பெரும்பாலான அதிகாலை நடைப்
பயிற்சி பயணங்கள், வீட்டி லிருந்து துவங்கி ஹோட்டலில் போய்
முடிகிறது!
- எழிலன் டெண்டல் சர்ஜன்
ஏப்ரல் மாசம்தானே பொறந்துருக்கு... அதுக்குள்ள பனியன் ஜட்டி விளம்பரம் மாதிரி ஆரம்பிச்சிடானுக...
# எஞ்சினியரிங் காலேஜ்!
- குற்றாலம் பாலசுப்ரமண்யம்
எப்பவுமே நாமதான் முட்டாள்கள் என்பதை சிம்பாலிக்கா சொல்லவே ஏப்ரல் மாசத்திலே எலெக்ஷன் நடக்குதோ?
- அன்பு சிவன்
ஹெலிகாப்டரில் பறந்து பறந்து ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்களுக்கு விண்ணப்பம்...
பவர்கட் காரணமாக இன்று அதிகாலையிலிருந்தே குளிப்பதற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் இல்லாமல் வியர்வையில் புழுங்கிக் கொண்டிருக்கிறோம். எனவே எங்கள் காலனியின் மேல் பறந்து உங்கள் ஹெலிகாப்டர் ஃபேனால் விசிறி விடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த விசிறிவிடும் செலவை பிரசாரக் கணக்கில் வைக்க வேண்டாம் என்று தேர்தல் கமிஷனையும் கேட்டுக்கொள்கிறோம்.
- செல்வ குமார்
குழந்தையும் கொசுவும்
ஒண்ணு...
அடிச்ச பின்னாடி
நமக்குத்தான்
வலிக்கும்!
- கிராமத்து கிருஷ்ணா
மன்னிப்பதற்கு
முன் பழிவாங்கி விடு... நாம மட்டும் முட்டாப் பயலா என்ன?
- முகமது முக்தார்
நிழலில் நிறுத்திய பைக்கின் சீட்டில் உட்காருபவர்கள், உண்மையில்
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்...
# என்னா வெயிலு...
என்னா வெயிலு!
- முரளி முனுஸ்
வெயில் பூக்கும் மரத்தில்
நிழல் உதிர்த்து நிற்கிறாய்
- ரேவா பக்கங்கள்
கவனித்திருக்கிறீர்களா?
முட்டாள்கள் வாழ்ந்து
விடுகிறார்கள்.
எந்தக் குழப்பமும் இல்லாமல்.
- முத்துராம்
அடுத்த பிரதமர் யார் என்று குழப்பமாக இருப்பதால், யானையை விட்டு பிரதமர் பதவிக்கு வரிசையில் நிற்பவர்களின் கழுத்தில் மாலை போடச் சொன்னால், யானை கடுப்பாகி மிதித்துக் கொன்று விடும்!
- அராத்து
பண்டிகை நாட்களில் பெண்கள் மட்டுமல்ல... கடவுளரும் ஓவர்டைம் பார்க்க நேரிடுகிறது!
- சாந்தி மாரியப்பன்
அடி கொடுத்தே ஃபேமஸ் ஆனாரு கேப்டன்... அடி வாங்கியே ஃபேமஸ் ஆகிருவாரு போல கெஜ்ரி வால்!
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்
தண்ணீர் இலவசம்தான். பாட்டிலுக்குத்தான் காசு: ராமராஜன்
# குவாட்டர் பாட்டில எடைக்கு போட்டு சரக்கடிக்கிற குரூப்ப சேர்ந்தவரா இருப்பாரோ?!
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்
உயிரோட இருக்கும்போது யாரை வேணாலும் லவ் பண்ணியிருக்கலாம்; கல்யாணம் பண்ணியிருக்கலாம். ஆனா உயிர் போன பின்னாடி, உங்க ஆத்மா அடையப் போறது ‘சாந்தி’யைத்தான்!
