத்தை சமீபத்தில்தான் இங்கிலாந்தைச் சேர்ந்த பீட்டர் மற்றும் டேவிட் என்பவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை லண்டனைச் சேர்ந்த முக்கிய செய்தித்தாள்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.

கப்பல் விபத்து நடந்த 25 கி.மீ. சுற்றளவுக்கு மட்டுமே மற்றவர்கள் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். ஆனால் பீட்டரும், டேவிட்டும் 100 கி.மீ சுற்றளவுக்கு தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது சரியாக விபத்துப்பகுதிக்கு 98 கி.மீ தொலைவில் கப்பலின் முக்கிய பாகம் ஒன்றை அவர்கள் கண்டெடுத்துள்ளனர்.அது மட்டும் கப்பலில் இருந்து கழன்று விழாமல் இருந்திருந்தால் கப்பல் விபத்தே நடந்திருக்காது என விஞ்ஞானிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

இதில் இதயமே நின்று போகும் உண்மை என்னவென்றால், அந்தப் பாகம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. அது சரியாகப் பொருத்தப்படாதது கப்பல் மெக்கானிக்குகளின் கவனக் குறைவையே காட்டுவதாக உலக நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேற்படி கண்டெடுக்கப்பட்ட பாகம், இங்கிலாந்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு டைட்டானிக் கப்பலில் பொருத்தப்பட்ட அந்த முக்கிய பாகம், கறுப்பு கலர் திருஷ்டிக் கயிறும், எலுமிச்சம் பழமும்தான் பாஸ்..!

துணி வாங்கச் செல்லும்போது ‘இன்னொரு பெண் கட்டி இருக்கிற புடவை நமக்குக் கிடைக்கலையே’ என பெண்ணும், ‘அந்த மாதிரி பெண் நமக்குக் கிடைக்கலையே’ என ஆணும் கவலைப்படுகிறார்கள்.
- அப்துல் வஹாப்

துணிக்கடையில ‘‘இது நல்லால்ல, வேணாம்’’னு நாம ஒதுக்குன அதே துணியை, ரெண்டு நாள் கழிச்சி வேற யாராவது போட்டுட்டுப் போகும்போது பாக்கக் கொஞ்சம் பொறாமையாதான் இருக்கு!!
- சுகு பெரம்பலூர்

‘‘எப்பா கேரளா, கர்நாடகா... கொஞ்சம் தண்ணி குடுங்கப்பா...’’
‘‘எதுக்கு? கூல்டிரிங்க்ஸ் கம்பெனிகாரனுக்கு விக்கவா? ஓடிரு...’’
- அம்புஜா சிமி

கர்நாடகா: தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு கூட நீர் தர முடியாது
மேகம்: நீ என்னடா தர்றது? நான் தர்றேன்... வச்சுக்கோ!

தமிழ்நாடு: நீ என்ன குடுத்தாலும் எங்களுக்கு கையேந்திதான் பழக்கம்... உன்னல்லாம் பத்திரமா வச்சுக்க எங்களுக்குத் தெரியாது!
# தமிழ்நாடு தி கிரேட்!
- ஷர்மிளா ராஜசேகர்

@oviyachaaral 
கடந்து போன கணங்கள் மீளாதென்ற ஒரே காரணத்தால், காலத்தின் மீதான நம் மோகம் குறைவதே இல்லை.

@archanabaluit
எல்லாம் முடிந்துவிட்டதென நினைத்து பிணத்தைப் புதைத்து விட்ட இடத்தில் முளைக்கும் புல் சொல்கிறது, ‘முடிவல்ல... இது ஆரம்பம்’ என்று!

@Prabinraj1  
தன் வாரிசை டாக்டராக்க எடுக்கும் பெரும் முயற்சியில் நோயாளி ஆவது என்னவோ பெற்றோர்கள்தான்!

@bommaiya
கடவுள் தான் ஒருவனே எல்லார் வீட்டுக்கும் தனித்தனியா போய் டார்ச்சர் கொடுக்க முடியாதுங்கிறதாலதான் உப்புமாவை படைச்சான்!

@Sam_official___ 
காதலிக்குத் தாஜ்மஹால் கட்டியது அதிசயம் - ‘அன்று’; காதலியைக் கட்டினாலே அதிசயம்தான் - ‘இன்று’.

@psrajarajan  
சிங்கப்பூர் ஏற்றுமதியாகும் இந்திய துவரம் பருப்பு கிலோ ரூ.180. இந்தியாவில் மட்டும் கிலோ ரூ.250. # ஆப்கி பார், நஹி பருப்பு சாம்பார்!

