ஓவியாவை பார்த்தா பயமா இருக்கு!



‘‘பெயரைப் பாருங்க... ‘யாமிருக்க பயமே’ எப்படியிருக்கு? அதுதாங்க காமெடி த்ரில்லர். கலகலப்பா காமெடி த்ரில்லர் தமிழில் வந்து எவ்வளவு நாளாச்சு. யோசிச்சுப் பாருங்க... உங்க ஞாபகத்திற்குள் அது அடங்காது.

 பொதுவா த்ரில்லர்னா பயமுறுத்தும்... பதறி நடுங்க வைக்கும். அப்படி இல்லாமல் பயமும், காமெடியும் கலந்த த்ரில்லர் இது. முதல் பாதி முழுக்க அடுக்கடுக்கா வந்து விழுகிற முடிச்சுக்கள், அடுத்த பாதி அவை அவிழ்கிற விதம். பயப்படலாம்... சிரிக்கலாம்... கொஞ்சம் நடுங்கலாம். நான்கு ஃபிராடுகள் ஒரு ஹோட்டல்ல சேர்ந்து எல்லாரையும் ஏமாத்துற கதை.

 கிருஷ்ணா, ஓவியா, கருணாகரன், ரூபா மஞ்சரி இவங்க நாலு பேரும் சேர்ந்து பண்ணுகிற சுவாரஸ்யங்கள்தான் எல்லாமே. அது அடுக்கடுக்கா கோர்த்து வந்திருக்கிற விதம் தமிழுக்கு நிச்சயம் புதுசு’’ - உற்சாகமாகப் பேசுகிறார் அறிமுக இயக்குனர் டிகே. இவர் கே.வி. ஆனந்தின் பிரதான சீடர்.

‘‘த்ரில்லரில் உள்ளே இழுத்து உட்கார வைப்பது கஷ்டமான வேலை இல்லையா?’’ ‘‘அதை உணர்ந்தே செய்திருக்கோம். கதையில் நிறைய கவனம் செலுத்தினோம். சின்னச் சின்னதா பயமுறுத்துகிற வழிகளை சேகரிச்சோம். பொதுவா, இது மாதிரி படங்களில் ஒளிப்பதிவில் பயமுறுத்தி பின்னணியில்திடுக்கிட வைப்பாங்க. கிருஷ்ணா,

கருணாகரன் ரொம்ப உணர்ந்து நடிச்சிருக்காங்க. த்ரில்லர்ல சிரிக்க வைக்கிறது இன்னும் கஷ்டமான வேலை. இதை அழகா கடந்து வந்திருக்காங்க அவங்க. எனக்கும் சரி, அவங்களுக்கும் சரி இது முக்கியமான படம்தான். ‘கோ’ பண்ணிக்கிட்டு இருக்கும்போதே புரொடியூசர் எல்ரெட் குமார் இந்தக் கதையைக் கேட்டார். ‘அப்படியே வச்சிரு... நாம கண்டிப்பா படம் பண்ணலாம்’னு சொன்னார். என் குரு கே.வி.ஆனந்த்கிட்ட சொன்னேன். ‘நல்லாயிருக்கு... இதையே முதல் படமா பண்ணலாம்’னு உற்சாகப்படுத்தினார்.’’

‘‘த்ரில்லர் படத்துல ரூபா மஞ்சரி, ஓவியான்னு அழகழகான ஹீரோயின்கள் இருக்காங்களே...’’‘‘இதில் காதல் இல்ல... ஆனா கலாட்டா இருக்கு. அடுத்து என்ன நடக்கும்னு ஒவ்வொரு ஃப்ரேம்லயும் த்ரில் பின்னும். ஓவியாவிற்கு இது ரொம்ப முக்கியமான படம். இதுக்கு முன்னாடி வந்த படங்களில் அவங்க சும்மாதான் வந்துட்டுப் போனாங்க. இதில் நிஜமா அப்படியில்லை. இவங்க நாலு பேரும் படம் முழுவதும் வந்து பயப்பட வச்சு, சிரிக்க வைப்பாங்க.

இதில் கேமிரா ராமி, மியூசிக் டைரக்டர் பிரசாத், ஆர்ட் டைரக்டர் செந்தில், காஸ்ட்யூம் டிசைனர் டீனா, டான்ஸ் மாஸ்டர் விஜின்னு எல்லாருக்கும் இதுதான் முதல் படம். அவங்களுடைய முதல் படத்திற்கான உற்சாகம் அப்படியே படத்தில் கேரி ஓவர் ஆகி வந்திருக்கு. அதை என்னால் படம் பார்க்கும்போது உணர முடிஞ்சது. இன்றைய தொழில்நுட்பம் சரியான விதத்தில் படத்தில் பிரதிபலிக்குது.

இவ்வளவு அமானுஷ்யமான படத்தை பார்க்கவே உங்களுக்கு வெரைட்டியா இருக்கும். ஆக்ஷன், சென்டிமென்ட் படங்களுக்கு மத்தியில் கொஞ்சம் பயப்பட வைக்கிறதும் வித்தியாசம்தானே... பயப்படத் தயாராகிட்டு படத்துக்கு வாங்கப்ரதர்ஸ்!’’

- நா.கதிர்வேலன்