தத்துவம் மச்சி தத்துவம்



‘‘கபாலி குஷியா இருக்கானே... என்ன
விஷயம்?’’
‘‘திருடப் போன வீட்டுல
அவனோட திறமையைப் பார்த்து திருஷ்டி சுத்திப்
போட்டாங்களாம்..!’’
- பெ.பாண்டியன்,
கீழசிவல்பட்டி.

என்னதான் வாக்கு எண்ணிக்கை நடக்கற இடத்துல ரெண்டு கட்சிக்காரங்க கடுமையான ‘வாக்கு’வாதத்திலே ஈடுபட்டிருந்தாலும், அந்த வாக்குகளை எல்லாம் எண்ணிக்கையிலே சேர்த்துக்க மாட்ட £ங்க!
- வாக்கிங் போகும்போதும் வாக்குகளைப் பற்றியே யோசிப்போர் சங்கம்
- மு.மதிவாணன், அரூர்.

என்னதான் மின் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து நீக்கிட்டாலும், அதையெல்லாம் ‘பவர்கட்’னு சொல்ல முடியாது!
- கரன்ட் போன நேரத்தில் உட்கார்ந்து தத்துவம் யோசிப்போர் சங்கம்
- வைகை ஆறுமுகம், வழுதூர்.

‘‘கிச்சன்ல போய் ஏன் கணவர் கிட்ட மனு குடுக்கறே..?’’
‘‘சமையல் குறை தீர்ப்பு முகாம்
நடத்தறாரு..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘நர்ஸ்... நான் கை விட்ட கேஸ்களை டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க!’’
‘‘நான் கை விட்ட கேஸ்களை என்ன பண்ணட்டும், டாக்டர்..?’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘ஆபரேஷன் செய்யப் போறோமே... அந்தப் பேஷன்ட்டோட உடம்பு எப்படிய்யா இருக்கு..?’’
‘‘பயமாகவும், நடுக்கமாகவும் இருக்கு டாக்டர்...’’
- கே.ஆனந்தன், தர்மபுரி.

‘‘ஏன் கபாலி, உன் ஜாதகத்தைக் கொண்டுபோய் ஜோசியர்கிட்ட காட்டினியே... என்ன சொன்னாரு?’’
‘‘கூடிய சீக்கிரமே ஒரு வசதியான வீட்டுக்கு திருடப் போவேன்னு சொன்னாரு ஏட்டய்யா!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.