தேர்தலுக்கு உதவும் செல்லாத நோட்டு!
கடந்த ஆண்டு நவம்பரில் பெறப்பட்ட ரூ.500, ரூ.1000 செல்லாத நோட்டுகள், தென் ஆப்பிரிக்காவின் எலெக்ஷனுக்கு உதவி வருகின்றன!
இந்தியாவின் ஆர்பிஐ மற்றும் வெஸ்டர்ன் இந்தியா பிளைவுட்ஸ் (WIP) என்ற நிறுவனத்தின் அக்ரிமெண்ட்படி செல்லாத நோட்டுகள் தட்டிகளாக மாற்றப்பட்டு அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் தேர்தலில் பயன்படுத்தப்படவிருக்கின்றன.
‘‘திருவனந்தபுரத்தின் ஆர்பிஐ, செல்லாத நோட்டுகளை என்ன செய்வதென்று தெரியாத நிலையில் எங்களை அழைத்தது. சாம்பிள்களை பெற்று உதவினோம்!’’ என்கிறார் WIP யின் பொதுமேலாளரான டி.எம். பவா. 750 டன்கள் செல்லாத நோட்டை கூழாக்கி தேர்தல் பிரசார தட்டிகளாக மாற்றும் திறன் கொண்ட ஒரே இந்திய நிறுவனம் WIP மட்டும்தான். ஆர்பிஐயிடம் ஒரு டன் நோட்டுகளை ரூ.128க்கு இந்நிறுவனம் பெற்றுள்ளது! இவ்வளவுதான் மதிப்பு!
ரோனி
|