தப்பா பாஸ்?



தேர்வு சமயத்தில் பாடங்களில் எப்படி ‘சென்டம்’ வாங்கலாம் என ‘டிப்ஸ்’ தந்த குங்குமம், இப்போது யாரெல்லாம் எஞ்சினியரிங் சேரலாம் என வழிகாட்டி இருப்பது டைமிங் உதவி!
- மயிலை.கோபி, சென்னை - 83

ரஜினியைப் பற்றி யார் யாரோ மூச்சிரைக்க பேசியிருக்கிறார்கள். பேசி வருகிறார்கள். ஆனால், அவர் மனைவி லதா ரஜினிகாந்த் அவரைப் பற்றிப் பேசிய வார்த்தைகள் அனைத்தையும் உண்மைக்கு மிக நெருக்கமாக உணர முடிந்தது.
- இரா.மணியரசன், தேனி.

பென்சில் படத்தில் பெண் சிலையாக போஸ் கொடுக்கும் ஸ்ரீதிவ்யாவைப் பார்த்தால் நமக்கே பரபரக்கிறதே! ‘கட்டிப் பிடிக்காம நடிக்க முடியுமா?’ என ஜி.வி கேட்பது என்ன தப்பா பாஸ்?
- ஜெயந்தன், சென்னை-50.

மேஜர் முகுந்த் வரதராஜனின் மறைவு கண் கலங்க வைத்தது. ‘நாடே இவனுக்கு மரியாதை பண்ணியிருக்கு’ என்ற அவரின் தந்தையின் வார்த்தை பரிசுத்தமானது. அந்தக் குடும்பம்
இந்தியாவுக்கே பெருமை!
- என்.ஜெய், காரமடை.

காமெடியாய் பேசினால் பெண்களுக்குப் பிடிக்கும் என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரியும். அதற்குப் பின் இத்தனை அறிவியல் இருக்கிறதா? ‘அவன் அவள் அன்லிமிட்டட்’ அசத்திடுச்சுப்பா!
- எச்.அருள்தாஸ், நாகை.

‘நல்ல கீரை’ ஜெகநாதனின் தொலைநோக்குப் பார்வை மலைக்க வைத்தது. விஷம் தோயாத இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வரும் அவருக்கு மக்கள் ஆதரவு என்றும் உண்டு!
- இரா.வளையாபதி,
தோட்டக்குறிச்சி.

சூர்யா-கார்த்தி இருவருக்கும் உள்ள வித்தியாசத்தை சொன்ன டைரக்டர் லிங்குசாமி, ‘சூர்யாவிடம் கார்த்தி நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்’ என்பதையும் ஓப்பனாகச் சொன்னது வியக்க வைத்தது.
- முத்தையா தம்பி, மஞ்சக்குப்பம்.

எல்-நினோ விளைவால் வரிசை கட்டி வரும் ஆபத்துகளை நினைத்தால் அடிவயிறு கலங்குகிறது. இருந்தாலும், ‘எவ்வளவோ தாங்கிட்டோம்... வரப்போகும் வறட்சி ஆண்டையும் தாங்க வேண்டியதுதான்’ என மனம் தயாராகி விடுகிறது!
- கவியகம் காஜுஸ், கோவை.

ரத்த தானத்திற்காகவே ‘க்ரேயோன் டிஜிட்டல் ரீச்’ கொண்டு வந்திருக்கும் ஆண்ட்ராய்டு ஆப் அசத்தல். கேளிக்கை சாதனத்தை உயிர்காக்கப் பயன்படுத்தும் மகேஷுக்கு எங்களது
வாழ்த்துகள்!- மா.மாரிமுத்து, ஈரோடு-1.

சென்னையில் சிறை அட்மாஸ்பியரை அப்படியே தரும் ‘கைதி கிச்சன்’ ஹோட்டல் மிரட்டியது. அப்படியே ஒரு குத்து டான்ஸும் உள்ளே ஏற்பாடு பண்ண வேண்டியதுதானே தல!
சி.கொ.தி.முருகேசன்,
குன்னத்தூர்.