அழகு ஆரூடம்!



தன் நிலை உணர்ந்து தலைக்கனம் இல்லாது ‘எங்கேயோ பார்த்த முகம்’ பகுதியில் பேசியிருக்கும் காமெடி நடிகர் சக்திவேல் இன்னும் பல சிறப்புகள் பெற வாழ்த்துவோம்!
- ப.இசக்கி பாண்டியன், திருநெல்வேலி.

நடிகை மேனகா தமிழில் முன்னணி நடிகையாக முடியாவிட்டாலும் அவர் பொண்ணு கீர்த்தி சுரேஷ் நிச்சயம் முதல் வரிசைக்கு முன்னேறுவார் என்கிறது எங்கள் அழகு ஆரூடம்!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

‘எந்த ஹெல்மெட் நல்லது?’ - ரொம்பவே ‘ஹெல்த்தி’யான தகவல்கள். அவசர, அவசிய, ‘தலையாய செய்தி’யாக அதை வெளியிட்டும் உயர்ந்து விட்டீரே... கங்கிராட்ஸ்!
- மயிலை.கோபி, சென்னை.

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த அதிசய நிகழ்வுகளைக் கூறும்போது, அன்னை மிராவின் அற்புதங்கள் எங்களை பரவசப்படுத்துகின்றன!
- எஸ்.நவீன்சுந்தர், முத்தரசநல்லூர்.

முகமூடி அணிந்து முகநூலில் ஆபாசத்தை அரங்கேற்றும் ‘கோழைகளுக்கு’ நடிகை விசாகா சிங்கின் பதில் நெத்தியடி!
- கே.எஸ்.குமார், விழுப்புரம்.

அரசுத்துறை தனியார் மயமாவது அரசின் கையாலாகாத்தனத்தையே காட்டும். அதுவும் இந்திய ரயில்வே தனியார்மயமானால் மக்களுக்கு கஷ்டம் மட்டுமல்ல... அரசுக்கே மானக்கேடு!
- மல்லிகா அன்பழகன், சென்னை.

தள்ளாத வயதிலும் புத்தகங்களுக்காக வாழும் தளவாய் தாத்தா அபூர்வ மனிதர். புத்தகங்களை அவர் பாதுகாக்கலாம்... அவர் போன்றவர்களைப் பாதுகாப்பது சமூகத்தின் கடமை!
- இராம.கண்ணன், திருநெல்வேலி.

‘விநோத ரஸ மஞ்சரி’யில் மிக்கெல் ரூஃபனெல்லியின் எட்டடி ‘இடை’ அளவைப் பார்த்து மயக்கமே வந்தது. இதுதான் இடையழகில் மயங்குறதா?
- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

ரசாயனம் இருப்பதால்தான் தமிழக காய், கனிகளுக்கு கேரளாவில் தடை. நாம் ஆரோக்கியமான விவசாயம் செய்தால் யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை!
- பிரபா லிங்கேஷ்,
மேலகிருஷ்ணன்புதூர்.

விஜய்யின் ‘புலி’ படத் தகவல்களும், விஜய் கொடுத்த திருப்பதி ட்ரீட்டும் விஜய் ரசிகர்களுக்கு அவரின் பிறந்தநாள் ட்ரீட்டேதான். இனி ‘புலி’ ரிலீஸ் பற்றித்தான் ‘எப்ப மாமா ட்ரீட்டு?’ எனக் கேட்கணும் பாஸ்!
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.

விஷத் தன்மையுள்ள விரைவு உணவு ‘நூடுல்ஸை’ புறந்தள்ளி விட்டு, நமது பாரம்பரியமிக்க ‘இடியாப்பத்திற்கு’ இனிமேல் மாறிவிடுவது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்!
- மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை.