டிப்ஸ் திருட்டு!



கால்டாக்ஸிகள் பீக்அவரில் காசை ஏற்றி குபீர் லாபம் பார்க்கிறார்கள்தான். அதற்காக தினக்கூலியாக வேலைபார்க்கும் ட்ரைவர்களின் மடியிலேயே கைவைத்தால் எப்படி? அமெரிக்காவின் நியூயார்க்கில் தனியார் நிறுவன டாக்ஸியில் ஏறிய டீன்ஏஜ் பெண், தன் நண்பர்களுடன் ஜாலியாக சவாரி செய்தார்.

இறங்கும் இடம் வந்தவுடன், ட்ரைவரை லுக்விட்டார். அவர் சிக்னலை வெறித்து பார்க்க, டாஷ்போர்டு கேமராவையும் அலட்சியம் செய்து, ட்ரைவரின் டிப்ஸ் தொகையை நைஸாக வழித்தெடுத்து டக்கென இறங்கிவிட்டார்.

பார்க்கிங்குக்கு இடம் தேடிய ட்ரைவர் அண்ணாச்சி, அலட்சியமாக காலியாக இருந்த டிப்ஸ் பாக்ஸை பார்த்து செம ஷாக்காகி பெண்ணை சேசிங் செய்தும் பயனில்லை. இணையத்தில் வைரலான 2 நிமிட வீடியோவை 7 லட்சம் பேர்களுக்கும் மேல் பார்த்து ட்ரை
வருக்கு பரிதாப உச்சு கொட்டிஇருக்கிறார்கள்.

தொகுப்பு: ரோனி