நண்டு மியூசியம்
கடலில் மீனுக்கு அடுத்து நம்மை ஆச்சர்யப்படுத்துவது பத்து கால்களைக் கொண்ட பரபர நண்டுகள்தான். அதனால்தானோ என்னவோ சீனாவில் நண்டு வடிவில் சூப்பராக மியூசியம் கட்டி அதற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். ஜியாங்சூ பகுதியிலுள்ள சூசோவு நகரில் கட்டப்பட்டுள்ள 3 மாடி நண்டு மியூசியம், அடுத்த ஆண்டு திறக்கப்பட உள்ளது.
ஆண்டுக்கு 2 ஆயிரம் டன்கள் நண்டுகளைத் தரும் யாங்செங் ஏரியின் அருகில் உருவாகியுள்ள நண்டு கட்டிடத்தில், உணவகங்கள், பொழுதுபோக்கு, சூப்பர் மார்க்கெட் ஆகியவை அமையவிருப்பதாக இதன் மேலாளரான ஸாவோ ஜியான்லின் இமைகளை விரிக்கிறார். ‘நண்டு சாப்பிட்டால் ‘அந்த’ மேட்டரில் வெளுத்து வாங்கலாம்... அப்படியானால்...’ என எசகு பிசகாக யோசித்தால் பிச்சுப் பிச்சு!
|