குட்டிச்சுவர் சிந்தனைகள்



இதுவரை யாருக்குமே தெரியாத என் நண்பனின் காதல் கதைகளை இந்த வார காதல் ஸ்பெஷலுக்காக உங்ககிட்ட மட்டும் சொல்றேன். அவனோட காதல் சமாச்சாரங்கள் பல அவன் சம்சாரத்துக்கே  தெரியாது. அவன் காதல் அத்தியாயங்களின் பல சம்பவங்கள் சம்பந்தப்பட்ட காதலிகளுக்கே தெரியாது. இவ்வளவு ஏன்... அவன் காதலிச்ச விஷயம் கூட அவன் காதலிச்ச காதலிங்க சிலருக்கு தெரி யாதுன்னா பாருங்க.

மூன்றாம் வகுப்பு மோகனா

இரண்டாம் வகுப்பை மூன்று தடவைக்கு மேல படிச்சும் ஃபெயிலானவங்க நாங்க. எங்களை இன்னமும் அதே கிளாஸ்ல வச்சிருந்தா, புதுசா படிக்க வர்ற குழந்தைங்க, பெஞ்சு மேலயே ஏறி உட்க £ர்ந்தாலும் ப்ளாக் போர்டு மறைக்கும்னு, பாஸ் போட்டு மூணாங்கிளாஸ் அனுப்பிட்டாங்க. அந்த வருசம் புதுசா சேர்ந்திருந்த மோகனாவை யாரு காதலிக்கலாம்னு எங்களுக்குள்ள நடந்த போட்டியில  ‘சாட் பூட் த்ரீ’ போட்டு என் நண்பன் ஜெயிச்சுட்டான். காக்கா கடில கடலை மிட்டாயி, கடன் சொல்லி சூட மிட்டாயி, காலை மாலை ‘ஹாய்’, ‘பாய்’ன்னு நல்லா போன காதலுக்கு ஒரு பரீட்சை வ ந்துச்சு. அதுவும் பரீட்சைங்கற பேர்லயே வந்துச்சு.

மேத்ஸ் பரீட்சைல என் நண்பன் மோகனாவ விட மூணு மார்க் அதிகமா எடுத்திட்டான். வெறும் மூணு மார்க்கால தன் மரியாதை போச்சுன்னு நம்பின மோகனா, என் நண்பனோட காதலை  வழியனுப்பி வச்சுட்டா. எல்லாருக்கும் பெருமை கொண்டு வர மார்க்கு, என் நண்பனுக்கு மட்டும் வெறுமைய கொண்டு வந்திருச்சு. இதுல கவனிக்க வேண்டிய விஷயம், என் நண்பன் மொத்தமா  வாங்குன மார்க்கே மூணுதான்.

ஐந்தாம் வகுப்பு அமுதா

ஐந்தாம் வகுப்புல எங்களுக்கு காதல் வந்தது அமுதா மேல். ஆனா இந்த தடவை யாரு காதலிக்கணுங்கிறத முடிவு செய்ய நாங்க ‘சாட் பூட் த்ரீ’ போடல. இப்போ கொஞ்சம் படிச்சு முதிர்ச்சி வந்த தனால, இங்கிலீஷ்ல ‘இங்கி பிங்கி பாங்கி’ போட்டோம். விதி, காதலுக்காக ஏங்கிக் கிடந்த என்னைய ‘டாங்கி’ ஆக்கிடுச்சு.

மறுபடியும் யோகம் என் நண்பனுக்கே அடிக்க, அமுதாவோடு அடுத்த அத்தியாயத்தை ஆரம்பிச்சான். பேனாவுல இங்க் ஊத்தறது, பரீட்சைல பதில் காட்டுறது, லீவுல நுங்கு வண்டி ஓட்டுறது, எலந் தப்பழம் ஊட்டுறதுன்னு ஜாலியா போச்சு வாழ்க்கை. காதல் மொட்டு பூவாகுற வேளையில், மீண்டும் முழு ஆண்டு பரீட்சை வில்லனா வந்துச்சு. தன்னை விட அஞ்சு மார்க்காவது அதிகமா எடுத்தா தான், ஆறாம் வகுப்புல தன்னோட பேச முடியும்னு அமுதா போட்டா கண்டிஷன்.

அதனால, இருக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு, இடைத்தேர்தல் தொகுதில கூடுற ஆளுங்கட்சி அமைச்சர்கள் மாதிரி, பரீட்சைக்கு 10 நாள் முன்னால இருந்தே தீயா வேலை செய்ய ஆரம்பிச்சோம். எப்படியும் ஆங்கிலப் பரீட்சைல சென்டம் வாங்கணும்னு வகுப்பறைக்கு போனா, வாத்தியார் கொடுத்தது அறிவியல் கொஸ்டீன் பேப்பர். பாஞ்சு பாஞ்சு படிச்சதுல, பரீட்சை தேதிகள விட்டுட்டோம். ரிசல்ட் வந்தப்புறம் பார்த்தா, சொன்ன மாதிரியே அமுதாவ விட அஞ்சு மார்க் அதிகமா வாங்கிட்டான் என் நண்பன். பிரச்னை என்னன்னா, அமுதா ஆங்கிலத்துல மட்டும் வாங்கினதை, அவன் ஆல் சப்ஜக்ட்லயும் சேர்த்து வாங்கினான்.                

