தத்துவம் மச்சி தத்துவம்



என்னதான் நகைக்கடைக்காரர் பையன் நல்லா பரீட்சை எழுதினாலும் ‘ஹண்ட்ரட் மார்க்’தான் கொடுப்பாங்க. ஹால்‘மார்க்’ எல்லாம் கொடுக்க மாட்டாங்க!
- கால் மார்க்கும் அரை மார்க்கும் வாங்கி பார்டரில் பாஸ் செய்வோர் சங்கம்
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

ஸ்பீக்கரு...

பொதுக்கூட்டத்திற்கு தலைவர் வர
இயலாத காரணத்தால், அவரது புகைப்படத்தின்மீது தொண்டர்கள் தங்கள் செருப்புகளை வீசி ஆறுதலடைந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்..!’’
- சி.சாமிநாதன்,
கோயமுத்தூர்.

உங்க ஆபீஸ்ல அந்த ஆள் மட்டும் ஏன் தூங்காம சும்மா கொட்டாவி மட்டும் விட்டுக்கிட்டு இருக்காரு..?’’
‘‘அவருக்கு பார்ட் டைம் ஜாப்... அதான்!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

தலைவர் ரொம்ப  ஓவரா போறாரா... எப்படிச் சொல்றே?’’
‘‘கூட்டத்துல கைதட்டாத தொண்டர்களை கவனிக்க கண்காணிப்பு கேமராவும் வச்சிருக்காரே..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

எதுக்கு தலைவர் பக்கத்துலயே ரெண்டு குண்டர்கள் நிற்கிறாங்க..?’’
‘‘காலுல விழாமப் போறவங்களை கரெக்டா புடிச்சுத் தள்ளி விழ வைக்கத்தான்..!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

மேடையில ஒரு மைக் ஏன் தரையில கிடக்குது..?’’
‘‘தலைவர் கால்ல விழறவங்க என்ன முனகறாங்கன்னு தெரிஞ்சுக்கத்தான்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

இப்போ நாம எடுக்கப் போறது பத்தாம் நூற்றாண்டு கதைய்யா...’’
‘‘அவ்வளவு பழசான கதையையா சார் நாம் காப்பி அடிக்கப் போறோம்..?’’
- கே.ஆனந்தன், தர்மபுரி.