விஜயனின் வில் 53



நினைத்தபடியேதான் மாஸ்டர் அழைத்துச் சென்றார்.அந்த கம்ப்யூட்டர் அறையைவிட்டு வெளியே வந்ததுமே மூன்று பேர் சூழ்ந்து கொண்டார்கள். மாஸ்டர் முன்னால் நடக்க, ஆதியை பின்தொடர்ந்தபடி ஐஸ்வர்யாவும் கிருஷ்ணனும் அடுத்தடுத்து வர... இவர்களுக்குப் பின்னால் ஒருவரும், இரண்டு பக்கங்களில் இருவருமாக நடந்து வந்தார்கள்.

கணிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மூவரிடமும் ஆயுதம் இருக்கும் என்பதும், தப்பிக்க முயற்சிக்கும் பட்சத்தில் அவற்றைப் பயன்படுத்த தயங்கமாட்டார்கள் என்பதும் புரிந்திருந்தது. எனவே மூவரும் ரிஸ்க் எடுக்க நினைக்கவில்லை. சமயம் வரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ள மட்டும் கிருஷ்ணன் தயாராக இருந்தான்.

ஆதியின் முகத்தில்தான் சவக்களை பூத்துப் படர்ந்தது. இந்தத் திருப்பத்தையும் மாஸ்டரின் இன்னொரு முகத்தையும் அவன் எதிர்பார்க்கவில்லை. நம்பிக்கை வற்றிய நிலையில் அநிச்சையாக அவன் கால்கள் நடந்தன.‘‘இங்கேந்து சுரங்கத்துல ரங்கம் கோயிலுக்கு போகப் போறோமா..?’’ கிருஷ்ணன் அமைதியைக் கிழித்தான்.‘‘ஏன் கேட்கற..?’’ சகஜமாகவே மாஸ்டர் அக்கேள்வியை எதிர்கொண்டார்.

‘‘நாங்க மூணு பேரும் நுழைஞ்ச இடம்... ஐ மீன் எங்களை trap பண்ணி நீங்க வரவைச்ச ஏரியா... ஒரு பாழடைந்த கோயில். அந்த வழியா இப்ப நாம வெளியேறினா நல்லா இருக்காது. இந்த ஊர்வலத்தை மக்கள் சந்தேகமா பார்ப்பாங்க. ஸோ, வேற ரூட்லதான் நீங்க கூட்டிட்டுப் போவீங்க. அது சுரங்கமானு தெரிஞ்சுக்க கேட்டேன்...’’ ‘‘ரொம்ப புத்திசாலியா இருக்க..!’’ இதற்கு மேல் யாரும் எதுவும் பேசவில்லை. பாதுகாப்பு வளையத்துக்கு இடையில் மெல்ல மெல்ல நகர்ந்தார்கள். வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என ஊகிக்க முடியவில்லை. ஆனால், ஜீரோ வாட்ஸுக்கும் குறைவான ஒளி எதன் மீதும் மோதாதபடி அவர்களை நகர வைத்தது.

இந்த நிதானத்தை கிருஷ்ணன் பயன்படுத்திக் கொண்டான். சுற்றிலும் ஆராய்ந்தபடியே நடந்தான். ஏற்ற இறக்கத்துடன் இருபுறமும் பாறைகள். அதன் மீது வரையப்பட்ட ஓவியங்கள் பழமையானது என்பது பார்த்ததுமே புரிந்தது.

அநேகமாக ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம். ஏனெனில் எல்லாமே பிற்காலச் சோழர்களின் வாழ்க்கையைச் சித்தரிப்பவை. அதன் பிறகான ஆட்சிகள் குறித்த விவரங்கள் அந்த ஓவியங்களில் காணப்படவில்லை.

எனவே, தாங்கள் நடக்கும் சுரங்கம் பிற்காலச் சோழர்களின் ஆட்சியில் உருவாக்கப்பட்டது என்பதும்; அதன் பிறகு வந்தவர்களுக்கு இந்த ரகசிய வழி தெரிந்திருக்கவில்லை என்பதும் புரிந்தது.