பத்தாம் வகுப்பு பத்மா

மதிப்பான பெண்களை பிடிக்க, மதிப்பெண்கள் வேணும்னு புரிஞ்சுக்கிட்டு, அஞ்சாம் வகுப்புக்குப் பிறகு அமர்க்களமாய் வேலை செஞ்சோம். படிப்புல நாங்க ஃபுல் ஸ்பீடுல போறப்ப, பத்தாம் வகுப்புல  வந்த ஸ்பீடு பிரேக்கர்தான் பத்மா. அழகுல 100 மார்க் வாங்கினாலும், அறிவுல பத்து மார்க் தாண்டாத பத்மாவை யாரு காதலிக்கலாம்னு காசை எடுத்து டாஸ் போட்டோம். அது தவறி உருண்டு  ஓட ஆரம்பிச்சிருச்சு.

காசு என்னதுன்றதால நான் காசு பின்னால போனேன், என் நண்பன் லூசாகி பத்மா பின்னால போனான். நாம் ஒண்ணு நினைச்சா விதி ஒன்பது நினைக்குது. பத்தாப்பு பெ £துப் பரீட்சைல பத்து மார்க் கூட வாங்காம பத்மா பெயிலாயிட்டா, நாங்க பாஸாகிட்டோம்.எங்களுடைய பல வருஷ படிப்புல, எதுக்குடா பாஸ் பண்ணினோம்னு நாங்க அழுதது அன்னைக்கு மட்டும்தான்.

காலேஜ் குமுதா

புழுக்கமான சீசனுக்கு உகந்தது ஷார்ட்ஸ்னா, படிப்பு வராத பையனுக்கு உகந்தது ஆர்ட்ஸ். ஏதாவது உள்ளூர் பொண்ண ரூட் விட்டு கல்யாணம் பண்ணிடலாம்னுதான் வெளியூர் ஆர்ட்ஸ் காலேஜ்ல  சீட் வாங்கிப் போனோம்.சும்மா சொல்லக்கூடாது, பள்ளிக்கூடம் மாதிரி பொண்ணுங்கள பிக்கப் பண்றது காலேஜ்ல கஷ்டமா இல்ல. ஒரு ஹாய் ஒரு பாய்க்கே ஃபிரண்ட் ஆயிடுறாங்க. ஒரு கிரெடிட் கார்டுலயும் நாலு கிரீட்டிங் கார்டுலயும் காதல கொண்டு வந்திடலாம். பட், பிரச்னை என்னன்னா, பொண்ணுங்கள பிக்கப் பண்ற மாதிரி பாதுகாக்க முடியல.

எல்லா பசங்களுமே கிரெடிட் கார்டு வச்சிருக்காங்க. சூப்பருக்கும் சுமாருக்கும் இடைப்பட்ட ஒரு வகையில இருக்கும் குமுதாவ காதலிச்சான் என் நண்பன். அந்த தெய்வீகக் காதல்ல, என் கேரக்டர் ஹனுமான்தான்னு நீங்களே அனுமானிச்சிருப்பீங்க. மிரட்டல், துரத்தல்,  கொஞ்சல், கெஞ்சல், கடத்தல், முடித்தல்னு எல்லா காதலர்களைப் போலவும் அவங்களுக்கும் நடந்து இப்ப குமுதாவும் ஹேப்பி... நண்பனும் ஹேப்பி.சரி, இவ்வளவு கதை சொன்னேன், அந்த நண்பன் யாருன்னு சொல்லலியே! அது வேற யாருமில்ல, உங்க நண்பராவும் இருக்கலாம்... உங்க வீட்ல ஒருத்தராவும் இருக்கலாம்... ஏன், அது நீங்க ளாவும் கூட இருக்கலாம். இனிய காதலர் தின வாழ்த்துகள்!                     
+2  ப்ரியா

எத்தனை பிளட் குரூப் இருக்குன்னு கூடத் தெரியாத எங்களை +1ல எந்த குரூப்புல சேர்த்து விட்டாங்கன்னு தெரியாமயே +2 வந்துட்டோம். லீவு முடிஞ்சு 12 ஆரம்பிச்சப்ப கிளாஸுக்கு வந்த ப்ரியா  முகத்துல அம்புட்டு அழகு. அது எங்க டிரீமா... இல்ல, ஏதாவது சிகப்பழகு கிரீமான்னு தெரியாம வகுப்பறையே வாயடைச்சு போச்சு. ப்ரியா மனசுல நான் துண்டை போடலாம்னு இருக்கிறப்பவே,  ‘மச்சான் அவ உன் தங்கச்சி மாதிரிடா’ன்னு என் நண்பன் குண்டைப் போட்டுட்டான்.

டால்கம் பவுடர்ல இருந்து துணி வெளுக்கப் போடுற பவுடர் வரை எல்லாத்தையும் குழப்பி முகத்துல அப்பிக்கிட்டு வந்த என் நண்பனுக்கு, +2 பொதுப் பரீட்சை பக்கத்துல வந்தும் காதல் சொல்ல துப்பு இல்ல. எப்படியோ கடைசி பரீட்சையப்ப காதலை சொன்னா, தன்னைக் கற்பழிக்க வந்த நம்பியார்கிட்டகே.ஆர்.விஜயா கண்ணீர் பெருக கையெடுத்து குடும்பிடுற மாதிரி, ‘என்னைய விட்டுடுங்கண்ணா’ன்னு நிக்குது. ப்ரியா மட்டும் அன்னைக்கு சரியா பேசியிருக்காட்டி இன்னைக்கு ஃப்ரீயா இருந்திருக்கமுடியாது.      

ஆல்தோட்ட பூபதி