ஜோக்ஸ்
‘‘அந்த பட்டாசுக் கடையில் மட்டும் கூட்டம் அள்ளுதே... எப்படி?’’ ‘‘ஊசி’ வெடி எப்படி வெடிக்கிறதுன்னு அழகான நர்ஸ் ‘டெமோ’ பண்ணிக் காட்டறாராம்!’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு
‘‘நான் ஒவ்வொரு தீபாவளிக்கும் நகை வாங்கும்போது செய்கூலி, சேதாரம் இல்லாம பார்த்துதான் வாங்குவேன்...’’ ‘‘அப்படியா! எங்க வாங்குவீங்க?’’ ‘‘என் மாமனார் வீட்டுலதான்...’’ - யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
‘‘வேலைக்காரி வந்த பிறகு தான் தீபாவளிக்குப் புடவை எடுக்கப் போகணுமா.... ஏன்?’’ ‘‘பக்கத்து வீட்டுக்காரி எத்தனை புடவை எடுத்தாள்னு அவ சொல்லுவா... அதைவிட அதிகமா ஒரு புடவை எடுக்கத்தான்!’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
தத்துவம் மச்சி தத்துவம்
என்னதான் பாம்பு மாத்திரைன்னாலும், அது வெடிக்கடையிலதான் கிடைக்கும். மெடிக்கல் ஸ்டோர்ல கிடைக்காது! - நாக தோஷம் நீங்க பாம்பு மாத்திரை கொளுத்துவோர் சங்கம் - வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
‘‘ஹலோ சார்! நாங்க சிவகாசியில் இருந்து பேசுறோம்... நீங்க ஆர்டர் செஞ்ச ராக்கெட்டெல்லாம் ரெடியாயிருச்சு...’’‘‘நீங்களே பத்த வச்சு இங்கே அனுப்பி விட்டுருங்களேன் சார்!’’ - யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
‘‘தீபாவளியும் அதுவுமா தலைவருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துச்சாமே?’’ ‘‘நீ வேற... பட்டாசுக் கடையில போன தீபாவளிக்கு வச்ச பாக்கியைக் கேட்டதைத்தான் அப்படிச் சொல்றாரு அந்த மனுஷன்!!’’ - யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
தத்துவம் மச்சி தத்துவம்
என்னதான் ரயில் வெடின்னாலும், அதையும் சிவகாசியிலதான் செய்வாங்க. பெரம்பூரில் செய்யமாட்டாங்க... - தீபாவளிக்கு நான்கு மாதத்திற்கு முன்பே ஊருக்கு டிக்கெட் ரிசர்வ் செய்தோர் சங்கம் - வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
|