‘‘நம்ம கூட்டணியில, ஒரு கட்சி இன்னொரு கட்சியை கவுத்துடுமோ... காலை வாரி விட்டுடுமோன்னு ஒவ்வொரு கட்சியும் இன்னொரு கட்சியைப் பார்த்து பயந்துக்கிட்டு இருக்கு...’’
‘‘அப்போ நம்மோடது ‘பயமான’ கூட்டணின்னு சொல்லுங்க!’’
- கே.ஆனந்தன், தர்மபுரி.
‘‘கட்சி ஆபீஸ்ல என்ன ஒரே
அழுகைச் சத்தம்..?’’
‘‘கடைசி வரை அந்தக் கட்சிக்கு எதிர்பார்த்த கூட்டணி அமையாமலே போயிடுச்சாம்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.
‘‘அவரை ஏன் தேசிய வாக்காளர்னு தலைவர் சொல்றார்..?’’
‘‘எந்த மாநிலத் தேர்தல்லயும் கள்ள ஓட்டுப் போட தயாரா இருப்பாராம்...’’
- அம்பை தேவா, சென்னை-116.
‘‘எதிர்க்கட்சி அமைச்சிருக்கறது பலமான கூட்டணியா... எப்படிச் சொல்றே?’’
‘‘ஒவ்வொரு மீட்டிங்லயும நம்ம தலைவருக்கு விழற அடியை வச்சுத்தான்!’’
- கே.ஆனந்தன், தர்மபுரி.
‘‘தொண்டர்கள் செருப்பு வீசியும், தலைவர் இன்னும் கூட்டத்தை முடிக்கலையே... ஏன்?’’
‘‘அவர் காலுக்கு பொருத்தமான செருப்பு இன்னும்
வரலையாம்!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
‘‘யோவ்...
கூட்டத்துக்கு கூட்டி வந்தது எதிர்க்கட்சி ஆளுங்களா?’’
‘‘ஏன் தலைவரே கேட்கறீங்க..?’’
‘‘நான் பேச்சை நிறுத்தும்போதெல்லாம் கை தட்டறாங்களே..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
‘‘மெகா சீரியல்
நடிகையை பிரசாரத்திற்குக் கூப்பிட்டது தப்பாப் போச்சா... ஏன்?’’
‘‘காலையில ஒரு தொகுதியில பேச ஆரம்பிச்சவங்க ராத்திரி பத்து வரை நிறுத்தவேயில்லை!’’
- ஏ.ஜே.ஜப்பார், சத்தியமங்கலம்.