ஸ்டில்லே



எம்.பி.பி.எஸ் கனவு நிறைவேறாமல் போன மாணவர்களுக்கு மற்றும் பல மருத்துவப் படிப்புகளைப் பட்டியலிட்டு வழிகாட்டியுள்ள குங்குமத்தின் சேவை ஓஹோ!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ‘கைம்மண் அளவு’ சமூகத்தின் முக்கிய அங்கங்களில் நிகழ்கிற, நிகழப்போகிற மாற்றங்களை கற்பிக்கிறது. அனைவரும் கற்க வேண்டிய பால பாடம் இது.
- கோ.பகவான், பொம்மராஜுப்பேட்டை.

‘பாகுபலி’யில் அனுஷ்காவும், தமன்னாவும் கவர்ச்சியில் பின்னியெடுக்கப் போவது உறுதி. அதான் அவந்திகாவின்... ஸாரி, தமன்னாவின் ஸ்டில்லைப் பார்த்தாலே புரியுதே!
- எம்.மைக்கேல்ராஜ், சாத்தூர்.

‘மனித சிறுநீரில் விவசாயம்!’ அடடா, கலக்குகிற இந்த புது கான்செப்ட் பற்றிப் படித்ததும் வயிறு கலக்குது சார். இனி இதற்கும் கிராக்கி ஏற்பட்டு விடுமோ!
- வி.விக்னேஷ்வரன், சிவகாசி.

பல கோடிக்கு அதிபதியாய் இருந்து, அனைத்தையும் இழந்தாலும் இன்று சினிமாவில் தலை காட்டி சாதிக்கும் வாய்ஸ் ஓவர் ராமநாதனின் நம்பிக்கை அசத்தியது!
- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

சூரிய நமஸ்காரம் தொய்வின்றி செய்த காரணத்தால்தான் சுப்பிரமணிய சாஸ்திரிகள் 103 வயது வரை வாழ முடிந்ததை அறிய முடிகிறது!
- இராம.கண்ணன், திருநெல்வேலி.

நயனுக்கு இன்னும் ‘நயன்’ டைம்ஸ் திருமணம் என்று செய்தி வந்தால் கூட அவர் கவலைப்பட மாட்டார் சார். பைசா செலவின்றி கிடைக்கும் பப்ளிசிட்டியாச்சே இது!
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.

மோடி ஓர் ஆண்டில் 18 நாடுகள்... மன்மோகன் 10 ஆண்டுகளில் 73 நாடுகள்... இந்தப் போட்டி பயணங்களால் தேசத்துக்கு பயன் இருந்தால் சரி!
- இரா.கணபதி ராவ், தஞ்சாவூர்.

கயானா நாட்டின் பிரதமராகத் தேர்வாகியுள்ள  தமிழர் மோசஸ் நாகமுத்து, நேர்மையாக ஆட்சி செய்து, தமிழர்களின் தலை நிமிர வைக்க வாழ்த்துகிறோம்!
- அ.குணசேகரன், புவனகிரி.

சிவகார்த்திகேயன் தன் படத்துக்கு ‘ரஜினி முருகன்’ என்று வைத்திருப்பதில் மகிழ்ச்சி. உண்மையில் அது ரஜினி பெயரல்ல... ரஜினி ரசிகர்களில் ஒருவன் பெயர்!
- வள்ளியூர் ஏ.பி.எஸ்.ரவீந்திரன், நாகர்கோவில்.

சென்னையில் சாதாரணமாக காய்கறிக் கூடையோடு ரோட்டில் நடந்த கன்னட நடிகர் ராஜ்குமாரைப் பற்றிப் படித்து வியந்தோம். எளிமை இருக்கும் இடத்தில்தான் சூப்பர் ஸ்டார் பட்டம் இருக்கும் போல!
- எஸ்.நதியா செல்வன், புதுச்சேரி.

நம்ம ஊர் ‘பற்பொடிகள்’, நகரத்து ‘டூத் பேஸ்ட்டு’களை விட ஒஸ்தி எனச் சொல்லி விழிப்புணர்வு தந்த கிச்சன் to கிளினிக் பகுதிக்கு நன்றி!
- மயிலை.கோபி, சென்னை.