@chevazhagan1 
நாம் செய்தது 100% நிரூபிக்கப்பட்ட தவறாக இருந்தாலும், ‘இவரு இத செஞ்சிருக்க மாட்டாரு’ என எல்லோரும் சொல்லும்படி வாழ்வாங்கு வாழ்ந்துவிட வேண்டும்!

@SuganyaR1990 
சொந்த பந்தம் கூட வாசப்படியிலேயே நிப்பாட்டி பேசி அனுப்புற இந்த உலகத்துல, பஸ் கண்டக்டர் மட்டும் அக்கறையா ‘‘படியில நிக்காத, உள்ள வா’’ன்னு அழைக்கிறாரு!

@mosi002 
மக்கள் சக்தியை மட்டுமே நம்பி தேர்தலை சந்திப்போம், தேர்தலில் ஜெயிப்போம் - வைகோ
# பச்ச தண்ணீல
எப்டின்னே விளக்கு பளீர்னு எரியும்? போங்கண்ணே!

@udanpirappe 
அனைவரும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும் - ஜெ # இதைக் கேட்ட சிக்கனம், சற்று முன்  தூக்கில் தொங்கியதாகத் தகவல்!

@hanitha312  
வைப்பர் ஒரு பக்கம் சென்று வருவதற்குள் விழுந்து விடும் மழைத்துளிகள் போல ஆசைகள் நம் வாழ்வில்.

@Thalaking7 
‘காத்திருப்பது சுகம்’னு எவன்டா சொன்னது? ரேஷன் கடை கியூல நின்னு பார்த்துட்டு சொல்லுங்கடா!

‏@gopinathtamilan 
கேப்டனைப் பார்த்தால் கவலைகள் மறக்கும் - பிரேமலதா# ஆமா, ரெண்டு நிமிஷம் உத்துப் பாருங்க. குபீர்னு சிரிச்சிடுவீங்க.

தீபாவளி செலவுகளைப் பார்க்கும்போது, கிருஷ்ணன் கருணையுள்ளத்தோடு நரகாசூரனை மன்னித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது!

ஆட்சிக்கு வந்து பதினெட்டே மாதங்களில் 4 பத்மபூஷண் விருதுகள், 12 தேசிய விருதுகள், 33 சாகித்ய அகாடமி விருதுகள் பெற்றிருக்கும் முதல் இந்தியப் பிரதமர் நம்ம மோடிதான்!எல்லாமே ரிட்டர்ன் கிஃப்ட்!

@unmaivilambbi  
கெட்ட  விஷயங்களுக்கு விளம்பரம் தேவையில்லை என்பதற்கு உதாரணம்தான், ‘டாஸ்மாக்’!

@thoatta  
குடி குடியைக் கெடுக்கும்னு அந்த Bottleலே சொன்னாலும் விட்டுடுறாங்க, யாராவது பாட்டுல சொன்னா புடிச்சு உள்ள போட்டுடறாங்க!

@Perumal_Pradeep  
தீபாவளி பண்டிகையையொட்டி 11,959 சிறப்பு பேருந்துகள்!  # டாப்பு கழண்டது, படிக்கட்டு உடைஞ்சது, சீட்டு பிஞ்சதெல்லாம் சிறப்பு பேருந்தாய்யா?

@shobin_m_stars 
பேருந்தில் நாம் இயற்கையை ரசிப்பது கண்டக்டரின் கையிலே உள்ளது... # பயபுள்ள, சில்லறை தருவானா... மாட்டானா?

‘‘அப்புறம்... தீபாவளிக்கு துணி எடுத்தாச்சா!?’’னு மத்தவங்க கேக்குறதுக்கு பதில் சொல்லவேனும் துணி எடுக்க வேண்டியிருக்கு!
- ஈரோடு கதிர்

முன்னாடிலாம் வெளிநாட்ல இருந்து ஊருக்குப் போனா சென்ட் பாட்டில் கேக்குறதுதானே ஒலக வழக்கமா இருந்துச்சு... இப்போலாம் என்ன சர்வ சாதாரணமா செல்போன் வாங்கிட்டு வரச்சொல்றாங்க..? ‪#‎ வெளிநாட்ல‬ கம்மி விலைனு எவன்யா சொன்னான்?
- குமரேஷ் சுப்ரமணியம்

சாகும் வரை அ.தி.மு.க.வில் இருப்பேன் - நாஞ்சில் சம்பத்‪#‎ அதெல்லாம்‬ நீ சொல்லக்கூடாது... உன் ஓனர சொல்லச் சொல்லு!
- குமரேஷ் சுப்ரமணியம்