மனதில் குறித்துக் கொண்டான். முக்கியமாக வேறொன்றை.விஜயாலய சோழனில் தொடங்கிய பிற்காலச் சோழ வம்சம் தொடர்ச்சியாக இல்லை. விட்டு விட்டு சிதறியிருந்தது. குறிப்பாக மூன்றாவது தலைமுறை என்று எந்த மன்னரின் ஆட்சியும் தொடரவில்லை. வாரிசு இல்லாததாலோ அல்லது வேறு சில காரணங்களாலோ தாயாதிகள் அல்லது பெண் வயிற்றுப் பிள்ளைகள் பதவிக்கு வந்திருந்தார்கள்.

இதை வைத்து பிரமாதமாக ஒரு நாவல் எழுதலாம். அல்லது குடும்ப சாபம் என்று சொல்லி பரபரவென சீரியல் எடுக்கலாம். அல்லது ஸ்பீல்பெர்க்கின் ‘இந்தியானா ஜோன்ஸ்’ சீரிஸில் இன்னொரு ஹாலிவுட் படத்தை தயாரிக்கலாம். அல்லது...சட்டென்று இதயத்தை யாரோ கவ்வியது போல் கிருஷ்ணன் நின்றான்.ஒருவேளை விஜயனின் வில்லுக்கும் பிற்காலச் சோழர்களுக்கும் தொடர்பிருக்கிறதா? 

சிறுதானிய சேமியா!

சேமியா தயாரிப்பில் திண்டுக்கல்லில் உள்ள அணில் நிறுவனம் முன்னணியில் இருப்பது நாம் அறிந்ததுதான். இதுவரை டாப் அணில் மார்க்கெட்டிங் என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனம், இப்போது ‘அணில் ஃபுட்ஸ்’ என்று புது வடிவம் எடுத்துள்ளது.

கடந்த நவம்பர் 9ம் தேதி, திண்டுக்கல்லில் நடைபெற்ற விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். இதில் சிறுதானிய சேமியாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கம்பு, வரகு, தினை, சோளம் ஆகிய சிறுதானியங்களையும் கோதுமையையும் மூலப்பொருளாகக் கொண்டு இந்த சேமியா வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

‘‘ஃபாஸ்ட் ஃபுட் போன்றவற்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மக்களின் உடல் நலம்தான் பாதிக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக நம் பாரம்பரியமான சிறுதானியங்களைக் கொண்டு சத்தும் சுவையும் மிக்க சேமியா தயாரித்துள்ளோம்...’’ என அணில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான கமலஹாசன் தெரிவித்தார்.

இந்த விளம்பரப் படத்தில் நடித்ததின் மூலம் கிடைத்த வருவாயை மக்கள் நலப் பணிகளுக்குச் செலவிட விஜய் சேதுபதி முடிவு செய்துள்ளார். அதன் முதல்படியாக, கிடைத்துள்ள தொகையில் ஒரு பகுதியை கல்வி உதவித் தொகையாக வழங்கப் போகிறார். கல்வியில் பின்தங்கிய அரியலூர் மாவட்டத்திலுள்ள 774 அங்கன்வாடிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் முப்பத்து எட்டு லட்சத்து எழுபது ஆயிரம் ரூபாயும்;

தமிழ்நாட்டில் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்குத் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ஐந்து லட்சம் ரூபாயும்; தமிழகத்திலுள்ள 11 அரசு  - செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும் என மொத்தம் நாற்பத்தி ஒன்பது லட்சத்து இருபதாயிரம் ரூபாயை தமிழக அரசிடம் வழங்கப் போகிறார்.மருத்துவராக ஆசைப்பட்டு அது முடியாமல் உயிர்நீத்த அனிதாவின் நினைவாக இத் தொகையை வழங்கப் போகிறார் என்பதுதான் ஹைலைட். 

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம் : ஸ்யாம்