தமிழ், தெலுங்கு, இந்தி என்று டாப் கியரில் தடதடத்துக் கொண்டிருக்கிறது தமன்னா கேரியர். ‘வீரம்’ ரிலீஸ் பரபரப்பின் நேரம் பார்த்து தமன்னாவுக்கு ஜுரம். படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வரவிருந்த பிங்க் நிற தேவதையை நேரில் தரிசிக்கலாம் என காத்திருந்தால், பாழாய் போன காய்ச்சல் வந்து தமன்னாவை மும்பையிலேயே முடக்கிப்போட்டுவிட்டது. ‘‘ஹாய் தமன்னா ஹவ் ஆர் யூ?’’ என்று செல் வழி நலம் விசாரித்தால், உதடுகள் தந்தி அடிக்க, ‘‘ நாட் வெல்... பட் யூ ஆஸ்க் மீ கொஸ்டின்’’ என தயாரானார்.
‘‘ ‘வீரம்’ படத்தில் நடித்த அனுபவம் எப்படி?’’
‘‘வெரி நைஸ். இதில் மீனாட்சி என்கிற கேரக்டரில் நடிச்சிருக்கேன். ‘தல’ ஜோடியா நடிச்சது புது அனுபவம். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு ரசிகையா அஜித்தை ரொம்பவே ரசிச்சேன். பெரிய ஸ்டார் என்கிற பந்தாவெல்லாம் தலையில் தூக்கி வச்சிக்காம, வெரி சிம்பிளா பழகுகிறார். ஸோ ஸ்வீட். அவர் ரொம்ப ஜாலியான டைப்பும் கூட! அவர் அடிக்கிற கமென்ட்களுக்கு யூனிட்டே சிரிச்சு மகிழும். அவரோட ரியல் கேரக்டரை பிரதிபலிக்கிற மாதிரியே விநாயகம் என்கிற கேரக்டரில் பின்னி எடுத்திருக்கார்.
இதுக்கு முந்தைய படங்களில் கோட் சூட்ல பார்த்தாலும் நச்சுன்னு இருந்தார். இந்தப் படத்தில் வேட்டி சட்டையில் அவர் நடந்து வர்ற அழகைப் பார்த்தால் ஊர் கண்ணே பட்டுடும். இதுவரை வந்த அஜித் படங்களிலேயே இது வேற மாதிரி இருக்கும். பொழுதுபோக்கு அம்சத்தோட குடும்பத்தோட போய் பார்க்கிற ஒரு கதையை சிவா சார் அருமையா இயக்கியிருக்கார்.’’
‘‘பொதுவா பெரிய ஹீரோ படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்காதே?’’
‘‘உண்மைதான். ஆனா, என்னோட அதிர்ஷ்டம். இந்தப் படம் அப்படி இல்லை. என்னை மையமா வச்சித்தான் கதையே நகரும். அப்படி ஒரு முக்கியமான ரோல். படம் பார்த்த பிறகு தமன்னா நல்லா பண்ணியிருக்காங்கன்னு கண்டிப்பா நீங்க பாராட்டுற மாதிரி இருக்கும்னு நான் நம்புறேன். படத்தோட பிரஸ் மீட்டுக்கு வந்து இந்த சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஹை ஃபீவர் வந்து எல்லாத்தையும் கெடுத்துடுச்சு!’’
‘‘பிஸியாதான் இருக்கீங்க... ஆனாலும் தமிழ் சினிமாவில் பார்த்து ரொம்ப நாளாச்சே?’’‘‘கரெக்ட். வீரத்தில் எனக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்னு சொன்னேன்ல... இந்த மாதிரியான கேரக்டருக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். கமிட் பண்ணணும்னு நினைச்சிருந்தா இடைப்பட்ட காலத்தில் பத்து படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கியிருப்பேன். என்னோட நோக்கம், பணம் சம்பாதிச்சிக் கொடுக்கிற படம் மட்டுமில்ல. பாராட்டு கிடைக்கிற மாதிரியான கதாபாத்திரங்களும்தான்.
‘சாந்த் ஸா ரோஷன் செஹரா’ என்கிற இந்திப் படம் மூலமா நான் அறிமுகமாகி யிருந்தாலும் மற்ற மொழிப் படங்களை விட தமிழ்ப் படங்களில் நடிப்பதைத்தான் நான் விரும்புறேன். இனிமே கேப் விழாம பார்த்துக்குவேன். இப்போ நல்ல நல்ல கதைகள் வந்திருக்கு. இந்தி, தெலுங்கு கமிட்மென்ட்களை முடிச்சிட்டு தமிழில் மறுபடி பிஸியாகிடுவேன்...’’ ‘‘இப்போ என்ன படங்கள் பண்ணிக்கிட்டு இருக்கீங்க...’’
‘‘ ‘ஹிம்மத்வாலா’ படத்துக்குப் பிறகு ‘இட்ஸ் என்டர்டெயின்மென்ட்’, ‘ஹம்ஷக்கல்ஸ்’னு ரெண்டு இந்திப் படங்களில் நடிச்சிட்டு இருக்கேன். ஷாஜித் - ஃபர்ஹத் இயக்கும் ‘இட்ஸ் என்டர்டெயின்மென்ட்’ படத்தில் அக்ஷய் குமார் ஜோடியா நடிக்கிறேன். 90 சதவீதம் பாங்காக்கிலும் பத்து சதவீதம் இந்தியாவிலும் நடக்கிற கதை. சயீப் அலிகான் ஜோடியா ‘ஹம்ஷக்கல்ஸ்’ படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். கேரக்டர் பற்றி இப்போதைக்கு விரிவா சொல்ல முடியாது. ஜூன் மாசம் படம் ரிலீஸ் ஆகும்னு நினைக்கிறேன்.
தெலுங்கில் சீனு வைட்லா இயக்கத்தில் மகேஷ்பாபு ஜோடியா ‘ஆகடு’ படத்திலும் ராஜமௌலியோட ‘பாகுபலி’ படத்தில் அவந்திகா என்கிற கேரக்டரிலும் நடிக்கிறேன். இப்போ நான் நடிச்சிக்கிட்டிருக்குறது எல்லாமே மெகா பட்ஜெட் படங்கள். எந்தக் குழப்பமும் கெட்ட பேரும் வந்துடக்கூடாது என்பதற்காக கரெக்டா கால்ஷீட் பிரிச்சுக் கொடுத்து ஷெட்யூலை ஸ்மூத்தா வச்சிக்கிறேன். இடைவிடாத ஷூட்டிங்கும் அலைச்சலும்கூட எனக்கு ஜுரம் வருவதற்கு காரணமா இருக்கலாம்.’’
‘‘விஜய், அஜித் இருவரில் உங்க ஃபேவரிட் யார்?’’
‘‘அதானே... என்னடா இவ்வளவு நேரம் கலாட்டா கேள்வி வரலையேன்னு நினைச்சேன். ஆரம்பிச்சுட்டீங்களா உங்க வம்பை. இந்த லிஸ்ட்டில் சூர்யா, கார்த்தி ரெண்டு பேரையும் விட்டுட்டீங்களே? வழக்கமான பதில் என்றாலும் நான் சொல்றதுதான் உண்மை. ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனித்துவம் இருக்கு. அதனால இந்த நாலு பேருமே என்னோட ஃபேவரிட்தான். ரொம்ப டயர்ட் ஆகிடுச்சு. இதோட போதுமே!’’ஸாரி, டு டிஸ்டர்ப் யூ தமன்னா!
அமலன்