ஜென் Z கொண்டாடும் SUN NXT



SUN NXT இப்போது இன்னும் பல அதிரடிகளோடு அதன் வழக்கமான கலகலப்பும், சூடும் சுவையும் குறையாமல் ஜொலிஜொலிப்பதை அனைவரும் பார்க்கலாம்.பார்வையாள பெருமக்கள் கொடுத்த வெற்றி, இன்னும் ஏராள புதுமைகளுடன் மலர வைத்திருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’ படம் இப்பொழுது முன்னோடியாக வெளியாகி மகிழ்விக்க காத்திருக்கிறது.
சன் டிவியைத் தொடுவதற்கு முன்பான சிறப்பு நிகழ்வு இது.

ஏற்கனவே அஜித்தின் ‘விவேகம்,’ விஜய்யின் ‘பைரவா’, ‘மீசைய முறுக்கு’ என படங்களைப் பார்த்துக் களித்த நாட்கள் நினைவிருக்கலாம்.மக்களின் வாழ்க்கையில் சந்தோஷத்தையும், மலர்ச்சியையும் ஏற்படுத்த 4000க்கும் மேற்பட்ட படங்கள், 40+ சேனல்களின் அணி வகுப்பு, தேடி கேட்க விரும்பும் மியூசிக் வீடியோஸ், மனதை லேசாக்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவைகள்... என சரமாரியாக நீளும் SUN NXTஐ கண்டுகளிக்க மாதக்கட்டணம் ரூ.50தான்.

இந்த மகா மெகா கொண்டாட்டத்தின் மேல் அன்பும், காதலும் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே இருப்பது பெருகி வரும் இணைப்புகளில் தெரிகிறது. வெளிநாட்டுப் பார்வையாளர்கள் பெரிய தள்ளுபடிகளைப் பெற்று அனுபவித்துப் பார்க்கலாம் என்பது பெரிய ப்ளஸ். 

அனைவரது வசதிக்கேற்ப Android, IOS, Apple TV, Samsung Smart TV, Sony Android TV, Fire TV என அனைத்து ரூபங்களிலும் SUN NXTஐ தேடி அடையலாம். பெரிய சேமிப்பிலிருக்கும் படங்களையும், வரிசைப்படுத்தி குளிர வைக்கும் நிகழ்ச்சிகளின் பொலிவு கூடியிருப்பதையும்  உங்களின் தொலைபேசி அழைப்புகள், இ/மெயில், மற்றும் கடிதங்களின் வாயிலாக தெரிவிக்கலாம்.

அறிமுகம் செய்த ஒரே வாரத்தில் இது எவருக்கும் கிடைக்கக்கூடிய வெற்றி அல்ல. SUN NXT App 22 லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகளைத் தாண்டி ராக்கெட் வேகமாகச் செல்கிறது. காரணம் அனைவரும் அறிந்ததுதான்... அதுவே தரம். இன்னும் எண்ணற்ற ஆச்சரியங்களை பார்வையாளர்களுக்கு அளிக்க SUN NXT காத்திருக்கிறது! ஒரு புதிய அனுபவத்துக்கு தயாராவோம்.