‘நான் அரசியலுக்காக என்றைக்குமே அரசியல் நாகரிகத்தை பலி கொடுத்ததில்லை’ என்ற ஸ்டாலினின் வாக்கியம், வெற்றிக்கு அச்சாரம். அவரது எளிமையும் கண்ணியமான பேச்சும் குறிப்பாக நடுநிலை வாக்காளர்களையும் இளம் வாக்காளர்களையும் நிச்சயம் கவர்ந்திருக்கும்.
- மா.மாரிமுத்து, ஈரோடு.
‘பேசும் சித்திரங்கள்’ புதிய பகுதியில் ‘சின்ன மனுஷி’ குறும்படம் பற்றி சொன்ன விதம் மனதில் காட்சியாக ஓடி, மனதை கனக்கச் செய்தது. ‘படைப்புதான் வாழ்க்கையை சக வலிகளோடு எதிர்கொள்ள கற்றுக்கொடுக்கிறது’ என்ற வரிகள் யதார்த்தம்.
- ஜோகோ, ஜோலார்பேட்டை.
பண்பட்ட எழுத்தாளர் அசோகமித்திரன் கைவண்ணத்தில் ‘நடைவெளிப் பயணம்’ முதல் பார்வையிலேயே ஈர்த்துவிட்டது. குஷ்வந்த் சிங்கின் மற்றொரு பக்கத்தை சிறப்பாக வடித்திருந்தார் அசோக
மித்திரன்.
- எம்.பர்வீன் பாத்திமா, சென்னை-91.
‘அமெரிக்காவில் மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாக... ஜப்பானில் ஜாக்கி சான் கூப்பிட்டாக... நான் பிஸி’ எனக் கதையளக்கும் கதாநாயகிகளுக்கு மத்தியில் ‘சான்ஸ் வரலை... இனி வரும்னு நம்புறேன்’ எனச் சொல்லியிருக்கும் இனியா பளீர் மற்றும் ஜிலீர்!
- ராஜசேகர், திருவான்மியூர்
இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் சென்ட்ராயன், பாடி லாங்குவேஜில் டிஸ்டிங்ஷன். அவருக்குள்ளேயிருந்து எகத்தாளம் செய்யும் நகைச்சுவை, நேர்முகத்திலும் சதிராடுகிறது. எதிர்காலம் பிரகாசம்தான்!
- ஆர்.கே.லிங்கேசன்,
மேலகிருஷ்ணன்புதூர்.
‘நெடுஞ்சாலை’ நாயகி ஷிவதா அழகில் ‘மினி நயன்தாரா’வேதான். ஆனால், அவர் ‘கதைக்குத் தேவைப்பட்டாலும் நீச்சல் உடையில் நடிக்கமாட்டேன்’ என்பதை எங்கள் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஏற்றுக்கொள்ளாது!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
கேரளாவில் திருவள்ளுவர் இறைவனாகவே கொண்டாடப்படுகிறார்... திருக்குறள் வேதமாகப் போற்றப்படுகிறது என்று படித்தபோது மனம் பரவசம் அடைந்தது.
- சி.கொ.தி.முருகேசன், குன்னத்தூர்.
நடிகர் ஆர்யாவைக் கரம் பிடிக்க விருக்கும் மணமகளுக்கு அட்
வான்ஸ் வாழ்த்துகள். ஆர்யா பாய் இனி தன் ‘ப்ளேபாய்’ இமேஜைத் துறந்து மனைவி மீது ‘அன்பாய்’ மாற வேண்டியதுதான்!
- எஸ்.மந்திரமூர்த்தி, புதுச்சத்திரம்.
‘நாடு கடந்த தமிழீழ அரசின்’ பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன், ‘சீனப் பாம்பு இலங்கையை விழுங்கிக் கொண்டிருக்கிறது’ என்று சொல்லியிருப்பது, இந்திய அரசுக்கு விடப்பட்ட அபாய அறிவிப்பு. இனியும் நாம் அசட்டை காட்டினால், சீனப் பாம்பும் பாகிஸ்தான் நரியும் பாய்வது நிச்சயம்!
- மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை-18.