- பரிசல்காரன்
twitter வலைப்பேச்சு
@thoatta
தள்ளிப் போனது கோச்சடையான் ரிலீஸ்
# மலேசிய விமானத்தையோ, ராமஜெயம் கொலையாளியையோ கண்டுபிடிக்கிற அன்னைக்குத்தான் ரிலீசுன்னு சொல்லிடுங்க...
@RazKoLu
நம்மாளுகள நாசா விஞ்ஞானிக லெவலுக்கு சிந்திக்க வைக்க இந்தக் கேள்வி போதும்... ‘‘ஸார், இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா?’’
@Pethusamy
தூங்கி எழுந்ததும் தெப்பலாக நனைந்திருந்தேன். மோடி அலை என் மீதும் அடித்துவிட்டது போல...
@Iamfakeid
என் கவலைகளுக்காக நீங்கள் வருந்த வேண்டாம், வாழ்க்கை பாரபட்சமற்றது. வருந்த உங்களுக்கும் கவலைகளைத் தரும்!
@altappu
இந்த தமிழ்ப் பாட்டுல நடுவுல ஒரு பத்து கெழவிக வெக்கப்பட்டுட்டே ஆடற கலாசாரத்தை கண்டுபுடிச்சது யாரு?!
@jeganjeeva
எல்லைகள் மாறினாலும் வெற்றிடம் அங்கேதான் இருக்கப் போகிறது!
@pugalmani55
இந்த கருத்துக்கணிப்பு எல்லாம் யாரை வச்சு நடத்துறாங்க? என்னிடமும், நமக்குத் தெரிந்தவர்களிடமும் இதுவரை கருத்து கேட்டதாக தெரியவில்லையே!
@writercsk
மதுரை ஆதீனத்திற்கு இப்போது ஜெயலலிதாவைக் காண்பித்திருக்கும் அதே சிவபெருமான்தான், முன்பு அவருக்கு நித்யானந்தாவைக் காண்பித்தார்.
@iamvaalu
பாஜகவுக்கு வாக்களித்தால் 6 மாதத்தில் மீண்டும் தேர்தல் வரும்: ஜி.கே.வாசன்
# டேய், அவன் வித்தைய தப்பா கத்து வைச்சிருக்கான்டா!
@senthilcp
‘வில்லு’, ‘தலைவா’ படங்கள் கற்றுக் கொடுத்த நீதி... படத்தோட ஹீரோவை விட இயக்குநர் ஹீரோயினை ஈசியா கரெக்ட் பண்ணிடறார்!
@Gnanakuthu
வேட்பாளர்களுக்கு வாக்களிக்கச் சொல்லும் பிரசாரங்களை விட, அனைவரையும் வாக்களிக்கச் சொல்லும் பிரசாரங்கள் அதிகமாக இருப்பது இந்தியாவில மட்டும்தானே!
@expertsathya
ஆறறிவை சுமந்து கொண்டிருப்பதே பெரும் பாரமாகத்தான் இருக்கிறது.
@arvenky
இந்த நந்தன் நீல்கேனி எல்லாருக்கும் ஆதார் அட்டை கொடுத்து, கடைசில ராகுல் காந்திக்கு கொடுக்கத்
தவறிட்டார்.
@japn_raghu
மகன் ராகுலுக்கு ரூ.9 லட்சம் கடன்: வேட்பு மனுவில் சோனியா தகவல்
# கேக்கிறவன் கேனயனா இருந்தா எலி கூட எலிக்காப்டர் ஓட்டுமாம்!
@iamkarki
இமயமலைக்குக் கூட போயிடலாம் போல. இந்த வெயில்ல வேளச்சேரில இருந்து சாலிகிராமத்துக்கு வர்றது பிரம்ம பிரயத்தனமா இல்ல இருக்கு!
@ismailmini1983
எழும்பூர் கோர்ட்டில் ஹெலிபேட் அமைக்காததனால் அம்மா கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை.
@MEKALAPUGAZH
அம்மாதான் பிரதமர் என்று சொல்பவர்களில் எவ்வளவு பேரால் அடுத்த முதல்வர் பெயரைச் சொல்ல முடியும்?