
முதல்ல நடிக்கவிருந்த போலீஸ் படத்துக்காக உடம்பை ஏத்திக்கிட்டிருந்தார் விக்ரம். அது கைவிடப்படவே, அடுத்து நடிக்கப்போற படத்துக்காக உடம்பு இளைச்சுக்கிட்டிருக்கார். கடம்பா... அது என்ன உடம்பா..?
ரெண்டு காலகட்டங்கள்ல பயணப்படற ‘ஏழாம் அறிவு’ படத்தில, தற்கால நடப்பில சர்க்கஸ் கலைஞரா வர்றாராம் சூர்யா. இதுக்காக தாய்லாந்து போய் பயிற்சிகள் எடுத்து வந்து நடிச்சிருக்கார். ஜோரா கைதட்டலாம்!
பாலாவோட ‘அவன் இவன்’ல அறிமுகமாகற ஜனனி ஐயர் அதில போலீஸா வர்றாங்க. சமீபத்தில கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைல சில காட்சிகளை எடுத்திருக்கார் பாலா. விடமாட்டார் போல இருக்கே..?
ஹாலிவுட் கம்பெனியான ‘ட்வென்டியத் ஃபாக்ஸ்’ தமிழ்ல தயாரிக்கிற படத்தை அவங்களோட சேர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கப் போறதைவிட, அதை தன்னோட அசிஸ்டென்ட் சரவணனையே டைரக்ட் பண்ண விட்டிருக்கிறது பெரிய செய்தி. வெல்டன்..!
சென்னையைச் சுத்தி சுத்தி நடக்கற ‘காவலன்’ ஷூட்டிங்ல விஜய், அசின், வடிவேலு நடிக்க, ஒருத்தர் இல்லாட்டியும் ஷூட்டிங் பேக்கப் ஆகற அபாயம் இருக்கவே சீரியஸா எடுத்துக்கிட்டிருக்காராம் சித்திக். சிரிக்கவும் வைக்கணுமே..?

தமிழ்ல வந்த ‘அங்காடித்தெரு’ தெலுங்கில, ‘ஷாப்பிங் மால்’னு டப் ஆகுது. தமிழ்லயே சொந்தமா டப்பிங் பேசற அஞ்சலிக்கு தாய்மொழில பேச வாய்ப்புக் கிடைக்கவே சந்தோஷமா பேசியிருக்கு. ‘பாக உந்தி’ன்னாங்களாம் டோலிவுட் இஞ்சினீயர்ஸ்..!
தான் நடத்தி வர்ற தொண்டு நிறுவனத்துக்கு மாதந்தோறும் நிதி உதவி பண்றதால, சௌந்தர்யா ரஜினி கல்யாணத்தன்னைக்கு 1000 பேருக்கு அன்னதானம் பண்ணியிருக்கார் ராகவேந்திரா லாரன்ஸ். நல்ல விஷயம்..!
82ல வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’யை தமிழ்ல மட்டுமில்லாம தெலுங்கு, கன்னடம், இந்திலயும் டைரக்ட் பண்ணி சக்சஸ் பார்த்த எஸ்.ஏ.சி, இப்ப திரும்பவும் அதை ரீமேக் பண்றார்.
‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி’ படத்தில பிஞி ஷிலிஸிங்கிற புது டிஜிட்டல் டெக்னிக்ல ஒளிப்பதிவு செய்திருக்கார் எஸ்.பி.எஸ்.குகன். இந்தியாவில இது முதல் முயற்சிங்கிறதால ‘லிம்கா ரெகார்ட்ஸு’க்குப் போயிருக்கு. எப்படி வருது பாக்கலாம்..!
- கோலிவுட் கோயிந்து