எனக்கான ஹாபியை இன்னும் தேடுகிறேன்!
start ஹாபி
கவிஞர் தீபா சன்னிதி
மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் தீபா சன்னிதி. தமிழில், ‘எனக்குள் ஒருவன்’, ‘யட்சன்’ என ஏற்கனவே அறிமுகமான இந்த பெங்களூர் தக்காளியின் ஒரிஜினல் பெயர் ரகஸ்யா. ஆங்கிலத்தில் அசத்தல் கவிதைகள் எழுதுவதும், போட்டோகிராபியும் தீபாவின் ஹாபிகள்!‘‘நான் ஆர்க்கிடெக்சர் படிச்சிட்டு இருக்கும்போதே, சினிமா சான்ஸ் வந்தது. ஸோ, படிப்பை விட்டுட்டு கண்ணாடி முன்னால மேக்கப் போட்டுக்க உட்கார்ந்துட்டேன். படிக்கும்போது சின்னச் சின்னதா கிறுக்கித் தள்ளினது உண்டு.
ஆனா, கவிதைனு ஃபீல் பண்ணி நான் எழுதத் தொடங்கினது இந்த ரெண்டு வருஷமாத்தான். கர்நாடகாவின் சிக்மகளூர்ல எங்க அப்பாவோட காபி எஸ்டேட் இருக்கு. அங்கே இருந்தாலே எனக்கொரு பியூட்டிஃபுல் மைண்ட் வந்துடும். ஷூட்டிங் இல்லாத நாட்கள்ல அங்கே ஓடிடுவேன். இப்போ கூட அங்கேதான் இருக்கேன். ஒரு கவிதை சொல்றேன் கேக்குறீங்களா? பட், இங்கிலீஷ்லதான் இருக்கும். தமிழ் எழுதத் தெரியாது. நீங்க பேசினா புரிஞ்சுக்குவேன்.
‘உன் ஜாடியில் அழகான வண்ணத்துப்பூச்சி நான்’- காபி எஸ்டேட்ல காலையில வாக்கிங் போனப்போ ஒரு வண்ணத்துப் பூச்சியைப் பார்த்ததும் தோணின கவிதை இது. பறவைகள், விமானங்களைப் பார்க்கும்போதும் கவிதை மூடு ஸ்டார்ட் ஆகிடும்!‘மௌனத்தில் உன் குரலை நான் கேட்டேன்ஆனால் உன் பேச்சுமௌனத்துடன் முரண்பட்டதுஎனவேதான் நீ காதல் சொன்னபோதுநான் பறந்துவிட்டேன்!’
- விமானத்தைப் பார்த்ததும் எழுதின கவிதை இது. இப்படி பொயட்டிக் லைன்ஸ் நிறைய எழுதியிருக்கேன். சோகம், துக்கம், சந்தோஷம்னு எல்லா ஃபீலையும் கவிதையாக்கிடுவேன். காதல் கவிதைனு எதுவும் எழுதினதில்லை. முதன்முதலில் எழுதிய கவிதை எதுன்னும் ஞாபகத்தில் இல்லை. மௌனம் எனக்கு ரொம்பப் பிடிச்ச மொழி.
கவிதைகள்ல ஒரு மௌனத்துக்கு ஆயிரம் அர்த்தங்கள் வரும் மிராக்கிள் இருக்கும். கவிதை எழுதுறது ஒன்லி மை பர்சனல். அதனால ஷூட்டிங் பிரேக்ல கவிதை எழுதத் தோணினாக் கூட எழுதுறதில்லை. வேலையில சின்ஸியர் பொண்ணு. ஸ்பாட்ல சும்மா இருக்கும்போது ஏதாவது புத்தகங்களைப் படிப்பேன், அவ்வளவுதான். என் கவிதைகளை அப்பாகிட்ட காட்டுவேன். அவருக்கு ரொம்பப் பிடிக்கும். கவிதை எழுதுறது ஒரு வகையில ரிலாக்ஸ் பண்றதுக்காகத்தான்.
இதே மாதிரி போட்டோகிராபியிலும் எனக்கு ஆர்வம் அதிகம். எல்லா வகை கேமராவிலும் க்ளிக் பண்ணியிருக்கேன். என் கவிதைகள், போட்டோகிராபி எல்லாத்துக்கும் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட இருந்து ஏகப்பட்ட லைக்ஸ் குவிஞ்சிருக்கு. நான் க்ளிக் பண்ணின போட்டோஸ் எல்லாம் ஒரு கலெக்ஷனா வச்சிருக்கேன்.
சில நேரங்கள்ல அந்த போட்டோ பார்த்தும் கவிதைகள் தோணும். அதையும் டிசைன் பண்ணி, மொபைல் கேலரியில சேர்த்து வச்சிருக்கேன். கவிதை எழுதுறது, போட்டோகிராபி இதெல்லாம் என்னோட மெயின் ஹாபினு சொல்லிட முடியாது. எனக்கான ஹாபி இதுதான்னு குறிப்பிட்டுச் சொல்றவிதமா இன்னும் ஏதாவது வேணும். தேடிக்கிட்டே இருக்கேன்.
கொஞ்ச நாளா எனக்கு படிப்பில் ஆர்வம் அதிகம் ஆகுது. ஆர்க்கிடெக்சர் படிப்பை மீண்டும் தொடரலாமா... இல்ல, வேற ஏதாவது கோர்ஸை பண்ணலாமானு யோசனையில இருக்கேன். எனக்கு ஸ்கோப் உள்ள கேரக்டர்கள் தேடி வந்தா மட்டும் பண்ண ரெடி. மத்தபடி, ‘படிப்பு ரொம்ப அவசியம். அதான் ஃப்யூச்சர்’னு எங்க அப்பா சொல்வார்!’’ எனக் கொஞ்சி முடித்த தீபா சன்னிதி எழுதிய லேட்டஸ்ட் கவிதை இது...
‘உன்னில் தீக்குளிக்கும் விட்டில்பூச்சி நான்.என் சிறகுகள்உன் ஒளியை நோக்கி படபடத்தபோது சூரிய அஸ்தமனம். நான் காணாமல் போயிருந்தேன்!’
- மை.பாரதிராஜா
|