நயன்தாரா புராணம்
‘ஹெல்மெட் கட்டாயம்’ என்றதும் உங்கள் கற்பனைக் குதிரையை ஓட ஓட விரட்டினால் எப்படி சார்? ஆனாலும் ‘ஹெல்மெட் கலாட்டா’ என்ற தலைப்பு ரொம்பப் பொருத்தம்! - மயிலை.கோபி, சென்னை.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒரு இந்தியர் போட்டியிடுவதே பெரிய சாதனைதான்! வெற்றி பெற்று விட்டால் உலக அதிசயம்! அதற்காக பாபி ஜிண்டாலுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்! - த.சத்தியநாராயணன், அயன்புரம்.
உணவுப் பயிர்களில் ரசாயனம் கலப்பதால், தாய்ப்பாலில் நஞ்சும் சேர்ந்து சுரக்கிறது என்ற தகவல் பதைபதைக்க வைத்தது. என்ன கொடுமை சார் இது? - எஸ்.நவீன்சுந்தர், முத்தரசநல்லூர்.
சென்னையின் `கனவுத்திட்டம்’ மெட்ரோ ரயில். சென்னைவாசிகளுக்கு இது பயன்படுமா? அல்லது செம்மொழிப் பூங்கா போல காதல் ஸ்பாட் ஆகிவிடுமா? காலத்திற்கு மட்டுமே பதில் தெரியும்! - மனோகர், மேட்டுப்பாளையம்.
ACTOR... என்பதற்கு நடிகர் ஜெயப்ரதா சொன்ன விளக்கம் அபாரம். என்ன இருந்தாலும் மூன்று தலைமுறைகள் கண்ட நம்மூர் அழகி அல்லவா ஜெயப்ரதா! - மா.கிரிஜா, புதுச்சத்திரம்.
தகப்பனின் நேர்மையில் பெருமை, மனைவியும் எழுத வேண்டும் என்கிற ஆசை, உழைத்துப் பிழைக்கும் அவா... ‘யுவ புரஸ்கார்’ விருது பெற்ற வீரபாண்டியனின் வார்த்தைகள் இன்றைய இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டி! - கே.எஸ்.குமார், விழுப்புரம்.
கிராமத்தின் மீது இளைய தலைமுறைக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற `சிரட்டைச் சிற்பி’ ஆனந்தபெருமாளின் சிந்தனைகள் உயர்வானது! - இராம.கண்ணன், திருநெல்வேலி.
விருது விழாவுக்கு செம கவர்ச்சியில் ஸ்ருதி ஹாசன் வந்தது ஆச்சரியமில்லை. உலக நாயகன் மகளல்லவா? உலகத்தின் பார்வையை இழுப்பதில் என்ன தவறு? - எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
`கேடி பில்லா கில்லாடி ரங்கா’வில் சிவகார்த்திகேயன் ஜோடியாக வந்த ரெஜினாவா இப்படி கவர்ச்சி தரிசனம் தருவது? ஷாக் தந்துவிட்டார் அந்தக் குடும்பக் குத்துவிளக்கு! - செந்தில்குமார், ஒட்டன்சத்திரம்.
`திருநாள்’ படத்தில் நடிகர் ஜீவாவும் இருக்கார் சார். இருந்தாலும் உங்கள் பேட்டியில் அந்த இயக்குநர் அநியாயத்துக்கு `நயன்தாரா புராணம்’ பாடி `திருநாள்’ கொண்டாடிவிட்டது ஓவர்! - ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.
|